ஷேடோ ஆர்மீஸ்: ஃபிரின்ஜ் ஆர்கனைசேஷன்ஸ் அண்ட் புட் சோல்ஜர்ஸ் ஆப் இந்துத்துவா

ஷேடோ ஆர்மீஸ்: ஃபிரின்ஜ் ஆர்கனைசேஷன்ஸ் அண்ட் புட் சோல்ஜர்ஸ் ஆப் இந்துத்துவா, திரேந்திர கே., ஜாகர்னாட், விலை: ரூ.499   இந்துத்துவா தத்துவத்தைப் பரப்புவதற்காக 1925-ல் தொடங்கப்பட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு, அதன் அரசியல் பிரிவாக உருவெடுத்த இந்து மகாசபா, ஜனசங்கம், பாஜக போன்றவற்றின் வளர்ச்சிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த அமைப்புகள் எவ்வாறு உதவின என்ற வரலாற்றைக் கூறும் நூல் இது. சனாதன் சன்ஸ்தா, பஜ்ரங் தள், இந்து யுவ வாஹினி, அபிநவ பாரத், ஸ்ரீராம் சேனை, ராஷ்ட்ரீய சீக்கிய சங்கட், இந்து ஐக்கிய வேதி, போன்ஸ்லே […]

Read more

நடுகல்

நடுகல், தீபச் செல்வன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. நினைவுகளை இழப்பதற்கில்லை தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து முள்ளிவாய்க்கால் ஊடாக, ஈழத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் இக்காலத்தையும் உட்படுத்திய‌ முப்பது ஆண்டு காலவெளியில் பயணிக்கிறது தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல். இதுவே ஈழ மக்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்திய காலம், ஈழ மக்களை ஏதிலிகளாய் அலையச் செய்த காலம், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏந்தச் செய்த காலம். இக்காலத்தினூடே புலிகள் இயக்கம், ஈழ இயற்கை வளம், பண்பாட்டுக் கலாச்சாரம் போன்றவற்றைப் பேசிச் செல்கிறது இந்நாவல். போர் வாழ்க்கையை, முள்வேலி முகாம்களின் […]

Read more

இராமானுஜர் – எளியோரின் ஆச்சாரியர்

இராமானுஜர் – எளியோரின் ஆச்சாரியர், கன்யூட்ராஜ், தாமரை பப்ளிகேஷன்ஸ், பக். 211; விலை ரூ.175. ஸ்ரீ ராமானுஜரை சமயவாதி என்பதைவிட, சீர்திருத்தவாதி என்று குறிப்பிடப்பட்டு ஆராயும் போக்கு தற்காலத்தில் அதிகரித்துள்ளது. முதன்மையாகவும் முற்றிலுமாகவும் அவர் சமயவாதியே. சீர்திருத்தம் அவர் தொண்டில் ஒரு பகுதியே. அவரது சமயநெறிச் சிந்தை மூலமே முதன்மையாக நினைவுகூறப்படுகிறார். சமயத்தைப் பிரித்து ராமானுஜரை அடைந்துவிட முடியாது என்பதை அவரது வாழ்வை ஊன்றிப் பார்ப்பவர்கள் அறிவர். இந்த நூலும் ஒருவகையில் அதனை உறுதிப்படுத்துகிறது. சமயத் துறவிகள் என்றாலே சமூக வாழ்க்கையிலிருந்து வெளியேறி கண்காணாது […]

Read more

வேர்களுக்கு வெளிச்சம்

வேர்களுக்கு வெளிச்சம், சென்னை மாநாகராட்சி முன்னாள் மேயர் சைதை சா.துரைசாமி, தொகுப்பு ஆர்.பி.சங்கரன், மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்.அகடாமி, விலை 25ரூ(மலிவு விலை பதிப்பு) பன்முகத்திறன் கொண்ட எம்.ஜி.ஆரை இன்றைக்கும் தெய்வமாகப் போற்றி வரும் பல லட்சக்கணக்கான உள்ளங்கள் உலகம் முழுவதும் வசித்து வருகின்றனர். தொடக்க காலத்தில் இருந்தே எம்.ஜி.ஆரின் வெற்றிக்காக உடல், பொருள், ஆவியை தியாகம் செய்தவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் மனித நேய அறக்கட்டளை செய்திருக்கும் முதல் கட்டப்பதிவுதான் இந்த நூல். எம்.ஜி.ஆரின் புகழை பரப்பி வந்த ஏடுகள் மற்றும் […]

Read more

தமிழக நாடார்கள்

தமிழக நாடார்கள், இராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழில் எஸ்.டி.ஜெயபாண்டியன், மீள்பார்வை பக்தவத்சல பாரதி, வெளியீடு அடையாளம், விலை 480ரூ. நாடார்கள் அரச பரம்பரை சேர்ந்தவர்கள் என்று ஆங்காங்கே கூறப்பட்டு இருந்தாலும் இந்த ஆராய்ச்சி புத்தகத்தின் நோக்கம் அது அல்ல. தனது ஆராய்ச்சி பட்டத்துக்காக நாடார் சமுதாயத்தை பற்றி ஆய்வு மேற்கொண்ட ஆசிரியர் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து நாடார்கள் பற்றிய ஆய்வை தொடங்கி இச்சமூகத்தின் முன்னேறத்தை அழகாக தொகுத்து வழங்கி உள்ளார். நாடார்ஸ் ஆப் தமிழ்நாடு த பொலிடிகல் கல்ச்சர் ஆப் எ கம்யூனிடி […]

