ஏழு ராஜாக்களின் தேசம்

ஏழு ராஜாக்களின் தேசம்,  அபிநயா ஸ்ரீகாந்த், யாவரும் பப்ளிஷர்ஸ், பக்.248, விலை ரூ.275. தூத்துக்குடியைச் சேர்ந்த நூலாசிரியர், கணவரின் வேலை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் இரண்டு ஆண்டுகள் வாழும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அந்த அனுபவங்களின் அடிப்படையில், துபாய், ஷார்ஜா, அபுதாபி, அஜ்மான், உம் அல் குவைன், புஜைரா, ராஸ் அல் கைமா என்ற ஏழு ஐக்கிய அரபு நாடுகளைப் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய நூலை எழுதியிருக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளில் யார் வேண்டுமானாலும் தொழில் வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம்; ஆனால் அமீரகக் குடியுரிமை […]

Read more

திருவருட்குறள் (மூலமும் உரையும்)

திருவருட்குறள் (மூலமும் உரையும்),  ஆளரியார் என்ற ஆதிநரசிம்மன், மணிவாசகர் பதிப்பகம், பக்.799, விலை ரூ.750. கால வகையினான் புதியன புகுதல்என்பது இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒன்று. திருவள்ளுவரின் திருக்குறளை அடியொற்றியும், அடித்தளமாகவும் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முப்பால்களையும், 366 அதிகாரங்களையும் கொண்டு, இயலுக்கு பத்து குறள்களாக, அதிகாரப் பெயர்களில் சில மாற்றங்களுடன் அமைந்துள்ளது. கற்புடைமை (13) அதிகாரத்தில், கற்புடைய பொற்புடையார் நல்லுருச் செய்துலகு/ கற்கோட்டம் கட்டித் தொழும் என்றும், கணவன்-மனைவி கடன் எனக் கூறும் (22) அதிகாரத்தில், படிப்பும் பதவியும் பட்டமும் வாசல்/ படியிலே விட்டுள்வரல் […]

Read more

விலங்குகளைப் பற்றிய வியப்பான செய்திகள்

விலங்குகளைப் பற்றிய வியப்பான செய்திகள், டி.என்.இமாஜான், மணிமேகலைப் பிரசுரம், விலை 70ரூ. விலங்குகள் பற்றி பலரும் பொதுவில் அறிந்திராத வியக்கத்தக்க தகவல்களின் துணுக்குத் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. ஒட்டகங்கள் மாலை 6 மணிக்கு மேல் எதையும் சாப்பிடாது. வாழ்நாள் முழுவதும் நீரை அருந்தாத மிருகம் கங்காரு எலி. சிங்கத்தின் கர்ஜனை பல கிலோமீட்டர் தூரத்திற்குக் கேட்கும் என்பது போன்ற ஏராளமான தகவல்கள் இந்த நூலில் இருக்கின்றன. விலங்குகளின் சங்க காலப் பெயர்கள் விவரமும் தரப்பட்டுள்ளன. இடையிடையே காணப்படும் விலங்குகள் தொடர்பான நகைச்சுவை துணுக்குகள் […]

Read more

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை, புதுயுகன், வானதி பதிப்பகம், விலை 200ரூ. உயர்கல்வித் துறையில் ஏற்படும் சவால்களை இளைஞர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது சுவைபட கொடுக்கப்பட்டுள்ளது. கனவு, திறமை, பண்பு ஆகியவை சமமாக அமையப்பெற்றால் அதுவே வெற்றியின் அடையாளம் என்பதை ஆசிரியர் தெளிவுபடக்கூறி இருக்கிறார். இளைய சமுதாயத்துக்கு இந்த நூல் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 10/4/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027747.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

சைவத் தமிழ்

சைவத் தமிழ், தொகுப்பு பேராசிரியர் சண்முகசுந்தரம், காவ்யா, விலை 900ரூ. சைவ சித்தாந்தத்தின் சிறப்பு, அதன் வரலாறு ஆகியவற்றை ஆய்வு செய்த தமிழ் அறிஞர் அவ்வை துரைசாமிப் பிள்ளை எழுதிய நான்கு நூல்களின் தொகுப்பாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. தமிழ்ச் செல்வம், சைவ இலக்கிய வரலாறு, அவ்வைத் தமிழ், தமிழ்த் தாமரை ஆகிய தலைப்புகளில் அவ்வை துரைசாமிப் பிள்ளை ஆகிய நூல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் சைவத் தமிழ்த் தொண்டாற்றிய பல பெருமகனார்களைப் பற்றிய அரிய செய்திகளை இந்த நூல் தாங்கி […]

