குறுக்கு வெட்டு

குறுக்கு வெட்டு, சிவகாமி, அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை 170ரூ. திருமண உறவு கடந்த காதல், சாகசமா துரோகமா அல்லது ஏமாற்றங்கள், புறக்கணிப்புகள், போதாமைகள், சலிப்புகள், திருப்தியின்மை, பழித்தீர்ப்பு, சவால்கள் போன்றவற்றின் புறவிளைவா? அது வாழ்வின் தென்றலா, புயலா? மரண விழைவா, உயிர்த்தல் விழைவா? உணர்வுக்கும் அறிவுக்குமான போராட்டத்தை உடலரசியல், பாலரசியல் ஆகிய இரு கத்திகளின் மீது மொழியை நடக்க விட்டிருக்கிறார் சிவகாமி. தீக்குச்சிக்கும் மருந்துப்பட்டைக்குமிடையில் உறைந்திருக்கும் அமைதியான நடிப்பை உரையாடல்களால் உரசி மூட்டுகிறது இந்நாவல். பேசப்படாத கதைக்களத்தைப் பெண் மொழியில் பேசுகிறது. நன்றி: […]

Read more

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம், மயிலன் ஜி சின்னப்பன், உயிர்மை பதிப்பகம், விலை: ரூ.250 இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவரும், மூளை-தண்டுவட அறுவைச்சிகிச்சை மருத்துவருமான மயிலன் ஜி சின்னப்பன் எழுதியிருக்கும் மருத்துவத் துறை சார்ந்த நாவல் இது. இளம் மருத்துவர் ஒருவரின் தற்கொலையில் தொடங்குகிறது இந்த நாவல். அந்த இறப்பைப் பற்றி மருத்துவத் துறையின் வெவ்வேறு படிநிலைகளில் பணிபுரியும் வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்கிறார்கள். ஒன்றுக்கொன்று தொடர்புடைய, ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரான இந்தக் கதைகளால் துப்பறியும் நாவலுக்கான பாணியை இந்நாவல் பெற்றுவிடுகிறது. அந்த மர்மத் தன்மையினூடாக […]

Read more

ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ

ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ, அதுல்ய மிஸ்ரா, ரூபா வெளியீடு, விலை: ரூ.295 சேலத்தில் ஒரு நடுத்தரவர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் போஸ், ஐஏஸ் தேர்வில் வெற்றி பெற்று மணிப்பூர் மாநிலத்தில் பணியாற்றுகிறார். மணிப்பூர்-மியான்மர் எல்லைப் பகுதியில் மோரே என்ற சிற்றூரில் அன்றைய பர்மாவிலிருந்து வந்து குடியேறிய தமிழ் அகதிகள் பெருமளவில் வசித்துவருகின்றனர். திருமணமாகாத ‘தாத்தா’ என்று அழைக்கப்பட்டுவரும் தமிழர் ஒருவர், தொடர்ந்து செடிகளை வளர்த்து பொட்டல் காடுகளை உருமாற்றுகிறார். இவரைச் சந்தித்த பிறகு அந்த அதிகாரியிடம் ஏற்பட்ட மனமாற்றம் எத்தகைய மாற்றத்தை உருவாக்கியது என்பதை நாவலாக்கியிருக்கிறார் தமிழக ஐஏஎஸ் அதிகாரியான […]

Read more

என் சரித்திரம்

என் சரித்திரம், உ.வே.சாமிநாதையர், அடையாளம் வெளியீடு, விலை: ரூ.400. புத்துயிர்ப்பு, லியோ டால்ஸ்டாய், அடையாளம் வெளியீடு, விலை: ரூ.395   டால்ஸ்டாயின் உலகப் புகழ்பெற்ற படைப்புகளுள் ஒன்றான ‘புத்துயிர்ப்பு’ நாவல், தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் தன்வரலாற்று நூலான ‘என் சரித்திரம்’ என இரண்டு முக்கியமான புத்தகங்களை மலிவு விலைப் பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறது ‘அடையாளம்’ பதிப்பகம். விலை குறைவு என்பதற்காகத் தயாரிப்பில் ஏதும் சமரசம் இல்லை. சுமார் 800 பக்கங்கள் கொண்ட இரண்டு புத்தகங்களுக்கும் தலா ரூ.400 என்பதாக விலை நிர்ணயித்திருக்கிறார்கள். நன்றி: தமிழ் இந்து, […]

Read more

நீர்வளரி

நீர்வளரி, கோணங்கி, அடையாளம், விலை 600ரூ. தமிழ் சொல்கதை மரபின் லட்சணங்கள் அனைத்தையும் சூடிக்கொண்ட நவீன கதைசொல்லி கோணங்கி. கரிசலின் உணர்வு மூட்டங்களை மந்திர மொழியில் சொன்ன சிறுகதைக் கலைஞர். ‘பாழி’, ‘பிதிரா’, ‘த’ உள்ளிட்ட நாவல்களைத் தொடர்ந்து ‘நீர்வளரி’ நாவலை இப்போது வெளியிட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது. ஒரு கதைசொல்லியை உங்களிடம் கண்டுகொண்ட பின்னணி, காலத்தைச் சொல்லுங்கள்… விளாத்திகுளத்திலிருந்து வந்த ச.ஜோதிவிநாயகத் தின் ‘தேடல்’ சிற்றிதழில் ‘கருப்பு ரயில்’ சிறுகதை பிரசுரமானது. அப்போது என் வயது இருபது. அதைப் படித்து உற்சாகமான […]

