காலா பாணி

காலா பாணி, டாக்டர் மு.ராஜேந்திரன், அகநி, விலைரூ.650 ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்ட சிவகங்கைச் சீமையின் வரலாற்றை – குறிப்பாக நாடு கடத்தப்பட்ட போராளிகளைப் பற்றியது இந்த நுால். கிழக்கிந்தியக் கம்பெனி தமிழகத்துப் போராளிகளை எல்லா வகைகளிலும் ஒடுக்கியும், கொன்று குவித்தும், நாடு கடத்தியும் செயல்பட்ட நிகழ்வுகளை வரலாற்றுப் பின்னணியில் விவரிக்கிறது. சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையண்ணத் தேவர் உள்ளிட்ட 73 போராட்ட வீரர்களைக் குற்றவாளிகளாகக் கருதி காலா பாணியாக ஆக்கிய கதையை விளக்குகிறது. காலா பாணி என்ற சொல்லுக்குக் கறுப்புத் தண்ணீர் என்று […]

Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், விலை 50ரூ. ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் உன்னதமான வாழ்க்கைக் குறிப்பும், அவரைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் தெரிவித்த கருத்துகளும் இந்த நூலில் காணப்படுகின்றன. வ.உ.சி.யின் மகன் எழுதிய கட்டுரை மனதைத் தொடுகிறது. நன்றி: தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818/p>

Read more

பழவேற்காடு வரலாறு

பழவேற்காடு வரலாறு, பழவை வீ.ராதாகிருஷ்ணன், வைகரி பால்டேனியல் பதிப்பகம், பக்.320, விலை ரூ.250. “பழவேற்காடு’ தொடர்பாக இதுவரை யாருமே சொல்லாத வரலாற்று உண்மைகளைப் பல்வேறு சான்றுகளோடு முன்வைத்திருக்கிறார் நூலாசிரியர். பழவேற்காடு ஒரு மீன்பிடித் துறைமுகம், கடற்பகுதி, ஏரி என்று மட்டும் நினைப்பவரின் எண்ணத்தைப் புரட்டிப் போட்டுவிடுகிறது இந்நூல். இந்தியாவில் பெரும்பான்மையான நகரங்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்பே புதுப்பொலிவு பெற்றன. தலைசிறந்த துறைமுகப்பட்டினங்களும் உருவாயின. அவற்றுள் பழவேற்காடும் ஒன்று. கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “எரிதேரியன் கடற்பயணக் குறிப்புகள்’ என்ற நூலில்தான் பழவேற்காடு ஏரியைப் […]

Read more

வீரம் விளைந்த வேலுார் கோட்டை

வீரம் விளைந்த வேலுார் கோட்டை, சா.திருமலை கமலநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.100 புகழ்பெற்ற வேலுார் கோட்டை பற்றிய வரலாற்றுத் தகவல்களின் தொகுப்பு நுால். அரிய செய்திகளை உள்ளடக்கியுள்ளது. வேலுார் ஊர் பெயர் காரணம் இலக்கிய ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது. வேலுார் கோட்டை வரலாறு, சிப்பாய் கலகம் வரை சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது. கோட்டையில் கோலோச்சிய மன்னர்கள் பற்றிய விபரமும் கால வரிசைப்படி உள்ளது. கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் பற்றியும் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆன்மிகத் தொண்டு புரிந்த மகான்கள் பற்றிய விபரமும் உள்ளது. […]

Read more

பாம்பு மனிதன்’ ரோமுலஸ் விட்டேகர்

பாம்பு மனிதன்’ ரோமுலஸ் விட்டேகர், ஜாய் விட்டேகர், வானதி பதிப்பகம், விலைரூ.500 பாம்பு, முதலை போன்ற உயிரினங்களுடன் நெருக்கமாக வாழும், ரோமுலஸ் விட்டேகரின் வாழ்க்கை வரலாற்று நுால். ஆங்கிலத்திலிருந்து தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பிறந்து, இந்தியாவில் பாம்பு, முதலைகளை பாதுகாக்கும் சேவையில் ஈடுபட்டு வருபவர் விட்டேகர். இந்த அற்புத பணிக்கு நகர்ந்து வந்த விதமும், வழித்தடமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை மீதான புரிதலைத் துாண்டுகிறது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற எதிர்மறை எண்ணம், நம்பிக்கை நிறைந்த நாட்டில், அவற்றை தகர்க்கும் வழிமுறைகளுடன் களத்தில் […]

