எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க!

எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க!, ஜி.செல்வா, வாசகசாலை வெளியீடு, விலை: ரூ130 ஒரு போராளியின் பார்வை விவசாயத்தைக் கைவிட்டு, கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களின் உழைப்பால் உருப்பெற்ற பெருநகரம் சென்னை. இயற்கைப் பேரிடர்களைச் சந்திப்பதற்குத் தயார்நிலையில் இல்லாத அரசு, ஆற்றங்கரைக் குடிசைகளை அகற்றி நகருக்கு வெளியே அவர்களை அப்புறப்படுத்திவிட்டது. ஆனால், சென்னைக்குள் ஓடும் ஆறுகளின் கரையோரங்களையும் சதுப்புநிலங்களையும் ஆக்கிரமிக்கும் பெருநிறுவனங்கள் சட்டபூர்வமான அனுமதியோடு இயங்கிவருகின்றன. குடிசைப்பகுதிகளை அகற்றுவதை எதிர்த்துப் போராட்டக்களத்தில் நிற்கும் ஜி.செல்வா, நகர்மயமாதலில் குடிசைவாசிகளின் பங்களிப்பை ஆதாரங்களோடு முன்வைத்து ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை […]

Read more

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்), சி.எஸ்.தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.200, விலை ரூ.180. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று நூலின் தலைப்பு இருந்தாலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்தே நூல் தொடங்குகிறது. குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை,பாலியல் தொழிலில் சிறுமிகள் ஈடுபடுத்தப்படுவது, பாலியல் தொழிலாளர்களின் மோசமான வாழ்க்கை நிலை என நூல் விரிகிறது. குடும்பத்தில் பெண்ணின் நிலை, இளம் வயதில் பெண்களைத் திருமணம் செய்து தருதல், வரதட்சணைக் கொடுமை, பெண்களை அடித்தல், கட்டாயத் திருமணம் உட்பட பெண்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவதைப் பற்றியும் நூல் விவரிக்கிறது. வேலை […]

Read more

மெய்ப்பொருள் கண்டேன்

மெய்ப்பொருள் கண்டேன், எஸ்.ஆர்.சுப்ரமணியம், பழனியப்பா பிரதர்தஸ், பக்.348, விலை ரூ.320. சுதந்திரப் போராட்ட வரலாற்றை மிக எளிமையாக, சுவையாகச் சொல்லும் நூல். கி.மு.325 இல் மாசிடோனியா மன்னன் அலெக்சாண்டர் சிந்துசமவெளியைத் தாண்டி படையெடுத்து வந்து இந்திய மன்னர்களைத் தோற்கடித்தது, கி.பி.1175 இல் முகமது கோரி படையெடுத்து, அதற்குப் பிறகு ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் ஆக்கிரமித்தது என அடிமையான வரலாற்றை ஒருபுறம் இந்நூல் சொல்கிறது. இன்னொருபுறத்தில் அடிமைத் தளையை எதிர்த்து வேலூர் கலகம், 1857 சிப்பாய் கலகம், திப்புசுல்தான் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்தது. தீரன்சின்னமலை, வேலுநாச்சியார், வீரபாண்டிய […]

Read more

தமிழக நாடார்கள்

தமிழக நாடார்கள் – ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு- இராபர்ட் எல்.ஹார்டுகிரேவ்- தமிழில்: எஸ்.டி.ஜெயபாண்டியன், அடையாளம்,  பக்.512. விலை ரூ.480. அமெரிக்காவைச் சேர்ந்த நூலாசிரியர் தனது ஆய்வுப் படிப்புக்காக 1960 இல் தமிழகம் வந்து பலரைச் சந்தித்து, மேற்கொண்ட ஆய்வுக்குப் பிறகு THE NADARS OF TAMILNADU என்ற நூலை எழுதியிருக்கிறார். அதன் தமிழாக்கமே இந்நூல். ஒரு காலத்தில் பின்தங்கியவர்களாகக் கருதப்பட்ட நாடார் சமூகத்தினர், தங்களுடைய உழைப்பாலும், முயற்சியாலும், சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ற பொருத்தமான செயல்களாலும் எவ்வாறு முன்னேற்றம் […]

