நான் கண்ட போராளிகள் – களமும் வாழ்வும்

நான் கண்ட போராளிகள் – களமும் வாழ்வும்,  ஓவியர் புகழேந்தி,  தோழமை வெளியீடு,  பக்.456, விலை ரூ.480. தமிழீழம் நான் கண்டதும் – என்னைக் கண்டதும்; தலைவர் பிரபாகரன் – பன்முக ஆளுமை என்ற இரு நூல்களுக்குப் பிறகு ஓவியர் புகழேந்தியின் மூன்றாவது நூல் இது. விடுதலைப் புலிகளின் வசம் தமிழீழம் இருந்த காலத்தில் இரு தடவைகள் பயணம் மேற்கொண்டவர் ஓவியர் புகழேந்தி. அவரின் இரண்டாவது பயணத்தில் 40 நாள்கள் அங்கு தங்கியிருக்கிறார். இந்த தடவை மனைவி குழந்தைகளுடன் சென்றதால், தான் சந்தித்த ஆளுமைகள் […]

Read more

இருளைக் கிழித்தொரு புயற்பறவை

இருளைக் கிழித்தொரு புயற்பறவை, இளவேனில், கொற்றவை வெளியீடு, விலைரூ.250   ரஷ்ய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியின் குழந்தைப் பருவம் பற்றி விளக்கும் நுால் இது. சிறு வயதில் கார்க்கி அனுபவித்த சித்ரவதைகளையும், அவரைச் சுற்றி நடந்த நிகழ்வுகளையும் கண்முன் கொண்டு வருகிறார், ஆசிரியர் இளவேனில். கஷ்டப்பட்ட காலத்திலும், பல நுால்களை தேடித் தேடி படித்து, தன் அறிவையும், கலை, இலக்கிய புலமையையும் வளர்த்த விதத்தையும் படிக்கும் போது, பிற்காலத்தில் மிகச்சிறந்த எழுத்தாளராக உருவானதற்கான அடிப்படையை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி: […]

Read more

மாமன்னன் ராஜராஜன்

மாமன்னன் ராஜராஜன், குன்றில் குமார், அழகு பதிப்பகம், விலைரூ.170. இன்று தமிழர் வாழ்வின் பண்டைய பெருமைகள் உலகளாவி பரவி இருப்பதற்கு ஆணிவேராக நின்று காத்தவர்கள் சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் எனலாம். சோழ நாடானது வேள் மண்டலம், வேள் தேசம், நாக மண்டலம், பொன்னி மண்டலம், காவிரி நாடு, கிள்ளி மண்டலம் வளவன் மண்டலம் என்று பல்வேறு பெயர்களோடு அமைந்து ஊர்களின் பெயர்கள், ‘கோட்டை’ என்று கொண்டதாக இருந்தது சோழநாடு. வையை நாடு, பாண்டி மண்டலம் என்பதாக பாண்டியநாடு அமைந்து ஊர்களின் பெயர்கள் […]

Read more

மதுரையின் அரசியல் வரலாறு 1868

மதுரையின் அரசியல் வரலாறு 1868, ஜே.எச்.நெல்சன், தமிழில்: ச.சரவணன், சந்தியா பதிப்பகம், விலை: ரூ.360 தமிழக நகரங்களில் நீண்ட காலம் தலைநகரமாக விளங்கிய சரித்திரப் பெருமை மதுரைக்கு உண்டு. மதுரை என்பது நிலமும் மக்களும் சார்ந்த வெறும் நகரம் மட்டுமல்ல; கடல் கொண்ட முதலாம் தமிழ்ச் சங்கக் காலத்தை இன்னமும் நினைவுறுத்திக்கொண்டிருக்கும் தொன்மமும்கூட. மதுரையைப் பற்றிய வரலாற்று நூல்களுள் ஜேம்ஸ் ஹென்ரி நெல்சனின் ‘மதுரா கன்ட்ரி மானுவல்’ குறிப்பிடத்தக்க ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உதவும் நோக்கில், மாவட்ட விவரச்சுவடிகள் […]

Read more

கில்கமெஷ் காவியம்

கில்கமெஷ் காவியம், ஸ்டாலின், சாகித்ய அகடமி, விலைரூ.190. மெசபடோமிய நாகரிகத்தைக் காட்டும் இக்காவியம் அக்கேடிய மொழியில், கி.மு., 130ல் பெல் அஹிஉகூர் எழுதினார். கொடுங்கோல் அரசர் கில்கமெஷ் ஆட்சியில், மக்கள் கொடுமைக்கு ஆளாகின்றனர். கில்கமெசிற்கு எதிராக தெய்வங்கள் என்கிடுவை உருவாக்குகின்றன. காட்டில் கொடிய விலங்குகளுடன் வாழும் என்கிடு, அவரை மாற்றுகிறார். முடிவில் கில்கமெஷ் மனம் மாறி, தெய்வங்களின் மறைபொருளை கூறுகிறார். யூப்ரடீஸ், டைகிரீஸ் ஆற்றங்கரைகளில், கி.மு., 2800க்கும் – கி.மு., 2500க்கும் இடைப்பட்ட காலத்தில் கிஷ் பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரைக் கதை இது. […]