Read more

தமிழக வரலாற்றுக் கோட்டைகள் பகுதி – 2

தமிழக வரலாற்றுக் கோட்டைகள் பகுதி – 2, சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலைரூ.350. சங்கப் பாடல் வரிகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் மிக விரிவாக கோட்டை ஆய்வுகள் மேற்கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிய தகவல்கள் வியக்க வைக்கின்றன. மன்னர்களுக்குள் ஏற்பட்ட பகைமை, பொறாமை, பணியாமை, மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்றவற்றால் நடந்த போர்களுக்கெல்லாம் கோட்டைகளே தாக்குதல்களையும், தண்டனைகளையும் ஏற்று காலப்போக்கில் சிதிலமடைந்த விபரங்கள், வரலாற்றுச் சம்பவங்களின் குறிப்புகளோடு தரப்பட்டுள்ளன. அன்றைய நாடுகளின் அமைப்பு, வானளாவிய கோட்டைகளின் அமைப்பு, கட்டுமானச் சிறப்புகள், சிற்பக் கலைகள், […]

Read more

அண்ணல் அம்பேத்கர்: உணர்வுகளின் உயிர்மம்

அண்ணல் அம்பேத்கர்: உணர்வுகளின் உயிர்மம், பசுபதி தனராஜ், கோரல் பப்ளிஷர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், பக்.336, விலை ரூ.300. அம்பேத்கரின் வாழ்க்கையை – சிந்தனைகளை- பணிகளை- சாதனைகளை அறிமுகப்படுத்தும் நூல். அம்பேத்கரின் இளமைப் பருவத்தில் அவர் சந்தித்த தீண்டாமைக் கொடுமைகள்,அதனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பள்ளிப் படிப்பை முடித்த அம்பேத்கரின் சிந்தனையை பரோடா மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட் எழுதிய “கெளதம புத்தர்’ என்ற புத்தகம் மாற்றி அமைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இண்டர்மீடியட் தேர்வில் வெற்றி பெற்ற அம்பேத்கர் மேல் படிப்பு படிக்க வசதியில்லாமல் […]

Read more

தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்

தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்,  டி.வி. ராதாகிருஷ்ணன், கங்கை புத்தக நிலையம், பக்.120, விலை ரூ.100. சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை பெண்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும், ஆண் எழுத்தாளர்களை விட பெண் எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு. இதற்கு பெண்களின் குடும்பச் சூழ்நிலை, சமூகத்துக்கு கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தம், குடும்பத்தாரே எதிர்ப்பு தெரிவிப்பது, நேரமின்மை, சுதந்திரமின்மை முதலிய பல காரணங்களைக் கூறலாம். இத்தனையையும் தாண்டி அன்றைக்கு ஓரளவு படித்த பெண்கள் சிலர் சுதந்திரப் போராட்ட காலத்திற்கு முன்பிலிருந்தே எழுதியதோடல்லாமல், […]

Read more

இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு

இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு, ஜெய்ராம் ரமேஷ், காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.295 பிரபல கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ‘முகில் மீது தனியாய் திரிந்தேன்’ என்ற தலைப்பில் எழுதிய கவிதையுடன் துவங்குகிறது இந்த நுால். மறைந்த பிரதமர் இந்திரா விரும்பிய கவிதைகளில் இதுவும் ஒன்று.இயற்கை மீது இந்திராவின் பேரார்வத்தை வெளிப்படுத்தும் தகவல்கள் கொண்ட நுால் இது. அவருக்கு, இயற்கை மீதான அக்கறை எங்கிருந்து வந்தது, எவ்விதம் வளர்ந்தது, எவ்வாறு பிரதிபலித்தது, சூழலியல் நலனில் எடுத்த முடிவுகள் என்ன போன்றவற்றுக்கு விடை தரும் வகையில், உரிய […]

Read more

நாகா சரித்திரம் வாழும்போதே வரலாறு

நாகா சரித்திரம் வாழும்போதே வரலாறு, நரேன், நீல் கிரியேட்டர்ஸ், பக்.224, விலை ரூ.100. சிறப்பு ஒலிம்பிக்ஸ் ஏசியா பசிபிக்கின் தலைமை மேலாளர் நாகராஜனின் வாழ்க்கை குறித்த புத்தகம். மனவளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுத் துறையில் முன்னேறுவதற்காக நாகராஜன் எடுத்த பல்வேறு முயற்சிகள் குறித்து பேசுகிறார் நூலாசிரியர். நாகராஜனின் குடும்பம், பிரபலங்களுடனான அவருடைய நட்பு, அவரது வாழ்க்கையின் திருப்புமுனைகள் என அவருடைய வாழ்வின் முக்கிய தருணங்கள் இந்நூலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. இடையிடையே கதைகள், சம்பவங்கள், கவிதைகள் மூலமாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு பயணிக்கிறது புத்தகம். மனவளர்ச்சி குன்றியவர்களையும் பொது […]

Read more
1 6 7 8 9 10 104