ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே

ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே, கவிஞர் முத்துலிங்கம், வானதி பதிப்பகம், பக். 496, விலை 400ரூ. இந்த கட்டுரைத் தொகுதியில், கவிஞர் தன்னைப் பற்றி பேசுகிறார். ஆனால், தன்னை மட்டும் முன் நிறுத்தாது, திரைக்கவி முன்னோடிகள் குறித்து நிறைய பேசுகிறார். பல சம்பவங்கள் குறித்துப் படித்து சிலிர்ப்பு அடைகிறோம். ஒரு படத்தில் டைட்டிலில் மருதகாசி, கண்ணதாசன், தஞ்சை ராமையா தாஸ் ஆகியோர் பெயருக்குக் கீழே, உடுமலை நாராயணகவி பெயரைப் போட்டனர். அப்போது ஒரு நண்பர், உடுமலையாரிடம் என்னய்யா, எவ்வளவு பெரிய சீனியர் நீங்கள், உங்களுக்குக் கீழே […]

Read more

ஓரம்போ

ஓரம்போ, மாடும் வண்டியும், முனைவர் த.ஜான்சி பால்ராஜ், என்சிபிஎச், விலை 130ரூ. மாட்டு வண்டியில் மண் வாசனையோடு பயணப்பட்ட நாட்களை நினைவூட்டுகிறது இந்நூல். நூலாசிரியர் மாட்டு வண்டியை அக்குஅக்காக ஆய்ந்து நூலை எழுதியிருக்கிறார். மாட்டு வண்டியின் அமைப்பு, வகைகள், வெவ்வேறு பயன்பாடுகள், ரேக்ளா வண்டிகள், தண்ணீர் கொண்டுவரும் நகரத்தார் பகுதி வண்டிகள், வண்டியின் முக்கிய பாகமான சக்கரங்களின் உராய்வைக் குறைக்கும் மை தயாரிப்பு, வண்டி மாடுகளின் வகைகள், அவற்றின் நோய்களுக்காகப் போடும் சூட்டின் அடையாளங்கள் வண்டிகளைத் தயாரிக்கும் மரத்தச்சர்கள், சக்கரங்களுக்கு இரும்பு வளையம் மாட்டும் […]

Read more

சீன வானில் சிவப்பு நட்சத்திரம்

சீன வானில் சிவப்பு நட்சத்திரம், எட்கர் ஸ்நோ, அலைகள் வெளியீட்டகம். சீனப் புரட்சி: ஒரு பத்திரிகையாளனின் தீர்க்க தரிசனங்கள் அமெரிக்கப் பத்திரிகையாளரான எட்கர் ஸ்நோ 1928-லிருந்து தொடர்ந்து 15 ஆண்டுகள் சீனாவில் தங்கி பணிபுரிந்தவர். சீன மொழியைப் பயின்று அம்மொழியில் பேசும் திறமையையும் வளர்த்துக்கொண்டவர். அவரது செய்திக் கட்டுரைகளின் வாயிலாகவே மேலையுலகம் சீனப் புரட்சியின் வீரியத்தையும் விவேகத்தையும் அறிந்துகொண்டது. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பு ‘ரெட் ஸ்டார் ஓவர் சைனா’ என்ற தலைப்பில் 1937-ல் வெளிவந்தது. அடுத்தடுத்த பதிப்புகள் திருத்தங்களுடனும் கூடுதல் சேர்க்கைகளுடனும் வெளிவந்தன. 1971-ல் […]

Read more

நமக்குள் சில கேள்விகள்

நமக்குள் சில கேள்விகள், வெ.இறையன்பு, தினத்தந்தி பதிப்பகம், விலை 160ரூ. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான வார, மாத இதழ்களில் கேள்வி பதில் பகுதி இடம் பெறுகிறது. அந்த இதழின் ஆசிரியரோ அல்லது பிரபலமானவர்களோ வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்கள். இது வாசகர்களின் சிந்தை கவர்ந்த பகுதியாகவே திகழ்ந்து வருகிறது. பெரும்பாலும் கேள்வி வாசகர்களால்தான் கேட்கப்படுகிறது. ஆனால் இதற்கு மாறாக ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சளாருமான வெ.இறையன்பு கேள்விகளை தானே உருவாக்கி அதற்குத் தக்க பதில்களை அளித்து வந்தார். ராணி வார இதழில் 100 வாரங்கள் […]

Read more

மாடும் வண்டியும்

மாடும் வண்டியும் (பொருள்சார் பண்பாட்டு ஆய்வு), த.ஜான்சி பால்ராஜ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.126, விலை ரூ.130. டிராக்டர்கள் வந்த பின் நிலத்தை உழ மாடுகள் தேவையில்லாமற் போய்விட்டன. அதுமட்டுமல்ல, விளைவித்த பொருள்களைக் கொண்டு செல்ல பயன்பட்ட மாட்டுவண்டிக்கான தேவையும் இல்லாமல் போய்விட்டது. மனிதர்கள் பயணம் செய்ய மாட்டு வண்டிகள் கூண்டு வண்டிகளாக மாறின. ஆடம்பரமான வில் வண்டிகளும் வந்தன. நவீன வாகனங்கள் அவற்றை இல்லாமற் செய்துவிட்டன. இந்நூல் மாட்டு வண்டிகளின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும்? மாட்டுவண்டிகளின் பாகங்கள் […]

