கடவுள் சந்தை

கடவுள் சந்தை, மீரா நந்தா, தமிழாக்கம்: க.பூரணச்சந்திரன், அடையாளம் வெளியீடு, விலை ரூ.300. மூடநம்பிக்கை, பேராசை, அதிகார வேட்கையைத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டு, நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கடவுள்களையும் ஆன்மிகத்தையும் சரக்காக விற்பனை செய்யும் ‘நவீன மோஸ்தர்’ சாமியார்கள் பெருகிவருகின்றனர். அவர்கள் ஈட்டும் பரிவர்த்தனை மதிப்பில் 99%-ஐத் தங்கள் ‘ஆன்மிகக் கூடங்களில் பதுக்கி வைத்துக்கொள்ளவும், தொழில், வணிகத்தில் முதலீடு செய்துகொள்ளவும் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் உதவுகிறார்கள். மக்களின் மத உணர்வு, மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களது வாக்குகளைப் பெற இந்த நவீன ஆன்மிகவாதிகள் துணைபுரிகிறார்கள்.இந்தியாவிலுள்ள முக்கிய ஊடகங்களும் […]

Read more

என் சரித்திரம்

என் சரித்திரம், உ.வே.சாமிநாதையர், அடையாளம் வெளியீடு, விலை: ரூ.400. புத்துயிர்ப்பு, லியோ டால்ஸ்டாய், அடையாளம் வெளியீடு, விலை: ரூ.395   டால்ஸ்டாயின் உலகப் புகழ்பெற்ற படைப்புகளுள் ஒன்றான ‘புத்துயிர்ப்பு’ நாவல், தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் தன்வரலாற்று நூலான ‘என் சரித்திரம்’ என இரண்டு முக்கியமான புத்தகங்களை மலிவு விலைப் பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறது ‘அடையாளம்’ பதிப்பகம். விலை குறைவு என்பதற்காகத் தயாரிப்பில் ஏதும் சமரசம் இல்லை. சுமார் 800 பக்கங்கள் கொண்ட இரண்டு புத்தகங்களுக்கும் தலா ரூ.400 என்பதாக விலை நிர்ணயித்திருக்கிறார்கள். நன்றி: தமிழ் இந்து, […]

Read more

கடவுள் சந்தை

கடவுள் சந்தை, மீரா நந்தா, தமிழாக்கம்: க.பூரணச்சந்திரன், அடையாளம் வெளியீடு, விலை ரூ.300 கலைஞர்கள், கவிஞர்கள் தொடங்கி மனிதரின் பேராசையால் சுரண்டப் பட்ட பூமியைப் பற்றிக் கவலைப்படும் சூழலியலாளர்கள் வரை புத்தர் அனைவரையும் இன்றும் ஈர்த்துக்கொண்டிருக்கிறார். ப்ளேட்டோவின் சமகாலத்தவராக புத்தரை வைத்து, உலகளவில் நவீன சிந்தனைகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தில்இருந்து புத்தரின் வாழ்வையும் மரணத்தையும் சமகாலத்தில் நின்று பரிசீலிக்கும் நாவல் ‘தம்மம் தந்தவன்’. மராத்திய, ஆங்கில எழுத்தாளரான விலாஸ் சாரங், கவிஞரும்கூட. பிறந்த அரண்மனைக்கும் புகுந்த அரண்மனைக்கும் நடுவே நடுக்காட்டில் ஒரு சாலமரத்தின் மடியில் மரத்தைப் பிடித்தபடி தாய் மாயாதேவிக்குப் […]

Read more

இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் 1986 – 2016

இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் 1986 – 2016, அ.மார்க்ஸ், அடையாளம் வெளியீடு, விலை 240ரூ. மாறிவரும் கொள்கை! மக்கள் சேவை என்ற நிலையில் இருந்து லாபம் ஈட்டும் பண்டம் என்ற நிலைக்குக் கல்வி தள்ளப்பட்டதற்குப் பின்னால் உள்ள சமூக-பொருளாதார அரசியலை 1986 முதல் 2016 வரை வெளியிடப்பட்ட நான்கு அறிக்கைகளைக்கொண்டு அலசும் புத்தகம், ‘இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் 1986-2016’. கடந்த 30 ஆண்டுகளாக இந்திய அரசு வெளியிட்ட கல்விக் கொள்கைகள் குறித்து விமர்சித்து நூல்களை எழுதிவரும் மூத்த கல்வியாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான […]

