சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும், சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், பக். 136, விலை 125ரூ. மவுரிய வம்சம் இந்திய அரசியலில் மேலோங்கி விளங்கக் காரணமாயிருந்த, சாணக்கியரின் அர்த்த சாஸ்திர நுால் சமஸ்கிருத ஓலைச்சுவடிகளால் ஆனது. சென்ற நுாற்றாண்டில் அச்சு வடிவம் பெற்று பல மொழிகளில் பெயர்க்கப்பட்ட அது மீண்டும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கன்று ஈனாத மலட்டுப் பசுவுக்கும், கறவை நின்ற பசுவுக்கும் மதிப்பு உண்டா… இல்லை; அது போல கல்வியறிவு இல்லாத மகனாலும், கடவுள் பக்தி இல்லாத மகனாலும் யாது பயன்? காஞ்சிபுரம் […]

Read more

அழகிய வாழ்வுக்கு 1330

அழகிய வாழ்வுக்கு 1330, மெய்ஞானி பிரபாகரபாபு, குறளகம், பக். 152, விலை 170ரூ. பொய்யாமொழி புலவர் இயற்றிய மறை நுால் அதிகார வரிசையே இந்நுாலிலும் பின்பற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்பிலும் மூலக் குறளுடன் பொருந்தும் பொன்மொழியே தரப்பட்டுள்ளது. திருக்குறளின் அந்தந்த அதிகாரங்கள் மற்றும் குறள்களோடு பொருந்திப் படிக்க உதவும் பொக்கிஷம், ‘குறள்நெறி சார்ந்த பொன்மொழி கள்’ அடங்கிய நுால் என்று சொல்லலாம். நன்றி: தினமலர், 14/7/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

நதியும் நதி சார்ந்த கொள்ளையும்

நதியும் நதி சார்ந்த கொள்ளையும், திலகபாமா, காவ்யா, பக். 104, விலை 100ரூ. இந்த, 50 ஆண்டுகளில் இயற்கையோடு வாழ்ந்த காலம் போய், இயற்கையை விற்கத் துவங்கிவிட்ட காலமாக மாறி, நதி என்றாலே வறண்ட நிலமாகவும், லாரிகள் நிற்கும் இடமாகவும் மாறிவிட்டது’ என, வருந்துகிறார் நுாலாசிரியர். ஒரு லாரி மணல், 40 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதையும், நீதிமன்ற உத்தரவுகளை உதாசீனப்படுத்தி, அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், லாரி உரிமையாளர்களும் அடிக்கும் கொள்ளைகளையும் ஆதாரங்களோடு பட்டியலிட்டுள்ளார். ‘மணலில் இருந்து, எம்.சாண்டுக்கு மாறுவதற்கான தன்னம்பிக்கையை மக்களுக்கு வழங்க அரசு […]

Read more

குரங்கு கை பூமாலை

குரங்கு கை பூமாலை, ஈரோடு அறிவுக்கன்பன், காவ்யா, பக்.264, விலை ரூ.270. சுற்றுச்சூழல் கேடு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து உலகம் முழுவதும் பேசப்படுகிறது. சுற்றுச்சூழல் கேடுகளுக்கான காரணங்களும், தீர்வுகளும் பலவிதமாகக் கூறப்படுகின்றன. இந்த நூல் சுற்றுச்சூழல் கெட்டுப் போனதிற்கான உண்மையான காரணங்களைச் சொல்கிறது. அதற்கு பல்வேறு சான்றுகளையும் எடுத்துக்காட்டுகிறது. சர்க்கரை தொழிற்சாலை, சாராய தொழிற்சாலை, பெட்ரோலியம் தொழிற்சாலை, தோல் பக்குவப்படுத்தும் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை,துணிகளை உருவாக்கும் தொழிற்சாலை, வேதியல் பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலை, பால் மற்றும் அதன் துணைப்பொருள் தொழிற்சாலை ஆகியவை வெளியேற்றும் கழிவுகள், […]

Read more

வாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை

வாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை, அழ.சுப.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 120ரூ. நம் இந்திய நாட்டின் வலிமை, மணமக்கள் வலது காலை எடுத்து வைத்து வருவது ஏன்? மணமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது, ஆபரணங்களின் அர்த்தம் – திருமணத்தில் யாரை எப்படி வணங்க வேண்டும்? வாழ்க்கை எது வரை, சிரிப்பு வகைகள், வாழ்க்கைக் கணிதம், புயல் உருவாவது எப்படி? நேரம் சொல்லும் பறவை, நிரந்தரம் இல்லை, உகந்த உறவினர்கள் யார்? குழந்தை பிறந்த ஒரு ஆண்டிற்குள் மொட்டை போடுவது ஏன்? தோல்வி பெறுபவர் […]

