கவிதை ஒளி

கவிதை ஒளி, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 198, விலை 130ரூ. உரைநடை இலக்கியத்தில் தனிமுத்திரை பதித்துள்ள பேராசிரியர் இரா.மோகனின் 22 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தொன்மை இலக்கியத்திலும், புதுமைஇலக்கியத்திலும் நிறைய ஆய்வுக் கட்டுடிரைகள் எழுதியுள்ள இவர், இந்நூலில் மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ, சங்க இலக்கியம் பற்றிய கட்டுரைகள் தந்துள்ளார். ‘கவி ஆளுமைகள், கவிதைக் கீற்றுகள்’ என்ற தலைப்பிலான அத்தியாயங்களில், 13 கவிஞர்களின் சொல் ஆளுமையை, நேர்த்தியான ஒப்பீடுகளுடன் விளக்கி உள்ளார். ‘கேட்டிசின் வாழி தோழி’ என்ற குறுந்தொகை […]

Read more

செவ்வியல் இலக்கியங்கள் பன்முகப் பார்வை

செவ்வியல் இலக்கியங்கள் பன்முகப் பார்வை; தலைமைப் பதிப்பாசிரியர்: ப.முருகன்; இணைப் பதிப்பாசிரியர்:ஆ.இரமேஷ்; தொகுதி-1, பக்.520, விலை ரூ.330; தொகுதி-2 பக்.552, விலைரூ.350; தொகுதி-3, பக்.504, விலை ரூ.330; தொகுதி-4, பக்.504, விலை ரூ.320. சென்னை அரும்பாக்கம், துவாரகதாஸ் கோவர்த்தன்தாஸ் வைணவக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை மற்றும் தமிழ் இலக்கியத் துறை இணைந்து மார்ச் மாதம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள், நான்கு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 290 ஆய்வுக் கட்டுரைகள். அவற்றுள் தெலுங்குக் கட்டுரை ஒன்றும், இந்திக் கட்டுரைகள் இரண்டும், பன்னிரண்டு ஆங்கிலக் […]

Read more

ஈழத்தில் தமிழ் இலக்கியம்

ஈழத்தில் தமிழ் இலக்கியம், கார்த்திகேசு சிவத்தம்பி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 289, விலை 240ரூ. ஒரு குறிப்பிட்ட இனத்தின் மொழி வளர்ச்சி, அதன் போக்கு, அதில் வெளிப்படும் பண்பாடு ஆகியவையே அந்த மொழி பேசும் மக்களின் முழுமையான அடையாளமாக விளங்கும் என்ற அடிப்படையில் இந்த நூல் பல பகுதிகளாக தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர் இலக்கியம் கடந்த 1950 வரை தமிழக இலக்கியத்தையே சார்ந்திருந்தது. அதன் பின்னர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வளர்ந்தது. இலங்கைத் தமிழ் இலக்கியப் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. […]

Read more

தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்

தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம், க. பூரணச்சந்திரன், காவ்யா,பக்.214,விலை ரூ.210 தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சியில் தொடங்கி, தமிழ் இலக்கியத்தில் மார்க்சியம், ஃபிராய்டியம், இருத்தலியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித் இலக்கியம் போன்ற பதின்மூன்று தலைப்புகளில் ஆழமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. இலக்கியம் சமகாலச் சமூகத்தைப் பற்றி, மக்களைப் பற்றி வருணிப்பதாகவும், கவலை கொள்வதாகவும், மாறியது இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஓர் அடிப்படை மாற்றம் என்கிற கட்டுரையாளரின் கருத்து முக்கியமானது. மேலும், புத்திலக்கியங்கள் தமிழில் தோன்றுவதற்கான சூழல் 19-ஆம் நூற்றாண்டில் உருவாயிற்று […]

Read more

இலக்கியத்தில் மேலாண்மை

இலக்கியத்தில் மேலாண்மை, வெ. இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 1300ரூ. எந்த ஒரு தொரீல் என்றாலும், ஏன் விவசாயம் என்றாலும் அதில் மேலாண்மை இருக்க வேண்டும் என்பது தான் தற்போதைய உலகில் அழுத்தம் திருத்தமாக கூறப்படும் உண்மையாகும். மேலாண்மை பண்புகளை எல்லோரிடமும் வளர்ப்பதற்கு 105 தலைப்புகளில், ஒரு வழிகாட்டும் நூலாக திகழும் இந்த நூலை, சிறந்த இலக்கியவாதியும், சிறந்த பேச்சாளரும் மற்றும் அரசு பணியின் நிர்வாகி என பன்முகத் தன்மையை தன்னகத்தை கொண்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வே. இறைவன்பு எழுதிய […]

Read more
1 2