Read more

உலக ஒழுங்கின் மறு ஆக்கம் நாகரிகங்களின் மோதல்

உலக ஒழுங்கின் மறு ஆக்கம் நாகரிகங்களின் மோதல், சாமுவேல் பி.ஹண்டிங்டன், அடையாளம், பக்.570. விலை ரூ.540. சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் மாறுதல்களை விளக்கும் நூல். ரஷியாவின் வீழ்ச்சிக்கு முன்பு உலகம் அமெரிக்கா, ரஷியா ஆகிய இருநாடுகளின் பின் அணி திரண்டது. கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் தனியுடமை, ஆளும் சக்திகளின் கருத்துகளுக்கும், பொதுஉடமை, உழைக்கும் மக்களின் கருத்துகளுக்கும் இடையிலேயே இருந்தன. சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு இம்மாதிரியான கருத்தியல் முகங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மத, இன, […]

Read more

மேக்சிமம் சிட்டி

மேக்சிமம் சிட்டி: பாம்பே லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட், சுகேது மேத்தா, பெங்க்வின் புக்ஸ் இந்தியா, விலை: ரூ.399 இந்தியப் பொருளாதாரத்தின் தலைநகரமான மும்பை இன்றைய ஆஸ்திரேலியாவைவிட அதிகமான மக்கள் வசிக்கும் ஒரு பெருநகரமும்கூட. பலதரப்பட்ட மக்கள் பின்னிப் பிணைந்து வாழும் நகரம். அத்தகைய நகரத்தில் ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, பின்னர் பதின்பருவத்தில் அங்கிருந்து வெளியேறி உலகின் தலைசிறந்த நகரங்கள் பலவற்றிலும் வாழ்ந்து 21 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிவந்த ஓர் இளைஞனின் பார்வையில், மும்பை நகரமும் அதன் உயிரோட்டமும் எவ்வித […]

Read more

சங்கீத சிகரம் செங்கோட்டை எஸ்.ஜி.கிட்டப்பா

சங்கீத சிகரம் செங்கோட்டை எஸ்.ஜி.கிட்டப்பா, செ.திவான், அட்சரம் பதிப்பகம், விலை: ரூ.130, கந்தர்வ கான கிட்டப்பா கிராமபோன் இசைத்தட்டுகள் வெளிவந்த காலத்தில் இசை ரசிகர்களிடம் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் கிட்டப்பா. சங்கரதாஸ் சுவாமிகளிடம் இசைப் பயிற்சி பெற்று இசைநாடக மேடைகளில் கதாநாயகனாக உலாவந்தவர், உச்ச ஸ்தாயியில் பாடுவதில் வல்லவர், கதர் உடுத்தி தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர், கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாளை இசையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் என்று பல பெருமைகள் அவருக்கு உண்டு. நெல்லையைச் சேர்ந்த வரலாற்றறிஞர் செ.திவான், தன் மண்ணில் பிறந்த மாபெரும் இசைக்கலைஞருக்குச் […]

Read more

மெய்ப்பொருள் கண்டேன்

மெய்ப்பொருள் கண்டேன், எஸ்.ஆர்.சுப்ரமணியம், பழனியப்பா பிரதர்தஸ், பக்.348, விலை ரூ.320. சுதந்திரப் போராட்ட வரலாற்றை மிக எளிமையாக, சுவையாகச் சொல்லும் நூல். கி.மு.325 இல் மாசிடோனியா மன்னன் அலெக்சாண்டர் சிந்துசமவெளியைத் தாண்டி படையெடுத்து வந்து இந்திய மன்னர்களைத் தோற்கடித்தது, கி.பி.1175 இல் முகமது கோரி படையெடுத்து, அதற்குப் பிறகு ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் ஆக்கிரமித்தது என அடிமையான வரலாற்றை ஒருபுறம் இந்நூல் சொல்கிறது. இன்னொருபுறத்தில் அடிமைத் தளையை எதிர்த்து வேலூர் கலகம், 1857 சிப்பாய் கலகம், திப்புசுல்தான் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்தது. தீரன்சின்னமலை, வேலுநாச்சியார், வீரபாண்டிய […]

Read more

முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு

முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு, அ.சவரிமுத்து, சங்கர் பதிப்பகம், பக். 240, விலை 225ரூ.   முத்தரையர் என்ற பழம்பெரும் சமூகத்தின் தொடக்கக் காலம் முதல் இன்று வரை, பல்வேறு ஆய்வுகள் செய்து எழுதப்பட்டுள்ளது, முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு எனும் இந்நுால். முத்தரையர் என்பதற்கு சேர, சோழ, பாண்டியரை அடக்கி, ஓர் கொடையின் கீழ் ஆண்ட அரசர் முத்தரையர் என்றும், மூன்று + தரையர் = முத்தரையர் என்றும் விளக்கம் கூறுவர். நுாலின் முகப்பிலேயே, இந்த நுால் எந்த சமுதாயத்திற்கும் எதிராக எழுந்த […]

Read more
1 21 22 23 24 25 104