Read more

ஆய்வுச் சுவடுகள்

ஆய்வுச் சுவடுகள், முனைவர் யோ.ஞானச்சந்திர ஜான்சன், கீர்த்தனா பதிப்பகம், விலை 250ரூ. தமிழ் இலக்கியம் ஒரு காலத்தில் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் எனப் பகுத்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்தப் பகுப்பையும் தாண்டி, சமய இலக்கியம் என்னும் பகுப்பும் தோன்றியது. சமய இலக்கியங்களில் ஐரோப்பியரின் வருகைக்குப் பின், கிறிஸ்துவ இலக்கியங்கள் தமிழில் தோன்றி, தமிழ் மொழிக்குப் புது மறுமலர்ச்சியைக் கொடுத்தன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என்னும் நிலையைக் கடந்து, தற்கால உரைநடை இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கின. அந்தக் கிறிஸ்துவ இலக்கியங்கள் பற்றிய […]

Read more

தேவரடியார்

தேவரடியார், கலையே வாழ்வாக, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 250ரூ. 1947-ம் ஆண்டு வரை தமிழகக் கோவில்களில் இறைவனுக்கு சேவை செய்வதற்காக நேர்ந்து விடப்பட்ட பெண்கள் பற்றிய ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது. பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளர் அ.வெண்ணிலா, முனைவர் பட்டத்திற்காக தமிழக வரலாற்றை தீவிரமாக ஆய்வு செய்து, தேவதாசிகள் எனப்படும் தேவரடியார்கள் பற்றிய மிக விஸ்தாரமாக எழுதியுள்ள இந்த நூலில் வியப்பான பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. கோவில்களில் ஏராளமாகக் காணப்படும் கல்வெட்டுகள், செப்பேடுகள், பழங்கால இலக்கியங்கள் என்று அனைத்து விதமான தரவுகளில் […]

Read more

பாரதியின் செல்லம்மாள்

பாரதியின் செல்லம்மாள், புலவர் சி.வெய்கை முத்து, கற்பகம் புத்தகாலயம், பக். 176, விலை 150ரூ. நுாலாசிரியர் – கடையம் – சத்திரம் மேல்நிலைப் பள்ளியில், 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின், மகாகவி பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்தில் ஆசிரியர் பணியாற்றிய போது, கிடைத்த அனுபவத்தாலும், அங்கு வாழ்ந்து வரும் பல சான்றோர்களிடத்தில் செல்லம்மாளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டும் இந்நுாலைப் படைத்துள்ளார்! செல்லம்மாள் பாரதி (1890 – 1955) பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை! மஹாகவியின் மஹா […]

Read more

பாதை எங்கும் பாடங்கள்

பாதை எங்கும் பாடங்கள், பேராசிரியர் க. ராமச்சந்திரன், நர்மதா பதிப்பகம், விலை 70ரூ. தினத்தந்தி இளைஞர் மலரில் பேராசிரியர் க. ராமச்சந்திரன் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு. வாழ்க்கை ஒரு பயணம். அந்தப் பயணத்தில் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும். வெற்றியிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். தோல்வியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். “கற்றுக்கொள்ள பாதை எங்கும் பாடங்கள் உள்ளன” என்று கூறும் ஆசிரியர், “நதியின் ஒட்டமாய் உன் பயணம் இருக்கட்டும். “எந்த நதியும் தன் பயணத்தில் திரும்பி வர நினைப்பதில்லை. நதிக்கு […]

Read more

தமிழ் நூல் வரலாறு

தமிழ் நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், பக். 458, விலை 300ரூ. சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை வெளிவந்துள்ள தமிழ் நுால்களின் வரலாற்றையும், தமிழ் மக்களின் வரலாற்றையும், 74 தலைப்புகளில் இந்த நுால் விளக்குகிறது. நிகண்டுகளின் வரலாற்றையும், சைவ மடங்களின் தமிழ்த் தொண்டினையும், தனித்தனித் தலைப்புகளில் விளக்குவது இந்த நுாலின் சிறப்பு. தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ் இலக்கிய வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புவோருக்கும் மிகச்சிறந்த கையேடாக விளங்கும் இந்த நுால் மிக எளிய தமிழ் நடையில் […]

Read more
1 42 43 44 45 46 88