மார்க்சியம் என்றால் என்ன

மார்க்சியம் என்றால் என்ன, சு.பொ.அகத்தியலிங்கம், பாரதி புத்தகாலயம், விலை 120ரூ. திரைப்பாடல்கள் வழியே மார்க்ஸியம் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடங்கும் அறிமுகம், சித்தாந்தங்களைப் பயில வேண்டியதன் அவசியத்தைத் திரைப்படப் பாடல் வரிகளை எடுத்துக்காட்டி எளிமையாக விளக்குகிறது. இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் சங்கப் பாடல்கள், பாரதியார் பாடல்களின் துணையோடு விளக்குகிறது. இந்திய தத்துவ ஞானத்தை மேற்கத்திய தத்துவ முறைமைகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிறது. மனித வரலாறு என்பது உற்பத்தி முறையோடு நெருங்கிப் பிணைந்தது. ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்திலிருந்து காலம்தோறுமான உற்பத்தி அமைப்புகளை விவரித்து மனித சமுதாயம் […]

Read more

அறியப்படாத தமிழ்மொழி

அறியப்படாத தமிழ்மொழி, கண்ணபிரான் இரவிசங்கர் தடாகம் வெளியீடு, விலை: ரூ.250 கல்தோன்றி மண்தோன்றாச் சமூகமா தமிழினம் என்பதில் தொடங்கி இலக்கண அரசியல், நாட்டுப்புறத் தமிழ் என்று விரிகிறது இந்நூல். திருக்குறளில் முரண்பாடுகளா, அணுவைத் துளைத்ததை அவ்வை கண்டுபிடித்துவிட்டாளா, மாயோனும் சேயோனும் யார், எது முதல் திணை, தமிழை மறைத்தது எப்படி என்று விறுவிறுப்பான மொழியில் விவரிக்கிறார். சித்திரையா – தையா எது புத்தாண்டு, திராவிடமா – தமிழா, தொல்காப்பியத்தில் சாதி உண்டா, ஜாதிக்கும் சாதிக்கும் வேறுபாடு என்ன போன்ற விளக்கங்கள் சுவாரசியம் மிகுந்ததாக இருக்கின்றன. […]

Read more

சிவப்புக் கிளி

சிவப்புக் கிளி, வசுதேந்திரா,  தமிழில் யூமா வாசுகி, பாரதி புத்தகாலயம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நம் அனைவரது வாழ்வையும் நேரடியாகத் தீண்டத் தொடங்கிவிட்ட நிலையிலும், அவற்றைக் குறித்த அடிப்படை உணர்வு அற்றவர்களாகவே பெரும்பாலோர் இருக்கிறோம். இயற்கையையும் நம் வாழ்க்கையையும் எப்படிப்பட்ட அவலமான வகையில் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அழுத்திச் சொல்லும் கதைகளில் ஒன்று ‘சிவப்புக் கிளி’. நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

நாங்கள் நடந்து அறிந்த காடு

நாங்கள் நடந்து அறிந்த காடு, தமிழில் வ.கீதா, தாரா வெளியீடு, விலை 250ரூ. மரபு அறிவு பெரும்பாலான நவீனத்துவவாதிகளால் துச்சமாகக் கருதப்படுகிறது. ஆனால், மரபு அறிவு எனும் பொக்கிஷம் எப்படிப்பட்டது. அது எவ்வளவு முக்கியமானது என்பதை ஆனைமலைக் காட்டுப் பகுதிகளில் வாழும் காடர் பழங்குடியினரின் சிலரது வார்த்தைகள் வழியாகக் கதைபோலக் கோத்துத் தந்துள்ளனர் மாதுரி ரமேஷும் மனிஷ் சாண்டியும். இதை எழுத்தாளர் வ.கீதா சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

விதை அரசியல்

விதை அரசியல், பாமயன், தமிழினி வெளியீடு, விலை 95ரூ. இடுபொருட்களை விற்பனைசெய்து வேளாண்மையில் இனிமேலும் பெரும் லாபம் சம்பாதிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட பன்னாட்டு நிறுவனங்கள், அடிமடியில் கை வைக்கும் விதமாக விதை வியாபாரத்தை கையில் எடுத்துள்ளன. இது எப்படிப்பட்ட பேரழிவுக்கு இட்டுச்செல்லும் என்று எச்சரிக்கிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

