சேதுபதியின் காதலி

சேதுபதியின் காதலி, எஸ்.எம். கமலா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 150ரூ. கி.பி. 1710 முதல் 1728 வரை சேது நாட்டை ஆண்ட முத்து விசய ரகுநாத சேதுபதியின் வாழ்வியல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட வரலாற்று புதினம். மன்னரது பண்பு நலன், கொடை, வீரம், கலைப்பணிகள் ஆகியவற்றை இப்புதினத்தின் வழியாக புலப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் எஸ்.எம். கமலா. நன்றி: தினத்தந்தி, 14/9/2016

Read more

திப்புவின் வாள்

திப்புவின் வாள், பகவான் எஸ். கித்வானி, தமிழில் வெ. ஜீவானந்தம், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 336, விலை 265ரூ. ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திப்பு சுல்தான். அவர் 1782 முதல் 1799 வரை மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டபோது நடந்த சம்பவங்கள், நாடு பிடிக்கும் ஆசையில் களமிறங்கிய கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்ப்பதற்கு சந்தித்த சவால்கள், வெற்றிகள், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட “தி சுவார்டு ஆஃப் திப் சுல்தான்’ என்ற ஆங்கில வரலாற்று நாவலின் மொழி பெயர்ப்பாக […]

Read more

இளவரசியின் சபதம்

இளவரசியின் சபதம், அய்க்கண், திருவரசு புத்தகநிலையம், விலை 60ரூ. சங்க காலத்தில் ஒரு பெண்ணின் சபதம் பற்றிய ஒரு வரலாற்று நாவல். இதனை செய்தியாகவும், உவமையாகவும், சுவையோடும் நூலாசிரியர் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.   —-   மலரும் மனங்கள், கலைமாமணி ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன், கங்கை புத்தக நிலையம், விலை 100ரூ. ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை மீது ஈடுபாடு கொண்ட நூலாசிரியர், ஆன்மிகச் சிந்தனைகள், கடவுள் நம்பிக்கைக் கொள்கையை எளிய தமிழில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

வெற்றித் திருநகர்

வெற்றித் திருநகர், அகிலன், தாகம் பதிப்பகம், பக். 528, விலை 350ரூ. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு‘’ என்பதை தனது வாழ்க்கையின் சீரிய லட்சியமாகக் கொண்ட ஓர் உத்தமனின் (விசுவநாத நாயக்கன்) கதையைப் படைத்துள்ளார் நூலாசிரியர். கல்லில் வடிக்கப்பட்ட அவன் உருவைக் காண விரும்புவர் இன்றும் அவனை மதுரைமீனாட்சி அம்மன் ஆலயத்தில் சந்திக்கலாம்! பெண்மைக்கு உரிய எல்லாச் சிறப்பும் பெற்றிருந்தாள் கதை நாயகி இலட்சுமி. வீரன் ஒருவனின் அன்பு நெஞ்சத்தையும் தனக்கே உரிமையாகப் பெற்றிருந்தாள். ஆயினும் தந்தையின் சூழ்ச்சிக் கொடுமைகளைத் தடுக்கவோ மனப்போக்கைத் திருத்தவோ முடியாத […]

Read more

ஒரு வீணையின் விசும்பல்

ஒரு வீணையின் விசும்பல், தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. முஸ்லிம் கதை மாந்தர்களைக் கொண்ட, சிறந்த கதைகள் அடங்கிய நூல். ‘ஐரோப்பாவின் நோயாளி’ என அழைக்கப்பட்ட துருக்கி, முதல் உலகப் போரில் மல்யுத்த வீரனாக எழுந்து நின்றதைச் சொல்லும், ‘கல்விப்போலி போர்க்களம்’ என்ற கதை, ஒரு சிறந்த சரித்திர ஆவணம். கதைக்கான கருக்கள், பெரும்பாலும் உண்மை நிகழ்வுகளில் இருந்தே எடுத்துக் கையாளப்படுகின்றன என்று, நூலாசிரியர் தன் முன்னுரை யில் கூறியுள்ளார். – எஸ்.குரு. நன்றி: தினமலர், 18/6/2016.