Read more

மனிதனல்ல மகான்

மனிதனல்ல மகான், டி.எஸ்.பவுணன், காவ்யா, பக். 128, விலை 130ரூ. மனிதன் எப்போதும் மனிதனாக வாழ்வது இல்லை. அவனுள் நல்லதும், கெட்டதும் நிறைந்திருக்கிறது. நல்ல தன்மைகள் மிகுந்துள்ள மனிதன் தன் மனித நிலையிலிருந்து உயர்ந்து, ‘மகான்’ எனும் உயர்ந்த நிலையை அடைகிறான். அத்தகைய உயர்ந்த நிலையை அடையும் சாதாரண மனிதனின் கதை தான் இந்த நாவல். நாவலின் தலைமை மாந்தர் வசந்தன். சித்தியின் அடியிலிருந்து தப்பித்து, வீட்டை விட்டு சிறுவயதிலேயே ஓடி வந்த வசந்தனின் வாழ்வில், உறவுகள் எப்படி மலர்ந்தன? அவன் எவ்வாறு மகான் […]

Read more

தமிழ் நாவல்கள்

தமிழ் நாவல்கள், பொன்னீலன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.232, விலை ரூ.220. உலகில் ஏற்படும் மாற்றங்கள் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மக்களின் மனநிலை, பண்பாடு, ஆதிக்கத்தன்மை, அடிமைத்தளை, பொருளாதாரநிலை, உணர்ச்சிகள், ரசனைகள், பழக்க, வழக்கங்கள் எல்லாவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தமிழ் நாவல்களின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், பன்முகத்தன்மைகளுக்கும் கூட இந்த மாற்றங்கள் காரணமாக அமைந்துவிடுகின்றன. இந்த அடிப்படையில் தமிழில் தோன்றிய முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் தொடங்கி, சமகாலத் தமிழ் நாவல்கள் வரை இந்நூல் அறிமுகம் செய்வதுடன், நாவல்களின் உள்ளடக்கம், அவை […]

Read more

தமிழ்வாணனின் மர்மநாவல்கள் பாகம் 3

தமிழ்வாணனின் மர்மநாவல்கள் பாகம் 3, தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலை 650ரூ. தற்கால துப்பறியும் நாவலாசிரியர்களுக்கு முன்னோடியாகத் துப்பறியும் நாவல்களில் ஒரு புதுமையையும், விறுவிறுப்பான நடையையும் புகுத்தி ஏராளமான நாவல்களைப் படைத்த பெருமை. தமிழ்வாணனுக்கே உண்டு. அதிலும், ‘சங்கர்லால்’ என்ற பெயர் அவர் மூலமே பிரபலமானது. இந்நுாலில், ‘கடலில் மர்மம், சிம்லாவில் கண்ட அழகி, இருள், கைதி நம்பர் 811’ ஆகிய நான்கு வித்தியாசமான மர்மக் கதைகள் உள்ளன. கப்பலில் கடத்தப்பட்ட தங்கக் கட்டிகளைக் கண்டுபிடிக்கும் துப்பறியும் போலீஸ் சுந்தரேசன் மூலம் கப்பல் பற்றிய […]

Read more

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம் 3)

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம் 3), தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 844, விலை 650ரூ. தற்கால துப்பறியும் நாவலாசிரியர்களுக்கு முன்னோடியாகத் துப்பறியும் நாவல்களில் ஒரு புதுமையையும், விறுவிறுப்பான நடையையும் புகுத்தி ஏராளமான நாவல்களைப் படைத்த பெருமை. தமிழ்வாணனுக்கே உண்டு. அதிலும், ‘சங்கர்லால்’ என்ற பெயர் அவர் மூலமே பிரபலமானது. இந்நுாலில், ‘கடலில் மர்மம், சிம்லாவில் கண்ட அழகி, இருள், கைதி நம்பர் 811’ ஆகிய நான்கு வித்தியாசமான மர்மக் கதைகள் உள்ளன. கப்பலில் கடத்தப்பட்ட தங்கக் கட்டிகளைக் கண்டுபிடிக்கும் துப்பறியும் போலீஸ் சுந்தரேசன் […]

Read more

கந்தன் கதை

கந்தன் கதை, இரவிக்குமார், அவனருளாலே பதிப்பகம், விலை 450ரூ கந்தபுராணம் என்ற பெயரைக் கேட்டவுடன், புராணம் எல்லாம் நமக்கு எதற்கு என்று தள்ளிவிடும் இளைய தலைமுறையினரும், கந்தனின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், இந்தப் புத்தகம், நாவல் வடிவத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. கந்தபுராணத்தில் விடுபட்டுப் போன பக்கங்களைக் கற்பனை கலந்து, அவற்றை கந்தபுராணத்துடன் இணைத்து இந்த நாவலை ஆசிரியர் உருவாக்கி இருக்கிறார். இந்த நாவலில் ஆனமீகக் கருத்துகளை சொல்வதோடு, அவற்றை நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, சம்பவங்களைச் சொல்லி இருப்பதால் படிக்க ருசிகரமாக […]

Read more
1 8 9 10 11 12 66