வாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை

வாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை, அழ.சுப.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 112, விலை 120ரூ. நம் இந்திய நாட்டின் வலிமை, மணமக்கள் வலது காலை எடுத்து வைத்து வருவது ஏன்? மணமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது, ஆபரணங்களின் அர்த்தம் – திருமணத்தில் யாரை எப்படி வணங்க வேண்டும்? வாழ்க்கை எது வரை, சிரிப்பு வகைகள், வாழ்க்கைக் கணிதம், புயல் உருவாவது எப்படி? நேரம் சொல்லும் பறவை, நிரந்தரம் இல்லை, உகந்த உறவினர்கள் யார்? குழந்தை பிறந்த ஒரு ஆண்டிற்குள் மொட்டை போடுவது ஏன்? […]

Read more

ஆய்வுச் சுவடுகள்

ஆய்வுச் சுவடுகள், முனைவர் யோ.ஞானச்சந்திர ஜான்சன், கீர்த்தனா பதிப்பகம், பக். 339, விலை 250ரூ. தமிழ் இலக்கியம் ஒரு காலத்தில் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் எனப் பகுத்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்தப் பகுப்பையும் தாண்டி, சமய இலக்கியம் என்னும் பகுப்பும் தோன்றியது. சமய இலக்கியங்களில் ஐரோப்பியரின் வருகைக்குப் பின், கிறிஸ்துவ இலக்கியங்கள் தமிழில் தோன்றி, தமிழ் மொழிக்குப் புது மறுமலர்ச்சியைக் கொடுத்தன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என்னும் நிலையைக் கடந்து, தற்கால உரைநடை இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கின. அந்தக் கிறிஸ்துவ […]

Read more

கோவை ஞானியின் திறனாய்வு நெறி

கோவை ஞானியின் திறனாய்வு நெறி (வாசிப்பும் மதிப்பீடும்),  தொகுப்பாசிரியர்கள்: க.ஜவகர், கு.முத்துக்குமார், சோ.பிலிப்சுதாகர், புதுப்புனல், பக். 160, விலை ரூ.200 கலை, இலக்கியம், தத்துவம் சார்ந்த தனது தனித்தன்மையான பார்வைகளை முன் வைக்கும் கோவை ஞானியின் நாவல், கவிதை, மெய்யியல் தொடர்பான கருத்துகளை விரிவாக எடுத்துக் கூறி அவற்றைப் பற்றிய சிந்தனைகளைத் தூண்டுவிதமாக எழுதப்பட்ட 11 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. இலக்கியம், கோட்பாட்டு விவாதங்கள் மனித விடுதலையை நோக்கியதாக அமைய வேண்டும் என்பதே ஞானியின் இலக்கியத் திறனாய்வு நெறியாகும். அவரிடம் மார்க்சியம் மண்ணுக்கேற்ற மார்க்சியமாக, […]

Read more

ஆன்லைன் ராஜா

ஆன்லைன் ராஜா, எஸ்.எல்.வி.மூர்த்தி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.175 தமிழில் மேலாண்மை எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவரான எஸ்.எல்.வி.மூர்த்தி ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘வணிக வீதி’ இணைப்பிதழில் எழுதிய தொடரின் புத்தக வடிவம். உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனருமான சீனாவைச் சேர்ந்த ஜாக் மா பற்றிய இந்தத் தொடர் வெளிவரும்போதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நன்றி: தமிழ் இந்து, 25/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

காளி

 காளி, ச.விசயலட்சுமி, பாரதி புத்தகாலயம், விலை: ரூ.130 அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாடுகள் நான்கு கவிதைத் தொகுப்புகளும், இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் தந்த ச.விசயலட்சுமி ‘காளி’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் புனைவுலகில் களம் இறங்கியிருக்கிறார். ஆப்கன் பெண்களின் வாய்மொழிப் பாடலான லண்டாய் கவிதைகளை முதன்முதலில் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இவரது பெரும்பாலான கதைகளில் விளிம்புநிலை மாந்தர்களே மையமாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்கள். சென்னை கூவம் சார்ந்த மக்களின் வாழ்க்கையானது யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகளில் பதிவாகியிருக்கின்றன. இக்கட்டான சூழ்நிலைகளை இவரது பெண் […]