Read more

சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரி

சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரி,  ஆா்.கே.மூா்த்தி,  மொழிபெயா்ப்பு- எஸ்.கணேசன், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்,  விலை ரூ.145. சா்வதேச அளவில் தீா்க்கதரிசியென்றும், தலைசிறந்த நிா்வாகி என்றும் போற்றப்படும் ஒருவா், தமிழகத்தில் போதிய மரியாதை பெறவில்லை என்றால், அவா் ராஜாஜி என்று பரவலாக அழைக்கப்படும் சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரியாராகத்தான் இருப்பாா். மூதறிஞா் ராஜாஜி என்று அவா் குறிப்பிடப்பட்டாலும் அவா் குறித்து இன்றைய தலைமுறைக்கு சரியாகவும், முறையாகவும் எடுத்துரைபாரில்லை என்பதுதான் உண்மை. பிராமண சமூகத்தின் பிரதிநிதியாகவும், ஆசார அனுஷ்டான சீலராகவும், சனாதனியாகவும் ராஜாஜி வா்ணிக்கப்பட்டு, அவா் குறித்த தவறான பரப்புரைகள் […]

Read more

விஜயநகரப் பேரரசு

விஜயநகரப் பேரரசு, கா.அப்பாதுரை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.200. இந்தியாவின் தெற்கு பகுதியிலிருந்த விஜயநகரப் பேரரசின் சமூக அரசியல், பொருளாதார வளர்ச்சி எழுதப்பட்டுள்ளது. வரலாற்று நாவல் போன்றது எனலாம். பண்டைய வரலாற்று சிறப்புகளை அறிந்து கொள்ள, இத்தகைய நுால்கள் மிகவும் பயன்படும். விஜயநகர மன்னர்கள், நாயக்க அரசர்களோடு கொண்ட தொடர்புகள் மற்றும் மற்ற மன்னர்கள், சிற்றரசர்கள் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. விஜயநகரப் பேரரசு ஆண்டதாக கூறியுள்ள, 14 – 17ம் நுாற்றாண்டு வரை உள்ள தமிழக வரலாறு கோர்வையாக சொல்லப்பட்டுள்ளது. – என்.எஸ்., நன்றி: […]

Read more

சேது காப்பியம் – 10

சேது காப்பியம் – 10,  இயற்கை வியப்பார் எழுச்சிக் காண்டம், வா.மு.சேதுராமன், கவியரசன் பதிப்பகம், விலைரூ.700 மரபுக்கவிஞர் வா.மு.சேதுராமன், சேது காப்பியத்தை, 75ம் வயதில் தொடங்கி, 84ம் வயதில், 10ம் காண்டத்தை படைத்துள்ளார். காப்பியத்தின் சுருக்கத்தை உரைநடையில் வழங்கியுள்ளார். இந்த உரைநடையைப் படிக்கத் தொடங்கினால், காப்பியத்தை படிக்காமல் விடமாட்டார்கள்.கவிதைப் பயண வரலாற்றுடன் அந்நாட்டு வளங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிப்பதற்காகப் புதுடில்லியில் நடைபெற்ற போராட்ட அனுபவங்களையும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட அனுபவங்களையும் எளிய கவிதையில் வடித்துள்ளார். […]

Read more

காலம் தந்த காமராசர்

காலம் தந்த காமராசர், முகிலை இராசபாண்டியன், கோவன் பதிப்பகம், பக். 176, விலை 150ரூ. ஆறு வயதில் தந்தையை இழந்த ஏழைச் சிறுவன், இந்திய விடுதலைக்காக உழைத்து, அக்டோபர் மாதம் காந்தியடிகள் பிறந்த நாளில், உலக வாழ்வை துறந்தவரின் வரலாற்றை சொல்லும் நுால். முதல்வர் பதவியை துறந்து, நாட்டுக்காகப் பாடுபட்டவர் தான் கர்ம வீரர் காமராஜர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த நேருவுக்கு ஆலோசனை கூறும் திறனுடன் விளங்கினார். மூன்று முறை தமிழகத்தின் முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தவர். கடைசி […]

Read more

ஆதி இந்தியர்கள்

ஆதி இந்தியர்கள், டோனி ஜோசஃப், தமிழில்:பி.எஸ்.வி.குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை: ரூ.350 சாதி என்றொரு கற்பிதம் மரபணு அறிவியலின் வளர்ச்சியானது தொல்பழங்காலம் குறித்த ஆய்வுகளில் ஒரு புதிய வெளிச்சத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இதுவரை அனுமானங்களாகவும் கற்பனைகளாகவும் இருந்துவந்த தொல்பழங்காலத்திய வரலாற்றை அறிவியல் அடிப்படையில் ஆதாரபூர்வமாக எழுதுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஆனால், அது சிலரின் நம்பிக்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் மாறாகவும் இருக்கக்கூடும். இந்தியாவின் பழங்கால வரலாறு என்பது கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களிலிருந்து தொடங்கி ஹரப்பா, மொஹஞ்சதாரோவின் பெருமைகளைப் பேசி, வேத காலத்துக்கு நகர்வதே வழக்கம். அதன் அடிப்படையில், […]

Read more
1 10 11 12 13 14 104