நாடார் சமூகத்தின் போராட்ட வரலாறு

நாடார் சமூகத்தின் போராட்ட வரலாறு, தொகுப்பு ஆசிரியர் க.செந்தமிழ்ச் செல்வன், மணிமேகலைப் பிரசுரம், விலை 225ரூ. இந்த நூல், நாடார் சமூகத்தின் போராட்ட வரலாறு என்ற பெயரைக் கொண்டு இருந்தாலும், நாடார் சமூகம் பற்றிய முக்கியமான தகவல்கள் அனைத்தையும் தாங்கி இருக்கிறது. திருச்செந்தூரின் தென் கிழக்குப் பகுதியே நாடார்களின் தாய் பூமி, பழங்காலத்தில் எகிப்தில் குடியேறியவர்கள் குமரிக்கண்டத்தில் இருந்து சென்ற நாடாகள், குறுந்தொகையில் 40-க்கும் மேற்பட்ட பாடல்களில் நாடன் என்ற சொல் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான ஏனாதி நாயனார் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் […]

Read more

வட சென்னை வரலாறும் வாழ்வியலும்

வட சென்னை வரலாறும் வாழ்வியலும், நிவேதிதா லூயிஸ், கிழக்கு பதிப்பகம், விலை 300ரூ. வடசென்னையில் இவ்வளவு அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றனவா என்ற வியப்பை இந்த நூல் தருகிறது. கால வெள்ளத்தில் புதைந்துபோன கட்டிடங்கள், மக்கள் மறந்துவிட்ட வரலாற்றச் சின்னங்கள் ஒவ்வொன்றையும் ஆசிரியர் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார். இவற்றைத் தேடி அலைந்த கதை, அவற்றைப் பார்ப்பதற்கான அனுமதியைப் பெற செய்த முயற்சி, அவற்றைக் கண்டபோது ஏற்பட்ட ஆனந்தம், என்று பல வகையான உணர்வுகளை இந்த நூல் தருகிறது. சீனப்பெருஞ்சுவர் போன்று வட சென்னையில் கட்டப்பட்ட பெருஞ்சுவர், […]

Read more

தே: ஒரு இலையின் வரலாறு, இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு

தே: ஒரு இலையின் வரலாறு, ராய் மாக்ஸம், தமிழில்: சிறில் அலெக்ஸ், இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு, தமிழில்: பி.ஆர்.மகாதேவன், கிழக்கு வெளியீடு, மொத்த விலை: ரூ.650. தமிழ் வாசகர்களுக்கு ‘உப்பு வேலி’ மொழிபெயர்ப்பு நூல் மூலம் ஏற்கெனவே அறிமுகமானவர் ராய் மாக்ஸம். இந்த இரண்டு புத்தகங்களுக்கும் ‘உப்பு வேலி’க்கும் தொடர்பு இருக்கிறது. எந்த வழியிலெல்லாம் இந்தியா காலனியப்படுத்தப்பட்டது என்பதை சுவாரஸ்யமான நடையில் கூறுபவை இந்தப் புத்தகங்கள். இந்திய வரலாற்றில் தேயிலைக்கு உள்ள முக்கியமான இடத்தை ஒரு புத்தகம் சொல்கிறதென்றால் இன்னொரு புத்தகம் ஐரோப்பிய ஆக்கிரமிப்புகளைப் பற்றிய […]

Read more

விடுதலைக்கு முன் தமிழ் இலக்கிய வளர்ச்சி

விடுதலைக்கு முன் தமிழ் இலக்கிய வளர்ச்சி, முனைவர் அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், விலை 400ரூ. 1930 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சி எவ்வாறு இருந்தது என்பதை இந்த நூல் பதிவு செய்து இருக்கிறது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், ஊடகம், திரைப்படம், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, பயண இலக்கியம், கடித இலக்கியம், நூல் பதிப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் காணப்பட்ட வளர்ச்சி, அவை தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் வெளியிட்ட கட்டுரைகள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஊடகத் துறை வளர்ச்சிப் பகுதியில் […]

Read more

ஏர் இந்தியாவின் தந்தை ஜேஆர்டி டாட்டா

ஏர் இந்தியாவின் தந்தை ஜேஆர்டி டாட்டா, ஆர். நடராஜன், மணிவாசகர் பதிப்பகம், பக்.176,  விலை ரூ.150. இந்தியாவில் இரும்பு, எஃகு ஆலை, மின்சார ஆலை உள்ளிட்ட இன்றைய முக்கியத் தொழில் துறைகள் அனைத்துக்கும் அன்றே அடித்தளமிட்டவர் ஜாம்ஷெட்ஜி டாட்டா. ஜாம்ஷெட்ஜியின் டாட்டா குழுமம் பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்த போதிலும், அவரது பெயரன் ஜே.ஆர்.டி. டாட்டாவுக்கு விமானத்துறை மீது தணியாத ஆர்வம் இருந்தது. விமானம் ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்று இந்தியாவின் முதல் விமானியானது மட்டுமல்லாது, அன்றைய ஆங்கில அரசின் அனுமதியுடன் முதல்முதலில் கராச்சி – […]

