100 சாதனைப் பெண்களை அறிந்து கொள்வோம்

100 சாதனைப் பெண்களை அறிந்து கொள்வோம், செவ்விளங்கலைமணி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.100. உலக அளவில் புகழ்பெற்ற, 100 பெண்களில், 96 பேர் இந்திய பெண்கள். அரசியல், இலக்கியம், கல்வி, கலை, தொழில், காவல், பாட்டு, விளையாட்டு, சமூக சீர்திருத்தம் என, பல்வேறு துறைகளில் உச்சம் தொட்டவர்களுக்கு பாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னப்பிள்ளை முதல், கஸ்துாரிபாய் காந்தி வரை கவி மகுடம் சூட்டப்பட்டுள்ளது. – சீத்தலைச் சாத்தன் நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030823_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

ஏ.ஜி.கே. எனும் போராளி

ஏ.ஜி.கே. எனும் போராளி, தொகுப்பு: மு.சிவகுருநாதன், பன்மை வெளியீடு, விலை: ரூ.290 கீழத்தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்களைப் பண்ணையடிமைகளாக வைத்திருந்த நிலவுடையாளர்களுக்கு எதிராகப் போராடி, உழைக்கும் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தந்த முதன்மையான தலைவர்களில் ஒருவர் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன்(1932-2016). பெரியாரியத்தையும் மார்க்ஸியத்தையும் தனது வழிகாட்டும் கொள்கைகளாக ஏற்றுக்கொண்டவர். இரண்டுக்கும் இடையில் இணக்கம் கண்ட முன்னோடி. திராவிட, மார்க்ஸிய விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் வழியே மக்கள் போராட்டங்களை முன்னின்று ஒருங்கிணைத்தவர். கூடவே, தமிழ்த் தேசிய உணர்வையும் ஏற்றுக்கொண்டவர். 44 உயிர்களைக் குடித்த வெண்மணிக் கொடுமைக்குக் காரணம் கூலி உயர்வுப் போராட்டம் […]

Read more

இரவு எலீ வீஸல்

இரவு, எலீ வீஸல், தமிழில்: ரவி, தி. இளங்கோவன், எதிர் வெளியீடு, விலை: ரூ.230 மறதிக்கு எதிராக நினைவின் கலகத்தை ஒத்தது அதிகாரத்துக்கு எதிராக மனிதன் நடத்தும் யுத்தம் என்ற மிலன் குந்தேராவின் கூற்றுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் ஆக்கம் எலீ வீஸல் எழுதிய ‘இரவு’ சுயசரிதை. தற்போது ருமேனியாவாக இருக்கும் நாட்டில் சிகெட் என்னும் சிறுநகரத்தில் 1928-ம் ஆண்டு பிறந்த எலீ வீஸல், சிறுவனாக இருந்தபோதே யூத வதைமுகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பெற்றோரையும் சகோதரியையும் அங்கேயே பறிகொடுத்தவர். சென்ற நூற்றாண்டில் யூதர்கள் மீது […]

Read more

சிப்பியின் வயிற்றில் முத்து

சிப்பியின் வயிற்றில் முத்து, போதிசத்வ மைத்ரேய, தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு, விலை: ரூ.105 இந்தியாவின் தென்கோடியில் மன்னார் வளைகுடாப் பகுதியில் எடுக்கப்படும் சங்குகள், இந்தியாவில் இன்னொரு மூலையில் இருக்கும் வங்கத்தில் மட்டுமே விலைபோகிறது. வங்கக் கைவினைக் கலைஞர்கள்தான் தூத்துக்குடி சங்கில் நகைகள் செய்வதற்குப் பெயர்போனவர்கள். தென்தமிழகத்தின் மூலையில் ஆழ்கடலில் கிடைக்கும் சங்கு, தேசத்தின் இன்னொரு மூலையில் நகையாகும் விந்தைக்கு இணையான நாவல் படைப்புதான் ‘சிப்பியின் வயிற்றில் முத்து’. இந்தியச் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தை மையமாக வைத்து, பாரம்பரியம் மிக்க […]

Read more

உலக மக்களின் வரலாறு

உலக மக்களின் வரலாறு , கிரிஸ் ஹார்மன்; தமிழில்: நிழல்வண்ணன், மு.வசந்தகுமார்; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் , பக்.1088, விலை ரூ.750. வரலாறு என்பது ஆட்சியாளர்களின் வரலாறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களுடைய காலம், அவர்களுடைய வழித்தோன்றல்களின் காலம் ஆகியவற்றின்போது நிகழ்ந்த நிகழ்வுகள் வரலாற்றுச் சம்பவங்களாகக் கருதப்பட்டன. ஆனால் இந்த நூல், இதற்கு மாறாக வரலாற்றை மக்களின் வரலாறாகக் காண்கிறது. மனிதன் உயிர் வாழ்வதற்காக மேற்கொண்ட வேட்டையாடுதல், விவசாயம் செய்தல் ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்கள், நிலையான குடியிருப்புகள் தோன்றியது, நேரடி உழைப்பில் […]