Read more

ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை

ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை, நாகேஸ்வரி அண்ணாமலை, அடையாளம் வெளியீடு, பக். 332, விலை 270ரூ. 5 தலைமுறைகளைச் சேர்ந்த 25 பெண்களின் வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல்.பெண்களைப் பற்றியும் குறிப்பாக அவர்களின் திருமண வாழ்க்கையின் நிலையைப் பற்றியும் பேசுகிறது. சிவகாசியைப் பூர்வீகமாகக் கொண்ட நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், கல்வி கற்பதில் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், ஜாதிய நடைமுறைகள், எதிர்காலத்தை, குறிப்பாக திருமணத்தைத் தீர்மானிப்பதில் இளம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுதந்திரம் என்ன என்பது போன்ற முக்கிய […]

Read more

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள், ம. இராஜேந்திரன், அடையாளம் வெளியீடு, விலை 180ரூ. தமிழகப் பழங்குடி மக்கள் தமிழ் மக்கள் சில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கடமைப்பட்டுள்ளார்கள். அதில் முக்கியமானவர் மெக்கன்சி. கிழக்கிந்தியக் கம்பெனியில் தனது இளம் வயதில் வேலைக்குச் சேர்ந்த மெக்கன்சி, 1783ல் இந்தியாவுக்கு ஒரு பொறியாளராக வந்தார். அவருக்கு இங்கு நில அளவையாளர் பணி கிடைத்தது. 1818ல் இந்தியாவின் தலைமை நில அளவையாளர் ஆனார். இந்தியாவின் நீள அகலங்களை அளந்து நிர்வாகத்தை வடிவமைக்க வேண்டிய காலகட்டம் அது. வெறும் மண்ணைத் தேடிப் […]

Read more

ஜென் தொடக்க நிலையினருக்கு

ஜென் தொடக்க நிலையினருக்கு, தமிழில் சேஷையா ரவி, அடையாளம் வெளியீடு. எளிமையாய் ஓர் அறிதல் ஜென் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? அதைப் பயில்வது எப்படி? அதன் தத்துவம் எப்படிப்பட்டது போன்ற விவரங்களை ஆரம்ப கட்ட நிலையினருக்கு சொல்லும் நூல் இது. இதன் சிறப்பியல்பு மிகவும் எளிமையான மொழியில் அழகான படங்களுடன் இது எழுதப்பட்டுள்ளது என்பதுதான். ஜுடித் பிளாக்ஸ்டோன், ஸோரஜோசிபோவிச் என்ற இரு அமெரிக்கர்களும் ஜென் பௌத்தம் பயின்றவர்கள். இவர்கள் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்காக எழுதிய இந்நூலை சேஷையா ரவி தமிழில் மொழி […]

Read more

வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்

வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள், வெளி ரங்கராஜன், அடையாளம் வெளியீடு, திருச்சி, விலை 100ரூ. அசலானவர்களின் ஆவணங்கள் நாடகத்துக்காக நாடகவெளி என்ற இதழைத் தொடர்ந்து நடத்தியவர் வெளி ரங்கராஜன். தீராநதியில் தொடராக வந்த இவருடைய கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். பேரா. இராமானுஜம் இயக்கிய வெறியாட்டம் நாடகத்தில் தன் அழுத்தமான நடிப்பாற்றலால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் காந்திமேரி. ஆண்களே கொடிகட்டிப் பறந்து நாடக உலகில், முழுக்கப் பெண்களே பங்கேற்ற ஒரு குழுவை அமைத்து, சமூகத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியவர் கும்பகோணம் பாலாமணி. பாஸ்கரதாஸ் பாடல்களால் […]

Read more