Read more

மனச்சோர்வு

மனச்சோர்வு, சிவபாலன் இளங்கோவன், உயிர்மை பதிப்பகம், விலை 70ரூ. கற்பிதங்களும் உண்மைகளும் மாணவர்கள் மத்தியில் அதிகம் புழங்கும் வார்த்தைகளில் ஒன்றாகிவிட்டது ‘மனச்சோர்வு’. ஆனால் அன்றாடக் கவலைகளும் மனச்சோர்வும் ஒன்றல்ல என்கிறது இப்புத்தகம். இதில், உண்மையில் மனச்சோர்வு என்பது என்ன? நம் மனத்தை எப்படிப் புரிந்துகொள்வது என்பதைச் சொல்வதன் வழியே, அதற்கான தீர்வும் முன்வைக்கப்படுகிறது. நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027820.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்,மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. அரிஸ்டாட்டில், அங்குலிமாலா, ஆப்பிரிக்கா, முள்ளம்பன்றி, அசோக என்று ரசிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் பல தலைப்புகளை அறிமுகம் செய்கிறது இந்நூல். கதை வடிவில் எளிமையாகவும் சுவையாகவும் எழுதப்பட்டுள்ளது. வாசிக்க மட்டுமல்ல, நம் உலகை நேசிக்கவும் இந்நூல் உதவும். நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789386737748.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஏர்வாடியம்

ஏர்வாடியம், பேராசிரியர்கள் இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 176, விலை 125ரூ. பிரபல எழுத்தாளரும், கவிதை உறவு ஆசிரியருமான ஏர்வாடி ராதாகிருஷ்ணனின் படைப்புகள் பற்றிய பார்வையை தரும் எளிமையான நுால் இது. அவரோடு நெருங்கி பழகிய இலக்கிய இணையர்கள், இரா.மோகனும், நிர்மலா மோகனும், ‘ஏர்வாடியம்’ படைத்திருப்பது இன்னும் தனிச்சிறப்பு. இதுவரை, 104 புத்தகங்கள் எழுதியுள்ள, தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமை ஏர்வாடியார். நாடகம், சிறுகதை, கட்டுரை, கவிதை என, பல பரிமாணங்களில் ஏர்வாடியாரின் எழுத்துக்கள் கோலோச்சுகின்றன. அதை தனித்தனி அத்தியாயங்களாக பிரித்து படிக்க […]

Read more

சுற்றுச்சூழல் சிதறல்கள்

சுற்றுச்சூழல் சிதறல்கள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், பக். 446, விலை 420ரூ. இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ, நாம் இயற்கையை நேசிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு எதிரான அணுகுமுறைகளை குறைக்க வேண்டும். மனித குலம் மாற வேண்டும். ஒரு நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும், மனித சமுதாய நலனுக்கும் மிகையான உயிரினப் பன்மயம் கொண்ட ஒரு சூழ்நிலை அவசியமாகிறது. மனிதர்களின் செயலால் ஏற்படும் உயிரினப் பன்மயத்தின் இழப்பானது, ஆபத்தானப் பொருளாதார மற்றும் சமுதாய சீர்கேட்டுக்கு அழைத்துச் சென்றுவிடும் என்பதை, பல்வேறு தரவுகள் மூலம் எச்சரிக்கிறார் நுாலாசிரியர். […]

Read more

நாம் திராவிடர்

நாம் திராவிடர், முனைவர் ப.கமலக்கண்ணன், காவ்யா, பக்.408, விலை 400ரூ. கொள்கையில் விடாப்பிடியாக இருந்து சாதனைகள் பல செய்தவர் ஈவெ.ரா., அதற்காக எத்தகைய தியாகங்களையும் செய்யத் தயங்காதவர். நுால் முழுவதும் அவரது எண்ணம், கொள்கை, விளக்கம் பெறுகின்றன. இந்த நுாலில், ‘மொழி பற்றிய தமது எண்ணங்களில், தமிழ் மொழியைச் செம்மை செய்து, உலக அரங்கில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரவேண்டும் (பக். 53) என்கிறார். ஆனால் ‘காட்டுமிராண்டி’ என்ற அவரது கருத்தையும், தாய்மொழி குறித்த அவரது புலமையையும் இதில் எழுதியிருந்தால், ‘திராவிடக் கண்ணோட்டம்’ எது […]

Read more
1 48 49 50 51 52 88