1000 கடல் மைல்

1000 கடல் மைல், வறீதையா கான்ஸ்தந்தீன், கடல்வெளி – தடாகம், விலை 250ரூ. மீனவர்களை ஏதோ மீன்பிடித் தொழில் செய்பவர்கள் என்ற ரீதியிலேயே புரிந்துகொள்கிறது பொதுப்புத்தி. ஆனால், காட்டைச் சார்ந்து வாழும் பழங்குடிகளைப் போல் கடலைச் சார்ந்து வாழும் பழங்குடிகளாக உள்ள மீனவர்களை அரசுகள் எப்படிப்பட்ட நெருக்கடிகளுக்குத் தள்ளுகின்றன என்பதை விரிவாகப் பேசுகிறது இந்தப் புத்தகம். நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027320.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

கையிலிருக்கும் பூமி

கையிலிருக்கும் பூமி, சு. தியடோர் பாஸ்கரன், உயிர்மை வெளியீடு, விலை 600ரூ. மூத்த சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் தமிழில் சூழலியல் எழுத்துக்குத் தனி அடையாளம் பெற்றுத் தந்தவர். தமிழில் அவர் எழுதிய 100 கட்டுரைகள் அடங்கிய இந்த முழுத் தொகுப்பு, முதன்மையான சூழலியல் ஆவணமாக வெளியாகியுள்ளது நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027340.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சேப்பியன்ஸ்

சேப்பியன்ஸ், யுவால் நோவா ஹராரி, தமிழில் நாகலட்சு சண்முகம், மஞ்சுள் ப்பளிஷிங் அவுஸ், பக். 499, விலை 499ரூ. பிரபஞ்சத்தோற்றம், பூமி உருவாதல், உயிரினங்களின் தோற்றம் என 1,350 கோடி ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாற்றை விளக்கி வியக்க வைக்கிறது இந்த நூல். கோடானு கோடி உயிர் இனங்களில் ஒன்றாகவும், அரை குறை ஆடையுடனும், பரட்டைத் தலையுடனும், காய் கனிகளைப் பொறுக்கிக்கொண்டும், எதிர்ப்பட்ட விலங்குகளை வேட்டையாடி, திரிந்து கொண்டிருந்த மனித இனம், படிப்படியாக மாறி, இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற ஓர் இனமாக மாறி […]

Read more

வெற்றி உங்களுடையதே

வெற்றி உங்களுடையதே, பி.வி.பட்டாபிராம், யுனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், விலை 250ரூ. அனைத்துத் திறமையும் கொண்ட இளைஞர்களை கடுமையான கட்டுப்பாடில் வைத்து இருக்காமல், வாழ்க்கையின் மீத புரிதல், தைரியம், உலகை உற்சாகமாக எதிர்கொள்ளும் சக்தி ஆகியவற்றை வழங்குவதன் மலம் அவர்களை வாழ்க்கையின் வெற்றிப்படிகளுக்கு சுலபமாக அழைத்துச் செல்ல முடியும் என்பதை இந்த நூல் விளக்குகிறது. சுய பரிசோதனையாக பல கேள்விகளை அமைத்து அவற்றுக்கு தகுந்த விடை தந்து இருப்பது நல்ல வழிகாட்டியாக அமைந்து இருக்கிறது. பருவ வயதில் வரும் கேள்விகளுக்கான அறிவியல் ரீதியான பதில்கள், திக்கிப் […]

Read more

ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்

ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், ஜெயகாந்தன், தொகுப்பு: ஜெ.ஜெயசிம்மன், கா.எழில்முத்து, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.300. தமிழ் சினிமா மாறியதும் மாறாததும் எழுத்து, சினிமா, பொது வாழ்க்கை எனக் கால்வைத்த அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்த அரிதான ஆளுமை ஜெயகாந்தன். அவரது சிறுகதைகள், நாவல்கள் அளவுக்கு சுவாரசியம் கொண்டவை அவரது கட்டுரைகள். அரசியல் அனுபவங்கள், பத்திரிகையுலக அனுபவங்கள் வரிசையில் எழுதிய ‘ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ இதுவரை வெளிவராத கட்டுரைகளுடன் தொகுக்கப்பட்டிருக்கிறது. வெறும் அனுபவங்கள் மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் சரித்திரம், அதன் கலாச்சாரம், […]

Read more
1 45 46 47 48 49 88