இந்தியக் கல்வியின் இருண்டகாலம்

இந்தியக் கல்வியின் இருண்டகாலம், தொகுப்பு ஆசிரியர் நா.மணி, பாரதி புத்தகாலயம், விலை 80ரூ. தேசியக் கல்விக்கொள்கை (வரைவு) 2019 வெளியாகி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த நேரத்தில், அவசிய தேவையாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து கல்வியாளர்கள் பலர் தெரிவித்து இருக்கும் ஆணித்தரமான கருத்துக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். நன்றி: தினத்தந்தி, 14/8/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029654.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை, புதுயுகன், வானதி பதிப்பகம், பக். 232, விலை 200ரூ. லண்டன் கல்வியாளர், எழுத்தாளர் புதுயுகனின் தன்னம்பிக்கை நுால் இது. வித்தியாசமான பார்வையில், வித்தியாசமான சிந்தனையில், வாழ்வியல் நெறிமுறைகளை மையப்படுத்துவதில் தமிழ் தன்னம்பிக்கை நுால்களில் தனித்துவம் பெறுகிறது இந்நுால். ‘நல்ல மனப்பான்மை இருந்தால் வாழ்க்கையின் உள்ளேயே ஒரு புதிய வாழ்க்கை புலப்படும்,-3டி போல, தனது தனித்துவத்தை துல்லியமாக புரிந்து கொண்ட நொடியில் ஒரு உலகச்சாம்பியன் உருவாகிறான்’ என்பது போன்ற தத்துவரீதியான தன்னம்பிக்கை சிந்தனைகள் ஏராளம். ‘கல்வியை பொறுத்தவரை நமக்கு யானைப்பசி வேண்டும்’ […]

Read more

பறவையியல்

பறவையியல்,  வ.கோகுலா, சி.காந்தி,  ஜாஸிம் பப்ளிகேஷன், பக்.200, விலை ரூ.300. நம் மனதைக் கவரும் பறவைகளைப் பற்றிய அறிவியல்பூர்வமான பல உண்மைகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறது இந்நூல். நூலின் முதற்பகுதியில் இந்த உலகம் தோன்றிய முறை, உயிரினங்கள் தோன்றியது, கண்டங்கள் இடம் பெயர்ந்தது, பறவையினங்களின் தோற்றம் ஆகிய விவரங்கள் அடங்கியுள்ளன. அரிஸ்டாட்டில் பறவைகளைப் பற்றிய குறிப்புகளை தனது விலங்குகளின் வரலாறு நூலில் சேர்த்ததை பறவையியல் ஆய்வின் தொடக்கமாக கருதும் நூலாசிரியர், அதற்குப் பின் நடந்த ஆய்வுகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். பறவைகளின் இறகுகள் எம்மாதிரி அமைந்துள்ளன? […]

Read more

குரங்கு கை பூமாலை

குரங்கு கை பூமாலை, ஈரோடு அறிவுக்கன்பன், காவ்யா, விலை 270ரூ. இன்றைய சமுதாய வளர்ச்சியால் ஏற்பட்டுக் கொண்டு இருக்கும் துன்ப விளைவுகளைச் சுட்டிக் காட்டி, அவற்றில் இருந்து விடுபடுவது எப்படி என்ற கருத்துக்களையும் கொண்ட கட்டுரைத் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. நாகரிக வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் என்ற பெயரில் மனிதர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட அவலங்களை இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் நயம்பட விவரிக்கின்றன. நீர், நிலம், காற்று ஆகியவைகளில் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் சுற்றுச் சூழல் […]

Read more

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 370ரூ. பழங்கால தமிழ்ச் சமுதாயத்தில் அறங்களின் தோற்றம் எவ்வாறு ஏற்பட்டது, அறத்தின் மரபுகள், தொல்காப்பிய அறம் உள்ளிட்ட பல்வேறு அறங்களின் உருவாக்கம், அவை பரவிய வரலாறு மற்றும் சங்க காலத் தமிழ்ச் சங்க வரலாறு ஆகியவை ஆய்வு நோக்கில் தரப்பட்டுள்ளன. தமிழ் ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் பயன் அளிப்பதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 24/7/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029562.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக்குறிப்புகள்

ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக்குறிப்புகள், பதிப்பாசிரியர் சிற்பி, சாகித்திய அகாதெமி வெளியீடு, விலை 260ரூ. கலைக்களஞ்சியனின் கதை இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாகக் காரணமானவர் பல்துறை அறிஞரான பெரியசாமித் தூரன். முதுமைக் காலத்தில் நோய்ப்படுக்கையிலிருந்து அவர் கூறிய எண்ணப் பதிவுகளைக் குடும்பத்தாரிடமிருந்து பெற்றுத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் சிற்பி பாலசுப்பிரமணியம். கலைக்களஞ்சியம் உருவான கதையை மட்டுமல்ல, அதற்காக தூரன் செய்த தியாகங்களையும் சொல்கிறது இந்தத் தொகுப்பு. குடும்பச் செலவுக்குப் போதாத ஊதியத்தில்தான் கலைக்களஞ்சியத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார் தூரன். எனினும், இருமடங்கு ஊதியத்தில் வானொலியில் கிடைத்த […]

Read more

இனிப்பு மருத்துவம்

இனிப்பு மருத்துவம், கு.கணேசன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 200ரூ. நம் வீட்டுக்குள் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் நமக்குத் தருகின்றன. ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்பதுபோல்தான் இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடம் உரையாடுகின்றன. கதையைச் சொல்லிக்கொண்டே நறுக்கென்று நமக்கு அவசியமான ஒரு ஊசியையும் போட்டுவிடுகிறார் டாக்டர் கு.கணேசன். மருந்தும்.. மகத்துவமும்…! நன்றி: தமிழ் இந்து, 13/7/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

தற்காலத் தமிழ் நாட்டு வரலாறு 1801 – 2018

தற்காலத் தமிழ் நாட்டு வரலாறு 1801 – 2018, பேரா.அ.ராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்., விலை 395ரூ. ஆங்கிலேயர் ஆட்சியில், தமிழ்நாடு என்னும் முதல் பாகத்தில் ஆர்க்காடு நவாபின் ஆட்சி, 1710ல் துவங்கி, 1962ல், புதுச்சேரி பிரெஞ்சு பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது வரை, 14 தலைப்புகளில் அமைந்துள்ளது. விடுதலைக்குப் பின், தமிழகம் என்னும் இரண்டாம் பாகத்தில் தமிழக – ஆந்திர எல்லைப் பிரச்னை துவங்கி, 2018ல் காவிரி நதி நீர் நடுவம் அளித்த தீர்ப்பு வரை, எல்லாவற்றையும் விபரமாக எடுத்தாளப்பட்டு உள்ளது. பிற […]

Read more

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம், தாயம்மாள் அறவாணன், பக். 704, விலை 600ரூ. அன்புக்குரிய துணைவர் அறிஞர் அறவாணனுக்கு இந்த நுாலை காணிக்கையாக்கி, பெருமை சேர்த்திருக்கிறார் ஆசிரியர் தாயம்மாள், தமிழகத்தில், பல அவ்வையார்கள் விட்டு சென்ற அறநுால் பதிவுகள் அனைத்திற்கும் விளக்கமாக இந்த நுாலை எழுதியிருக்கிறார். அவ்வை என்ற சொல் வயதில் மூத்தவள், தமக்கை, பெண் துறவி ஆகியவற்றை குறிக்க வழங்குகிறது. சங்க கால அவ்வை தொடங்கி, பல அவ்வையார் வாழ்ந்திருக்கலாம் என்பதை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். காதல் பாடல்களை அவ்வை பாடியதாக குறிக்கும் ஆசிரியர் […]

Read more

நேற்று இன்று நாளை

நேற்று இன்று நாளை, இ.இருதய வளனரசு, ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ், பவளவிழா வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம், பக். 96, விலை 75ரூ. இந்நுாலினுள் பவளவிழா காணும் பள்ளியின் வரலாறு, முன்னாள் மாணவர் மன்றத்தின் பணியும் பயணமும், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தின் அடிச்சுவடுகள், தே பிரித்தோ பள்ளியின் அரிய நிழற்படங்கள் போன்றவற்றை தொகுத்து தந்திருப்பது, நுாலுக்கு அணி சேர்க்கிறது. நேற்றைய கலை இலக்கிய ஆளுமைகளைப் போற்றி பெருமைப்படுத்தவும், இன்றைய கலை இலக்கியச் சாதனைகளைப் பாராட்டி அடையாளப்படுத்தவும், நாளைய கலை இலக்கிய இளவல்களை ஊக்கப்படுத்தி […]

Read more
1 40 41 42 43 44 88