தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?, கி.வீரமணி, திராவிடர் கழகம், விலை: ரூ.180 திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி எழுதியிருக்கும் ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’ என்ற புத்தகம், 270 பக்கங்களில் 20 அத்தியாங்களில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம், வாழ்வியல் ஆகியவை மேம்பட பெரியார் செய்த மகத்தான பங்களிப்புகளைப் பேசுகிறது. தமிழ், தமிழர் முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த ஓயாத அக்கறையையும், அதற்கு அவர் செலுத்திய அயராத உழைப்பையும் விவரிக்கிறது. பெரியாரின் உரைகள், ‘விடுதலை’, ‘குடிஅரசு’ இதழ்களில் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் […]

Read more

நான் எப்படி எழுதுகிறேன்

நான் எப்படி எழுதுகிறேன், உம்பர்ட்டோ ஈகோ கட்டுரைகள், தமிழில்: க.பஞ்சாங்கம், அருட்செல்வர், பக்.128, விலை ரூ.125. உம்பர்ட்டோ ஈகோ இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். ஆசிரியப் பணி, ஊடகப் பணி, கட்டடக்கலைத் துறையில் பணி என பல பணிகளைச் செய்தவர். எனினும் குறியியலில் ஆர்வம் உள்ளவர். குறியியல் கோட்பாடு என்ற புத்தகத்தை எழுதியவர். இலக்கியம் சார்ந்து அவர் எழுதிய நூலில் உள்ள ஏழு கட்டுரைகளின் தமிழாக்கமே இந்நூல்.கணினியுகத்திலும் இலக்கியத்தின் தாக்கம் இருக்க முடியும். இலக்கியம் மனிதமனங்களை, மனிதர்களின் செயல்களை உருவாக்கும். இலக்கியம் நம் சொந்தக் கதைகளைத்தான் […]

Read more

உலக ஒழுங்கின் மறு ஆக்கம் நாகரிகங்களின் மோதல்

உலக ஒழுங்கின் மறு ஆக்கம் நாகரிகங்களின் மோதல், சாமுவேல் பி.ஹண்டிங்டன், அடையாளம், பக்.570. விலை ரூ.540. சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் மாறுதல்களை விளக்கும் நூல். ரஷியாவின் வீழ்ச்சிக்கு முன்பு உலகம் அமெரிக்கா, ரஷியா ஆகிய இருநாடுகளின் பின் அணி திரண்டது. கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் தனியுடமை, ஆளும் சக்திகளின் கருத்துகளுக்கும், பொதுஉடமை, உழைக்கும் மக்களின் கருத்துகளுக்கும் இடையிலேயே இருந்தன. சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு இம்மாதிரியான கருத்தியல் முகங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மத, இன, […]

Read more

காற்றில் கரையாத நினைவுகள்

காற்றில் கரையாத நினைவுகள், வெ.இறையன்பு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 160ரூ. இந்து தமிழ்’ நாளிதழில் வெ.இறையன்பு வாரந்தோறும் தொடராக எழுதி பெரும் வரவேற்பு பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. பயணங்கள், அனுபவங்கள் வழியாகத் தன்னை செழுமைப்படுத்திக்கொண்ட விஷயங்களை சுவாரசியமான நடையில் பகிர்ந்துகொள்கிறார் இறையன்பு. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் நமக்குள் பசுமையான கருப்பு – வெள்ளைக் காட்சிகளை ஓட்டிக் காண்பிக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 13/4/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

காலமெல்லாம் கண்ணதாசன்

காலமெல்லாம் கண்ணதாசன், ஆர்.சி.மதிராஜ், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.130 ‘இந்து தமிழ்’ குழுமத்தின் அங்கமான ‘காமதேனு’ இணையதளத்தில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே கண்ணதாசனின் பாடல்கள் இருந்திருக்கின்றன. அவரது வரிகளில் மயங்கித் திளைத்தவர்களுள் ஒருவரான மதிராஜ், இந்தப் புத்தகத்தில் கண்ணதாசனைக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார். நன்றி: தமிழ் இந்து, 13/4/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027960.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

யாசகம்

யாசகம், எம்.எம்.தீன், ஜீவா படைப்பகம், விலை: ரூ.200. ஓயாத யாசகக் குரல்கள் ஒவ்வொரு யாசகரின் வாழ்வும் எதிர்பாராத திருப்பத்தில் திசைமாறி, குடும்பம் விட்டு விலகி, தனிமையில் ஒண்டி, கடைசியில் எல்லோரும் ஒரே முகத்துக்கு மாறிவிடுகிறார்கள் என்று சொல்லும் எழுத்தாளர் தீன், பாளையங்கோட்டை, திருநெல்வேலி சுற்றுப்புறத்தில் உள்ள யாசகர்களின் வாழ்வை இந்நாவலில் நுட்பமாகப் பதிவுசெய்திருக்கிறார். யாசகர்கள் உணவுக்காகப் பல தூரம் நடக்கிறார்கள். எல்லா நாட்களிலும் சாப்பாட்டுக்கு உத்தரவாதம் இல்லை. பல நாட்கள் கொலைப்பட்டினியாகவும் இருக்க நேரிடுகிறது. யாரோ ஒருவர் தனக்கான உணவுப் பொட்டணத்தைக் கொண்டுவந்து தருவார்கள் […]

