பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள்!

பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள்!, டி.என்.இமாஜான், மணிமேகலை பிரசுரம், விலைரூ.170. முறைப்படி சங்கீதம் கற்கா விட்டாலும் சங்கீதத்தில் முத்து எடுத்தவர் எஸ்.பி.பி., என்பதை குறிப்புகள் சொல்லிக் காட்டுகின்றன. இன்ஜினியரிங் படிப்பை உதறிவிட்டு இசைத் துறையில் கால் பதித்து கொடி நாட்டியவரின் இழப்பு, எல்லாரையும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. உடன் பாடியவர்கள், ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல்வாதிகள் கூறிய கருத்துக்கள் அலங்கரிக்கின்றன. சிறந்த பாடகர் என உயரிய விருதுகள் பெற்றிருந்தாலும் பணிவு, பரோபகாரம் என உதவிய மனிதநேயம் சிலை வடிக்க வைத்துவிட்டது. – சீத்தலைச்சாத்தன். […]

Read more

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு,  தொகுப்பாசிரியர்: எம்.எஸ்.செல்வராஜ் , பாரதி புத்தகாலயம், பக்.96, விலை  ரூ.100. 1815- ஆம் ஆண்டு இலங்கையை பிரிட்டிஷார் கைப்பற்றினர். அங்கு அவர்கள் கட்டுமானப் பணிகளைச் செய்ய தமிழகத்திலிருந்து பலரை அழைத்துச் சென்றனர். பிரிட்டிஷ் முதலாளிகள் காப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்களை இலங்கையில் ஏற்படுத்தி, அவற்றில் வேலை செய்யவும் தமிழ்நாட்டிலிருந்து மக்களை அழைத்துச் சென்றனர். தமிழகத்தில் இருந்து சென்றவர்களால், இலங்கையின் பொருளாதாரம் மேம்பட்டது என்றாலும் தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. அவர்கள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்நிலையை […]

Read more

திருமலை நாயக்கர்

திருமலை நாயக்கர், நல்லாசிரியர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி, நிவேதிதா பதிப்பகம்,விலைரூ.160. தென்னகத்தில் நாயக்கர் ஆட்சியை குறித்து சொல்லும் நுால். போர்ச்சுகீசியர்களும், மேனாட்டுப் பாதிரிகளும் தமிழகத்தில் காலுான்றிய கால கட்டமான, 17ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் திருமலை நாயக்கர் 1623ல் அரியணை ஏறி ஆட்சி புரிந்தார். அவரது 35 ஆண்டு கால வரலாற்றை விளக்கும் நுால். தலைநகரை திருச்சியிலிருந்து, மதுரைக்கு மாற்றிய பின் அவரது ஆட்சி சிறப்புற விளங்கலாயிற்று. அந்த ஆட்சி முறையையும், கலைப் பணியையும், கோவில்கள் அமைத்த செயல்களையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது. குறிப்பிடத்தக்க ஐந்து போர்கள் பற்றிய […]

Read more

ரத்தத்தின் ரத்தமே

ரத்தத்தின் ரத்தமே, எஸ்.ரஜத், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. நிறமும், அழகும் கடவுள் நிறைய பேருக்கு கொடுத்திருக்கிறார். ஒரு சிலர் தான் நிறம், அழகைத் தாண்டி, நல்ல குணத்தால் காலமெல்லாம் தன் புகழை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றனர். எம்.ஜி.ஆர்., தியேட்டரைத் தாண்டி, மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்த நிரந்தர முதல்வர். சிம்லாவில் நம் ராணுவத்தினரை ரசிக்க வைத்த கலாரசிகன். படப்பிடிப்பின் போது உடல் களைத்தாலும், மனம் களைக்காமல் ரசிகர்களை கொண்டாடும் தலைவன். கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும் என்பதை மக்களின் வேண்டுதல் […]

Read more

அழகிய இந்தியா

அழகிய இந்தியா தரம்பாலின் எழுத்துகளுக்கு ஓர் அறிமுகம், பி. ஆர். மகாதேவன், கிழக்கு பதிப்பகம், விலைரூ.300. பிரிட்டிஷ் ஆட்சி கால ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு, ஆங்கிலேயர் வருமுன்பே உன்னதமாக விளங்கிய இந்திய பாரம்பரியக் கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், காந்திக்கு முன்பான ஒத்துழையாமை இயக்கம், பஞ்சாயத்து ராஜ் பற்றி, காந்தியவாதி தரம்பால் எழுதிய நுால்களின் முன்னுரைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட நுால். இந்திய உன்னதங்களை எடுத்துரைக்கும் தரம்பாலின், ‘அழகிய மரம் – 18ம் நுாற்றாண்டில் இந்தியாவின் பாரம்பரியக் கல்வி, அழகிய நதி – இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், […]