Read more

அழகிய இந்தியா

அழகிய இந்தியா – தரம்பாலின் எழுத்துகளுக்கு ஓர் அறிமுகம்,  தரம்பால், தமிழில் – பி.ஆர். மகாதேவன், கிழக்கு பதிப்பகம், பக். 264, விலை ரூ. 300;    தரம்பாலின் எழுத்துகளுக்கு ஓர் அறிமுகம்தான் அழகிய இந்தியா என்ற இந்த நூல் என்றாலும் அவரைப் பற்றிய, அவருடைய எழுத்துகள் பற்றிய விரிவான சித்திரத்தை நம் முன்வைக்கிறது. பிரிட்டிஷார் வருவதற்கு முன்னரே இந்தியாவில் கல்வி நிலை உலகின் பிற பகுதிகளை விடச் சிறப்பாக இருந்தது; பிரிட்டிஷார் இங்கு வந்து பாரம்பரியக் கல்வி எனும் அந்த அழகிய மரத்தை […]

Read more

தியாகச் செம்மல் காமராஜ்

தியாகச் செம்மல் காமராஜ், சாவி, நர்மதா பதிப்பகம், விலைரூ.75. மறைந்த காமராஜரின் அரசியல் வாழ்வை விவரிக்கும் நுால். பத்திரிகையாளர் சாவி, நேரடியாக பார்த்தவற்றை பதிவு செய்துள்ளார். கேள்வி – பதிலாகவும் உள்ளது. பதவியில் இருந்து விலகுவதால், அசவுகரியங்கள் ஏற்படாதா என்ற கேள்விக்கு, ‘ஓய்வூதியத்தில் வீட்டு வாடகை, வரி போக, 1,000 ரூபாய் மீதமிருக்கும். அதில், காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்கு சென்று வரும் செலவு, 600 ரூபாய்; மீதமுள்ள, 400 ரூபாயை என் செலவுக்கும், தாய்க்கும் அனுப்பியது போக, மீதி பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து விடுவேன்…’ […]

Read more

ஆளுமைகளுடன் எனது அனுபவங்கள்

ஆளுமைகளுடன் எனது அனுபவங்கள், துக்ளக் ரமேஷ், அல்லயன்ஸ் கம்பெனி, பக்.232, விலை ரூ.220. பத்திரிகைத்துறையில் நாற்பதாண்டு அனுபவம் உள்ள இந்நூலாசிரியர், தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமைகள் பலருடனான தனது அனுபவங்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். முரசொலி அடியார் நடத்திய நீரோட்டம் பத்திரிகையில் பணியில் சேர்ந்ததில் தொடங்கி, மாஃபா பாண்டியராஜனுக்காக ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்தது வரை நூலாசிரியரின் எல்லா அனுபவங்களுமே மிகவும் சுவையாக இருக்கின்றன. குறிப்பாக திமுகவைச் சேர்ந்த ரகுமான் கானும், அதிமுகவைச் சேர்ந்த பி.எச்.பாண்டியனும் பேரவை வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பு வரை போனது, தனக்கு முதல்வராகும் […]

Read more

பாண்டிய மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு

பாண்டிய மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு – மு.நீலகண்டன்; கனிஷ்கா புத்தக இல்லம்,  பக்.202. விலை ரூ.180. தொன்மைக்கால பாண்டிய மண்டலம் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களைக் கொண்டதாக இருந்தது. கி.மு. 3 – ஆம் நூற்றாண்டில் பெளத்தம் பாண்டிய மண்டலத்துக்கு வந்திருக்கலாம் என்று கூறும் நூலாசிரியர், பாண்டிய மண்டலத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பெளத்த சமயமும், சமண சமயமும் உயர்ந்தநிலையில் இருந்திருக்கின்றன; நாட்டின் பல பகுதிகளில் பெளத்த விகாரங்கள் அமைக்கப்பட்டன; புத்த பள்ளிகள் இருந்தன என்கிறார். அதற்கான பல வரலாற்று ஆதாரங்களை எடுத்துக் […]

Read more

இந்தியா – அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு

இந்தியா – அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு, ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் (1498 – 1765), ராய் மாக்ஸம், தமிழில் – பி.ஆர். மகாதேவன்; கிழக்கு பதிப்பகம், பக். 280; ரூ. 325;    ராய் மாக்ஸமின் தி தெப்ஃட் ஆஃப் இந்தியா நூலின் மொழிபெயர்ப்பு இந்த நூல்.இந்தியாவின் உப்புவேலி, ஆப்பிரிக்காவின் தேயிலைச் சுரண்டல் பற்றிய நூல்களுக்கான தரவுகளைத் தேடியபோது கண்டடைந்த தகவல்களின் அடியொற்றி மேற்கொண்ட தொடர் தேடுதல்களின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தியா மீதான ஆக்கிரமிப்பு கால கறுப்புப் பக்கங்களை விவரிக்கும் இந்நூலில், ஐரோப்பிய ஆதிக்க சக்திகளின் […]

Read more
1 8 9 10 11 12 104