Read more

நகைச்சுவை குதிரையில் என் சிந்தனைப் பயணம்

நகைச்சுவை குதிரையில் என் சிந்தனைப் பயணம், திண்டுக்கல் ஐ. லியோனி, அசசி பதிப்பகம், பக். 204, விலை 180ரூ. வாழ்வியல் குறித்த சிந்தனைகள்: பட்டிமன்றங்களில் நகைச்சுவையால் பலரையும் ஈர்த்து வரும் லியோனி எழுதிய, கட்டுரைகள் அடங்கிய இந்நுால் அவரது முதல் நுால். பல எடுத்துக்காட்டுகள், வழித் தீட்டப்பட்ட கட்டுரைகள் படிப்போருக்கு நல்ல விருந்து. பேச்சுக் கலை பற்றிக் குறிப்பிடும்போது, ‘நல்லதைப் பேசுவோம்; நன்றாகப் பேசுவோம்’ என்ற அடிப்படையில் எழுந்த அக்கட்டுரை, சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வாறு ஒருவர் பேச வேண்டும் என்பதைப் பல உதாரணங்களோடு விளக்குகிறது. […]

Read more

மாபெரும் தமிழ்க் கனவு

மாபெரும் தமிழ்க் கனவு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 500ரூ. உலகில் வாழும் தமிழர்களெல்லாம் தங்கள் இதயங்களையே அரியாசனமாக்கி அமர்த்தி அழகுபார்க்கும் அறிவு ஆசான். சாமானியர்களின் எழுச்சிக்கு வித்திட்ட சரித்திர நாயகன். தமிழ்நாடும், தமிழ்ச் சமுதாயமும் தழைக்க வழிவகுத்துத் தந்த தள நாயகன் எங்கள் அண்ணா! – மு.கருணாநிதி கடவுள் என்றால் யார்? அறிவைக் கொடுப்பவர் கடவுள். அன்பை வழங்குபவர் கடவுள். அறிஞர் அண்ணா இந்த நாட்டுக்கே அறிவை வழங்குகிறார். மக்களுக்கெல்லாம் அன்பை ஊட்டுகிறார். எனவே, அறிஞர் அண்ணாவைக் கடவுள் என்றால் மிகையாகாது. […]

Read more

இன்பியல் துன்பியல் இதழியல்

இன்பியல் துன்பியல் இதழியல், கோ.சீனிவாசன், அகரம், பக்.158, விலை ரூ.125. முன்னணி ஆங்கில நாளிதழ்களில் பணியாற்றிய நூலாசிரியர், செய்தி சேகரிப்பு சார்ந்த நிகழ்வுகளில் தனக்கு நேர்ந்த இன்பமானவற்றையும், துன்பமானவற்றையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். கூடவே இதழாளர்களுக்குப் பயன்படும் வகையில் அது குறித்த தனது அனுபவம் சார்ந்த கருத்துகளையும் கூறியிருக்கிறார். 1990 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 -ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தை செய்தி சேகரிக்கச் சென்றபோது நேரில் பார்க்க நேர்கிறது. அந்த காட்சிகள் அவரை நினைவிலும் கனவிலும் […]

Read more

அருந்தவப்பன்றி

அருந்தவப்பன்றி, சுப்பிரமணிய பாரதி – பாரதி கிருஷ்ணகுமார், சப்னா புக் ஹவுஸ், பக்.174, விலை ரூ.140. நூலின் தலைப்பு  ஒருவிதமான அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். என்றாலும் நூலைப் படிக்கத் தொடங்கியவுடன், நூலாசிரியர் சொல்லும் விஷயங்களில் அமிழ்ந்து பாரதியாரைப் பற்றி நம் மனதில் ஏற்கெனவே இருந்த சிறப்பான மதிப்பீடுகள் இன்னும் அதிகமாக வலுப்பெற்றுவிடுகின்றன. இப்படி ஒரு மகாகவியா?என்று யோசிக்க வைத்துவிடுகிறது. தமிழ்க் கவிதையை மக்கள் மொழியில் மாற்றிய பெருமை பாரதியாருக்கு உண்டு. அவர் நிறைய கட்டுரைகள் எழுதியிருந்தாலும் கவிஞராகவே நம் எல்லாருடைய மனதிலும் நிற்கிறார். ஆனால் பாரதியார் […]

Read more
1 47 48 49 50 51 88