Read more

தமிழகம்

தமிழகம் – கி.பி. முதல் நூற்றாண்டு,ந.சி.கந்தையா பிள்ளை, அழகு பதிப்பகம், பக்.25, விலை  ரூ.250. தமிழகம் தொன்மை மிக்க நாடு. இதன் வரலாற்றை பல்வேறு அறிஞர்களும் பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ளனர். அவற்றையெல்லாம் ஆய்ந்து, ஏற்புடையனவற்றைத் தொகுத்து அவற்றோடு தனது முடிவுகளையும் இணைத்து நூலாக்கியிருக்கிறார் ஆசிரியர். அற்றை நாளில் தமிழ்நாட்டின் எல்லைகள், தமிழ்நாட்டில் பயின்ற மொழிகள், பின்னர் தமிழினின்றும் கிளைத்த வழிமொழிகள், தமிழில் முத்தமிழ் வளர்ந்த விதம், தமிழர் நாகரிகம், நம்பிக்கை, பொழுதுபோக்கு ஆகியவற்றையும், தமிழர், ஓவியம், சிற்பம், வணிகம், சோதிடம், வானவியல் போன்ற துறைகளில் […]

Read more

மருதநாயகம் என்ற மர்ம நாயகம்

மருதநாயகம் என்ற மர்ம நாயகம், அமுதன், மணிமேகலைப் பிரசுரம், பக்.336, விலை ரூ.300. மருத நாயகத்தின் 39 வருட வாழ்க்கையை பல்வேறு ஆவண ஆதாரங்களுடன் தேதி வாரியாக விரிவாக அலசுகிறது இந்நூல். மருதநாயகம் இந்துவா, இஸ்லாமியரா அல்லது இந்துவாகப் பிறந்து இஸ்லாத்துக்கு மாறினாரா என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. அதுபோன்றேஅவர் ஆங்கிலேயர்களை தமிழக மண்ணில் வேரூன்ற வழிவகை செய்தாரா அல்லது விடுதலை வீரரா என்பதை வாசகர்களின் முடிவுக்கு நூலாசிரியர் விட்டுவிடுகிறார். 17-ஆம் நூற்றாண்டில் முகலாயர், ஜமீன்தார், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள் என நான்கு முக்கிய […]

Read more

நாரண.துரைக்கண்ணனாரின் புதினப் படைப்புத்திறன்கள்

நாரண.துரைக்கண்ணனாரின் புதினப் படைப்புத்திறன்கள், அ.இராமரத்தினம்; பதின்மர் பதிப்பம், பக்.226, விலை ரூ100.  இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த பலருள் குறிப்பிடத்தக்கவர் நாரண. துரைக்கண்ணன். இவர் புதினம், கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, வாழ்க்கை வரலாறு, பயண இலக்கியம் என எல்லா வகைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆயினும் இவர் ஒரு புதின எழுத்தாளராகவே அறியப்படுகிறார். இந்நூல் நாரண.துரைக்கண்ணனின் படைப்புத்திறனை ஆய்வுநோக்கில் பார்த்து எழுதப்பட்டுள்ளது. அவர் தனது புதினங்களுக்காகத் தேர்ந்தெடுத்துள்ள கருப்பொருள்களில் உள்ள சமூக, அரசியல், பொருளாதாரத் தாக்கம், அவர் கைக்கொண்ட […]

Read more

கிராமத்து தெருக்களின் வழியே

View Post கிராமத்து தெருக்களின் வழியே…, ந.முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ், விலைரூ.350. தமிழக கிராமிய வாழ்வியல் முறையை விவரிக்கும் நுால். முற்றிலும் அனுபவம் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. எளிய நடையில் காட்சிப் பூர்வமாக உள்ளது. மதுரை நகர் அருகே, 60 முதல், 80 வரையான காலத்தில், ஒரு கிராமத்தின் இயக்கம் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. அன்றாட வாழ்வியல் மிக இயல்பாக வரையப்பட்டு உள்ளது.புத்தகத்திலிருந்து… எழுபதுகளின் இறுதியில், மலையாளிகள் சிலர் எங்கள் ஊருக்கு வந்தனர். மந்தையில் கொட்டகை போட்டு, பல சரக்கு, […]

Read more

தேவேந்திரர்களின் கதைகள்

தேவேந்திரர்களின் கதைகள், தே.ஞானசேகரன், காவ்யா, விலைரூ.120. வேளாண்மையை தொழிலாகக் கொண்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் பரம்பரையாக செவிவழிச் செய்தி கதைகளை புரிந்து, ஆய்வு ஏடுகளுக்கு பயன்படுத்திய பெருமக்களின் குறிப்புகளோடு வெளிவந்திருக்கும் நுால். நெல்லை முதலில் பயிராக கண்டவர்கள் என்பதுடன், தேவர்களின் தலைவன் தேவேந்திரன் தான் மழை மற்றும் உழவுத் தொழிலின் கடவுள் எனச் சொல்கிறது. அதனால் தான் பல பிரிவுகளாக பிரிந்திருந்தாலும், தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப் பெயரில் அழைக்கப்படுகின்றனர். வட்டார வழக்கு மொழிச்சொற்களில் அமைந்துள்ளது சிறப்பு. – சீத்தலைச்சாத்தன். நன்றி: தினமலர்,8/8/21 இந்தப் […]

Read more
1 5 6 7 8 9 104