Read more

கிளாரிந்தா

கிளாரிந்தா, அ. மாதவையா, தமிழில் சரோஜினி பாக்கியமுத்து, அடையாளம், பக்.284, விலை ரூ.230. இந்த புதினம், தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் வரலாற்று நாவலாகும். 1978-இல் முதல் பதிப்பாக கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் சார்பில் இந்நாவல் வெளியிடப்பட்டது. அதன் மறுபதிப்பு இந்நூல். கி.பி.1746-ஆம் ஆண்டு தொடங்கி 1806-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், கர்நாடக நவாபின் வாரிசு மயூஸ்கான் தலைமையில் இந்தியப் படைக்கும், என்ஜினியர் பராடிஸ் தலைமையில் பிரெஞ்சுப் படைக்கும் நடந்த கடும் போருடனும், தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரின் ஆட்சியின் பின்னணியில், “கிளாவரிந்தாபாய்’ […]

Read more

மரக்கலம்

மரக்கலம், ஸ்ரீமொழி வெங்கடேஷ், ஓவியம் காணிக்கைராஜ், ஸ்ரீமொழி பப்ளிகேஷன், விலை 200ரூ. வாஸ்கோடாகாமா கள்ளிக்கோட்டை துறை முகத்தில் கால் வைத்த நாளே, இந்திய மண்ணின் மீதான ஆதிக்கத்தின் துவக்கம் என தெளிவுபடுத்துகிறது இந்நூல். போர்ச்சுக்கீசியர்கள் இந்திய மண்ணை கைக்கொள்ள சுமார் 102 ஆண்டுகள் போராடி, கள்ளிக்கோட்டை மக்களை முழுமையாய் வெல்ல முடியாமல் கோவாவை தங்கள் ஆதிக்கத்திற்கு நிலை நிறுத்திக்கொண்டு நாடு திரும்பியவர்கள். இவர்களுக்கு பின்புதான் கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்க வரலாற்றை துவக்குகிறது. அந்நியர்களுக்கு எதிரான கள்ளிக்கோட்டை மன்னர் மானவர்மர் சாமுத்திரியின் வலுவான எதிர்ப்பின் கூர்மை […]

Read more

விடுதலை

விடுதலை, சமன் நாஹல், தமிழில் பிரேமா நந்தகுமார், சாகித்திய அகாதெமி, பக். 384, விலை 200ரூ. புகழ்பெற்ற எழுத்தாளர் சமன் நாஹல், ‘ஆஸாதி’ என்ற பெயரில் எழுதிய நாவலின் தமிழ் வடிவம். சுதந்திரப் போராட்ட காலத்திலும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த தேசப் பிரிவினையின்போதும் உருவான அரசியல் மாற்றங்களைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்டிருக்கும் இந்த நாவல், சாகித்திய அகாதெமி விருது பெற்றது. நாட்டை பிளவுபடுத்தியதால் விளைந்த ரணங்களையும் வேதனைகளையும் கதையினூடே காட்சிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். சுதந்திரத்துக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் லாலா கன்ஷிராம் என்ற தானிய […]

Read more

கடல்களும் கண்டங்களும்

கடல்களும் கண்டங்களும், வாண்டுமாமா, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ. அறிவியல் நூல்களை எழுதுவதில் புகழ் பெற்ற “வாண்டுமாமா” எழுதிய நூல் “கடல்களும் கண்டங்களும்”. “உலகம் உருண்டையானது அல்ல; தட்டையானது” என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அஞ்சா நெஞ்சம் படைத்த சிலர் கடலின் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல் கப்பலில் பயணம் செய்து, புதிய நாடுகளைக் கண்டுபிடித்தனர். அவர்களில், அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு கடல் மார்க்கத்தை கண்டு பிடித்த வாஸ்கோடகாமா, ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்த கேப்டன் குக், கனடாவை கண்டுபிடித்த ஜான் கபாட் உள்பட 14 […]

Read more

ராணி மங்கம்மாள்

ராணி மங்கம்மாள், (சரித்திர நாவல்), நா. பார்த்தசாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. தென்னாட்டின் ஒரே பெண்ணரசியாக, வீரதீர பெண்மணியாக வாழ்ந்து வரலாற்றில் இடம் பிடித்து இன்றளவும் மக்கள் மனதில் அபிமானத்தைப் பிடித்திருப்பவர் ராணி மங்கம்மாள். கணவனை இழந்த பிறகு தன் திறமையாலும், புத்திசாதுர்யத்தாலும் பதினெட்டு ஆண்டு காலம் சிறப்பாக மதுரையை ஆண்ட அவருயை தீரத்தை அழகாக எடுத்துரைக்கிறது ‘ராணி மங்கம்மாள்’ வரலாற்று நாவல். மேலும் ராணி மங்கம்மாள் செய்த தான தருமங்களையும் எடுத்துரைக்கிறது. மறவர் நாட்டு மன்னர் கிழவன் […]

Read more
1 2 3 4 6