Read more

துரிஞ்சிலாற்றின் பயணம்

துரிஞ்சிலாற்றின் பயணம், க.ஜெய்சங்கர், நறுமுகை, பக்.208, விலை ரூ.190. நதிக்கரை நாகரிகங்கள் என்றாலே நமக்கு காவிரி, கங்கை, யமுனை என்றுதான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் உண்மையில் ஒவ்வொரு சிறிய நதிகளும் பெரும் கதைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை “துரிஞ்சிலாற்றின் பயணம்’ நூல் பறைசாற்றுகிறது. கவுத்தி வேடியப்பன் மலையில் தொடங்கி தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் துரிஞ்சில் ஆறு வெறும் 65 கிலோ மீட்டர்தான், ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம் 55 ஊர்களில் – அங்குள்ள மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது. இதில், தமிழ் மக்களின் நீர் […]

Read more

அருமை அண்ணாச்சி

அருமை அண்ணாச்சி, வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதர்ஸ், விலைரூ.250.   தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியில் வறுமையான சூழலில் பிறந்தவர், உழைப்பை மட்டும் ஆதாரமாகக் கொண்டு, வியாபாரத்தின் மூலம் பொருள் ஈட்டி, பெருஞ்செல்வந்தராகியதை படிப்படியாக விவரிக்கும் அற்புத நுால். தவணை முறையில் பணம் வாங்கி, பொருள் விற்பனை முறையை அறிமுகப்படுத்தி, வியாபாரத்தில் வெற்றிவாகை சூடிய வி.ஜி.பி., நிறுவனர்களில் ஒருவர் வி.ஜி.பன்னீர்தாஸ். அவரது வாழ்க்கை போராட்டம் மற்றும் பொருளாதார வெற்றிகள் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. கதை சொல்வது போல், வாழ்வின் தடத்தை விவரிக்கிறது. கடித இலக்கிய […]

Read more

மகத்தான மாமனிதர்கள்

மகத்தான மாமனிதர்கள், பெ. சுபாசு சந்திரபோசு, நிவேதிதா நல்வாழ்வு கல்வி அறக்கட்டளை, விலைரூ.150. புத்தர் முதல் ஓஷோ வரை, 27 அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புதிய நோக்கில் தரும் நுால். புத்தருக்கு உலகியல் வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை என்பதை உளவியல் ரீதியாக விளக்கியுள்ளார்.எல்லாம் தெரிந்தவராக அறியப்படும் சாக்ரடீஸ், ‘ஒன்றும் தெரியாது’ என்ற தொடரை அடிக்கடி பயன்படுத்தியவர் என்ற உண்மையை விளக்குகிறது. சமத்துவச் சிந்தனையாளராக இயேசு கிறிஸ்துவைக் காட்டியுள்ளார். திருவள்ளுவர் சொன்ன பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் முத்திரை வாசகத்தைப் பிறப்பால் எல்லாரும் ஒன்று தான் […]

Read more

தகைசால் தமிழறிஞர்கள்

தகைசால் தமிழறிஞர்கள், புலவர் சுப்பு.லட்சுமணன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.200. வீரமாமுனிவர் காலம் தொட்டு, அண்மையில் மறைந்த சிலம்பொலி செல்லப்பன் வரை இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்களின் வரலாற்றுச் சுருக்கம் இந்த நுாலில் அடங்கியுள்ளது. ஆறுமுகநாவலர், வள்ளலார், பாரதி, பாரதிதாசன், வ.உ.சி., – உ.வே.சா., மறைமலை அடிகள் என பட்டியல் நீள்கிறது. பிறப்பு, கல்வி, இலக்கியப்பணிகள், மறைவு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அறிஞர்களின் பட்டியல் அகர வரிசையில் அமைந்துள்ளதும், படங்களுடன் பிரசுரம் ஆகியுள்ளதும் சிறப்பு. அறிஞர்களின் வரலாற்றைக் கூறும் நல்ல கையேடு. – பின்னலுாரான். நன்றி: தினமலர். […]

Read more

கலைஞர் என்னும் மனிதர்

கலைஞர் என்னும் மனிதர், மணா, பரிதி பதிப்பகம், விலைரூ.500. எழுத்து, நடிப்பு, ஆட்சி, கட்சியை வழிநடத்துதல் என பன்முகத் திறன்களால் மிளிர்ந்து வரலாற்றில் நிலைத்தவர் கருணாநிதி. ஆளுமை நிறைந்த மனிதர். உயர்த்தும் பண்புகளை, அவர் வளர்த்து கொண்ட விதம் பற்றி சித்தரிக்கும் நுால். வண்ணப் படங்களுடன் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பிலும், கட்சியிலும் சந்தித்த நெருக்கடிகளை சமாளித்த காலங்களில் இதழ்களுக்கு அளித்த பேட்டிகள், முக்கிய பிரமுகர்களுடனான உரையாடல், சந்திப்புகளில் சொன்ன தகவல்கள், எழுதிய பத்திகள் மற்றும் கட்டுரைகளால் நிரம்பியுள்ளது. இந்த நுாலை ஆக்கியிருப்பவர் மணா; […]

Read more
1 4 5 6 7 8 104