Read more

ஜீவா பார்வையில் கலை இலக்கியம்

ஜீவா பார்வையில் கலை இலக்கியம், கே.ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக்.240, விலை ரூ.225. தமிழகப் பொதுவுடமை இயக்கத்தின் தலைவர்களில் முக்கியமானவராக இருந்த ப.ஜீவானந்தம், பிற பொதுவுடமை இயக்கத் தலைவர்களில் இருந்து வித்யாசமானவர். கலை, இலக்கியம் தொடர்பாக அவர் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் இலக்கியம் பற்றி பேசாத, கவனத்தில் கொள்ளாத காலத்தில் கம்பனில் காணப்படும் ஜனநாயகக் கருத்துகளை, பொதுவுடமைக் கருத்துகளைப் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி எல்லாம் ஜீவா பேசியிருக்கிறார்; எழுதியிருக்கிறார். அவை தொடர்பான […]

Read more

தொல்காப்பிய எழுத்தியல் சிந்தனைகள்

தொல்காப்பிய எழுத்தியல் சிந்தனைகள், ச.சுபாஷ் சந்திரபோஸ். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்., பக். 214. விலை ரூ.175. தொல்காப்பிய எழுத்தியல் தொடர்பான பல கேள்விகளுக்கு இந்நூல் விளக்கமளிக்கிறது. எழுத்தியலில் உள்ள பல சொற்களுக்குத் தீர்வு கூறுகிறது. தமிழ் எழுத்துகளின் வைப்பு முறை, உயிர்மெய், தன்னொற்று மிகுதல், இனவொற்று மிகுதல், எழுத்துகளின் இழப்பு, புணர்ச்சியும் உறழ்ச்சியும், புணர்ச்சி விதி இல்லாப் புணர்ச்சிகள், எழுத்துப் பேறும் சாரியையும், அண்ணவினம் ஆதல் ஆகிய ஒன்பது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. உலகிலுள்ள, எழுத்துள்ள மொழிகள் அனைத்திலுமே ஒன்றிற்கு ஒன்று வரி […]

Read more

ஆன்மா என்னும் புத்தகம்

ஆன்மா என்னும் புத்தகம், என்.கௌரி, இந்து தமிழ் திசை வெளியீடு,  விலை: ரூ.130 உலகெங்கும் பெரு மதங்களில் தொடங்கி அந்த மதங்களின் உட்பிரிவுகள், சிறு மதங்கள் என்று ஆன்மிகம் தொடர்பாகக் கணக்கற்ற நூல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த ஆன்மிகச் செல்வங்களிலிருந்து 30 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில் வாரந்தோறும் கௌரி எழுதிய அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்தக் கட்டுரைகளைப் படிப்பதே அந்த ஆன்மிகப் புத்தகங்களின் சாரத்தைப் படிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. நன்றி: தமிழ் இந்து, 15/6/19. […]

Read more

சோழன் ராஜா ப்ராப்தி

சோழன் ராஜா ப்ராப்தி, எஸ்.எஸ். சிவசங்கர், அந்திமழை, விலை 140ரூ தமிழக அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தனது அரசியல் வாழவிலும் அன்றாட நடைமுறையிலும் சந்தித்துப் பழகியவர்கள் மற்றும் கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர், இளையராஜா, சோழ மன்னர் ராஜராஜன் உள்பட பலர் தன் மீது ஏற்படுத்திய தாக்கத்தை சிறந்த கட்டுரைகளாக ஆக்கித் துந்து இருக்கிறார். அரசியல்வாதி என்றாலும், கட்சி அரசியல் வாடை எதுவும் இல்லாமல் அவர் தந்து இருக்கும் கட்டுரைகள், அனைத்து தரப்பினரும் படித்து ரசிக்கும் வகையில் உள்ளன. […]

Read more

எழுத்தாள்பவர்கள் ஒரு பார்வை

எழுத்தாள்பவர்கள் ஒரு பார்வை, வெ.ராம்குமார், வைகை பதிப்பகம், விலை 200ரூ. பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள், தொழில் அதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரில் பலர், ஆர்வம் காரணமாக எழுத்தாளர்களாகவும் பரிணமிக்கிறார்கள். அவர்களில் சுமார் 100 பேர்களை அறிமுகப்படுத்துவது போல அவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டித் தந்து இருக்கிறார் ஆசிரியர். வளரும் நிலையில் உள்ள எழுத்தாளர்களையும் எழுத்துலகுக்கு வரத்துடிப்பவர்களையும் ஊக்கப்படுத்தும் வண்ணம் இந்த நூல் அமைந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 15/5/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more
1 43 44 45 46 47 88