Read more

தமிழாற்றுப்படை

தமிழாற்றுப்படை, கவிஞர் வைரமுத்து, திருமகள் நிலையம், பக். 360, விலை 500ரூ. தமிழ்மொழியின் அகவை, 3,000 ஆண்டுகளுக்கும் மேல். அந்தத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தோர், இலக்கியம் படைத்தோர், நீதிநுால் செய்தோர், காப்பியம் கண்டோர், அறநுால் ஆக்கியோர், பேரிலக்கியமாய்ப் போரிலக்கியம் படைத்தோர், அடைபட்டுக் கிடந்த மொழிச் செல்வங்களை மீட்டெடுத்தோர், இதன் தொன்மையை ஆராய்ந்து அறிவித்தோர், சீர்திருத்தம் செய்து மொழியைச் செப்பனிட்டோர், தெய்வம் தொழுதோர், பகுத்தறிவு பரப்பியோர், பொதுவுடைமை பேசியோர், கலையிலும் அரசியலிலும் தமிழுக்குத் தகுதி தந்தோர் இப்படித் தமிழ்ப்பணி ஆற்றிய, 24 ஆளுமைகள் குறித்து, கவிஞர் […]

Read more

ஆய்வுச் சுவடுகள்

ஆய்வுச் சுவடுகள், முனைவர் யோ. ஞானச்சந்திர ஜான்சன், கீர்த்தனா பதிப்பகம், பக். 339, விலை 250ரூ. தமிழ் இலக்கியம் ஒரு காலத்தில் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் எனப் பகுத்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்தப் பகுப்பையும் தாண்டி, சமய இலக்கியம் என்னும் பகுப்பும் தோன்றியது. சமய இலக்கியங்களில் ஐரோப்பியரின் வருகைக்குப் பின், கிறிஸ்துவ இலக்கியங்கள் தமிழில் தோன்றி, தமிழ் மொழிக்குப் புது மறுமலர்ச்சியைக் கொடுத்தன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என்னும் நிலையைக் கடந்து, தற்கால உரைநடை இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கின. அந்தக் […]

Read more

பசுமை நிறைந்த நினைவுகளே

பசுமை நிறைந்த நினைவுகளே, எல்.முருகராஜ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலை 450ரூ. பிரிக்க முடியாதது வாரமலரும் வாசகர்களும் என்பதற்கேற்ப, 25 ஆண்டுகளாக வாசகர்களை குற்றாலத்திற்கு அழைத்துச் செல்லும் மாபெரும் பணியை செய்து வருகிறது, ‘தினமலர்’ வாரமலர். மூலிகைகளுடன் நம்மை தொட்டு விளையாடும் குற்றாலம் அருவிக்கு மட்டும் கூடுதல் வரம் கொடுக்கப்பட்டிருக்கிறது போல. மழையின் சாரலுடன் அருவியின் சாரலும் இணைந்து ஏற்படுத்தும் அனுபவம், வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பரவசம். அந்த குற்றாலத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்லும், ‘தினமலர்’ குழுவுடன் இணைந்து பயணித்து வரும் […]

Read more

தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்

தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும், ஆர்.நல்லகண்ணு, பத்மா பதிப்பகம், பக். 200, விலை 190ரூ. தமிழகம் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு உள்ளாகும் என்பதை முன்னதாகவே அறிந்து, நீர் நிலைகளை வளமாக்கும் திட்டங்களை கட்டுரை வடிவில் கொண்டு சென்ற மூத்த அரசியலாளர் இவர். உழவர்களின் தோழர் என்ற போற்றுதலுக்கு உரியவர். தமிழகத்தின் வறட்சியைப் போக்கும் வழி, கங்கை – காவிரி இணைப்பு, சேது கங்கா இணைப்பு, நெஞ்சம் குளிரும் நீர் வழிகள் உள்ளிட்டவை, நீர்வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விதைப்பதாக உள்ளன. காவிரி உரிமையைக் காப்போம், தாமிரபரணியின் […]

Read more

அழகு ஏன் அழகாயிருக்கிறது?

அழகு ஏன் அழகாயிருக்கிறது?, அழகின் நரம்பியல், உளவியல் விளக்கம் – க.மணி;  அபயம் பப்ளிஷர்ஸ்,பக்.106, விலை ரூ.50 மனித வாழ்க்கையின் அடிப்படையாகத் தன்னைப் பேணுவதும், தன்னைப் போல் இன்னொன்றைப் பிறப்பிப்பதும் இருக்கின்றன.  இந்த இரண்டும் எல்லா மிருகங்களுக்கும் பொதுவானவை என்றாலும், மனிதனிடம் விளையாட்டும், கலை உணர்வும் இருப்பதுதான் மிருகங்களிடமிருந்து அவனைப் பிரித்துக் காட்டுகிறது. கலையின் மேற்பூச்சுக்குப் பின் காமம் மறைந்திருக்கிறது.பரதநாட்டியம், நாடகம், தெருக்கூத்து, கரகாட்டம் போன்றவற்றில் மெலிதாகக் காமம் இழையோடுவதைப் பார்க்க முடியும். அவை காம இச்சையின் வடிகால்கள்தானே என்கிறார் நூலாசிரியர். கலையோடு தொடர்புபடுத்தி […]

Read more
1 39 40 41 42 43 88