Read more

பெண்ணியம்

பெண்ணியம்,  இரா.பிரேமா, பாரி புத்தக பண்ணை, பக்.216, விலை ரூ.90. பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானது அல்ல; காலம் காலமாக அடிமைப்பட்ட பெண்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, கல்வியின் மூலமாக அவர்களை வளர்த்தெடுத்து உயர்த்துவதே பெண்ணியத்தின் நோக்கம் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். பெண்ணியம் எவ்வாறு தோன்றியது? அது தோன்றுவதற்கான பின்னணி, உலக அளவில் பேசப்படும் பெண்ணிய வகைகள், பலவிதமான பெண்ணியச் செயற்பாட்டாளர்களின் கருத்துகள் என விரிவாக இந்நூல் பேசுகிறது. வேத காலத்தில் யாக்ஞவல்கியருடன் வாதிட்ட கார்கி போன்ற பெண்மணிகளும் இருந்திருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக கல்வி கற்பது, […]

Read more

அறிவுடையார் எல்லாம் உடையார்

அறிவுடையார் எல்லாம் உடையார், பிரேமா பதிப்பகம், பக். 192 முதுகலைத் தமிழ் ஆசிரியராக 32 ஆண்டுகள் பள்ளியில் பணிபுரிந்தமைக்கு நல்லாசிரியர் விருது பெற்ற சிறந்த ஆன்மிகப் பேச்சாளர். திருவொற்றியூர், “பாரதி பாசறை அமைப்பை உருவாக்கி 26 ஆண்டுகளாக பலநூறு இளைஞர்களை உருவாக்கிய பெருமை பெற்றவர் படைத்த 20 கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. “நெஞ்சம் மறவா கட்டுரை நெஞ்சை நெகிழ வைக்கிறது. “வாழ்வதற்கு பொருள் வேண்டும் தான். ஆனாலும் வாழ்வதிலும் பொருள் வேண்டாமா என்ற, அவரது கவிதை நெறிப்படி அறிவுபாதையில் பயணிக்க உதவிடும் நூல். […]

Read more

பூதங்களின் கதை

பூதங்களின் கதை, சிவ.விவேகானந்தன், காவ்யா, விலை 480ரூ. பூதங்களின் கதை என்ற தலைப்பைப் பார்த்ததும், இது திகிலும் திகைப்பும் நிறைந்த கதைகளின் தொகுப்பு என்று நினைத்துவிடத் தேவையில்லை என்பதை இதில் உள்ள இரண்டு கதைகளும் உணர்த்துகின்றன. தமிழகத்தில் பழங்காலம் முதலே பூதங்களின் வழிபாடு நடைமுறையில் இருக்கிறது என்பதையும், பல கோவில்களில் பல்வேறு பெயர்களில் பூத உருவங்கள் இடம் பெற்று இருக்கின்றன என்பதையும் இந்த நூல் ஆய்வு நோக்கில் தந்து இருக்கிறது. தென் மாவட்டங்களில் வழங்கும் பூத கதைப் பாடல்களில் பூதப்பெருமாள் கதை (ஈஸ்வரகாலப் பூதக்கதை), […]

Read more

தற்காலத் தமிழ் நாட்டு வரலாறு 1801 – 2018

தற்காலத் தமிழ் நாட்டு வரலாறு 1801 – 2018, பேரா., அ.ராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.395 ஆங்கிலேயர் ஆட்சியில், தமிழ்நாடு என்னும் முதல் பாகத்தில் ஆர்க்காடு நவாபின் ஆட்சி, 1710ல் துவங்கி, 1962ல், புதுச்சேரி பிரெஞ்சு பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது வரை, 14 தலைப்புகளில் அமைந்துள்ளது. விடுதலைக்குப் பின், தமிழகம் என்னும் இரண்டாம் பாகத்தில் தமிழக – ஆந்திர எல்லைப் பிரச்னை துவங்கி, 2018ல் காவிரி நதி நீர் நடுவம் அளித்த தீர்ப்பு வரை, எல்லாவற்றையும் விபரமாக எடுத்தாளப்பட்டு உள்ளது. பிற […]

Read more

சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாடு

சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாடு, சு.சசிகலா,  காவ்யா, பக்.272, விலை ரூ.280 சித்தர்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளைச் செய்திருக்கும் நூலாசிரியர், சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாட்டை ஆய்வு செய்திருக்கிறார். அகத்தியர், பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர் உள்ளிட்ட 18 சித்தர்களின் வரலாற்றையும், அவர்களுடைய படைப்புகளில் காணப்படும் இறைக்கோட்பாட்டையும் இந்நூல் ஆய்வு செய்திருக்கிறது. யோகம், மருத்துவம், ஞானம், இரசவாதம் ஆகியவற்றை சித்தர்கள் நுட்பமாக விளக்கியுள்ளதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. மனிதனுக்கு வெளியே உள்ள அண்டத்துள் உள்ளது மனிதனின் பிண்டத்துள் உள்ளது என்று சித்தர்கள் கூறியிருப்பதை, மனிதன் இயற்கையின் ஒரு பகுதி, […]

Read more
1 38 39 40 41 42 88