அறியப்படாத கலாச்சாரப் புரட்சி

அறியப்படாத கலாச்சாரப் புரட்சி (கல்வியில் சீர்திருத்தங்களும் சீனக் கிராமப்புற வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்),  டாங்பிங் ஹான்,  தமிழில்: நிழல்வண்ணன், அலைகள் வெளியீட்டகம், பக்.264, விலை ரூ.210. 1966 ஆம் ஆண்டு தொடங்கி பத்தாண்டுகள் நீடித்த சீன கலாசாரப் புரட்சியில் பலர் கொல்லப்பட்டனர். சீன பாரம்பரிய சின்னங்கள் அழிக்கப்பட்டன என்பன போன்ற விமர்சனங்கள் உலகெங்கும் கூறப்படுகின்றன. கலாசாரப் புரட்சியால் சீனாவின் அரசியல், பொருளாதார, கலாசார வாழ்க்கை பின்னடைவைச் சந்தித்தது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியே 1981 இல் அறிவித்தது. கலாசாரப் புரட்சியைத் தொடங்கி நடத்தியவரான மா […]

Read more

ஒரு துளியின் துளித்துளி

ஒரு துளியின் துளித்துளி, தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், விலை 70ரூ. கழிந்து செல்லும் கணங்களில் நடந்தவற்றைக் கூர்ந்து நோக்கியதால் செதுக்கப்பட்டிருக்கும் கவிதைகள். ஒவ்வொரு கவிதையும் விதவிதமான கோணத்தில் எழுதப்பட்டிருப்பது சோர்வில்லா வாசிப்புக்குத் துணை நிற்கிறது. நன்றி: குமுதம், 21/3/2018.

Read more

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை….

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை…., சி.இளங்கோ, அலைகள் வெளியீட்டகம், பக்.112,  விலை ரூ.80. தமிழக வரலாற்றைத் தெரிந்து கொள்ள தொல்லியல் ஆய்வுகள் உதவுகின்றன. இந்நூல் அத்தகைய ஆய்வுகளைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. சென்னை பல்லாவரம் செம்மண் மேட்டுப் பகுதி, திருவள்ளூர் மாவட்டம் கொற்றலையாற்றுப் படுகை, அத்திரம்பாக்கம் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் கிடைத்த பல்வேறு கல் ஆயுதங்கள், கற்கால மனிதர்கள் தங்கியிருந்த குகைகள், கைக்கோடரிகள், தென்னார்க்காடு, வடஆர்க்காடு, தர்மபுரி, நீலகிரி மலைத்தொடர், தேனி மாவட்டப் பகுதிகள், மதுரை அருகேயுள்ள குன்றுகளில் வரையப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் போன்ற […]

Read more

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பும் ஆய்வும்

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பும் ஆய்வும், பேராசிரியர் முனைவர் ரா. நாராயணன், அலைகள் வெளியீட்டகம், பக். 184, விலை 140ரூ. பக்றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’’ என்ற பழைய பாடல், பக்றுளி ஆறும், பல மலைகளும் கடலால் சூழப்பட்டு அழிந்து போயின. பல இலக்கண, இலக்கிய நூல்களும் அழிந்தன என்று வரலாறு கூறுகிறது. தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளின் துணையோடு’ 58 – துணை நூல்களின் மேற்கொள்களுடன், புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும் என்ற நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலக்கிய உளப்பகுப்பாய்வு, […]

Read more

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும், தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக்.184, விலை ரூ.140. தமிழ் இலக்கியத் திறனாய்வுகள், திறனாய்வு செய்பவரின் வாழ்க்கைப் பார்வையிலிருந்து பலவிதமாக வெளிவந்திருக்கின்றன. இலக்கியத்தை ரசனை அடிப்படையில் விமர்சிப்பவர்களும், இலக்கியத்தின் வெளிப்பாட்டு அம்சத்தைப் பிரதானப்படுத்தி அழகியல் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பவர்களும், இலக்கியம் எந்தக் கருத்தைச் சொல்கிறது என்ற அடிப்படையில் சமூகக் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பவர்களும் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்களே. ஆனால் இந்நூலின் விமர்சனப் பார்வை சற்றே வித்தியாசமானது. உளவியல் அறிஞர்களான ஃப்ராய்ட், யூங், லக்கான் ஆகியோரின் உளவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான […]

Read more

வேலூர் புரட்சி

வேலூர் புரட்சி, பேராசிரியர் ந. சஞ்சீவி, அலைகள் வெளியீட்டகம், விலை 60ரூ. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதி காலகட்டத்தில் மக்கள் எழுச்சியும், பல்வேறு போராட்டங்களும் வலுப்பெற்றன. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராக இந்திய மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்ற செயலுக்கு வேலூர் புரட்சி அடித்தளமாக அமைந்தது. அத்தகைய வேலூர் புரட்சி குறித்து பேராசிரியர் ந. சஞ்சீவி ஓர் ஆய்வு நூலாக வழங்கியுள்ளார். வேலூரின் தொன்மையான வரலாற்றையும் அவர் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 15/3/2017.

Read more

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம், (தொல்லியல் நோக்கில் சங்ககால நில வரைபடம்), சி. இளங்கோ, அலைகள் வெளியீட்டகம், பக். 160, விலை 120ரூ. இன்று கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் வீடு இருக்கும் தெருவரை நில வரைபடத்தில் (ஙஅட) வந்துவிட்டது. மின்சாரமோ, போக்குவரத்து வசதியோ இல்லாத 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் நிலவரைபடம் இருப்பதற்கான சாத்தியம் அறவே இல்லை. எனினும், அக்காலத்தில் வணிகம் நடைபெற்றிருக்கிறது. ரோமிலிருந்து முசிறி துறைமுகம் வரை வந்து வணிகம் செய்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் நில வரைபடத்தை […]

Read more

சீனா ஒரு முடிவுறாத போர்

சீனா ஒரு முடிவுறாத போர், சீனா கலாச்சாரப் புரட்சி பற்றிய பதிவுகள், வில்லியம் ஹின்டன், தமிழில் கி. ரமேஷ், அலைகள் வெளியீட்டகம், பக். 212, விலை 150ரூ. சிகாகோவில் பிறந்த வில்லியம் ஹின்டன், ஆங்கில நாளிதழில் நிருபராகப் பணியாற்றியவர். அவர் சீனாவில் தங்கி இருந்தபோது நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. புரட்சிக்குப் பின் சீனாவில் தனியுடைமை ஒழிக்கப்பட்டது. மக்களால் மக்களுக்கான ஆட்சி நடத்தப்பட்டது. எனினும் காலப்போக்கில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் அதிகார வர்க்கமாக உருமாறினர்கள். கம்யூனிசத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஒவ்வாத பல நிகழ்வுகள் […]

Read more

தமிழர் பண்பாடும் தத்துவமும்

தமிழர் பண்பாடும் தத்துவமும், நா. வானமாமலை, அலைகள் வெளியீட்டகம், பக். 208, விலை 145ரூ. மார்க்சிய ஆய்வாளரான நூலாசிரியரின் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் அடங்கிய நூல் இது. வடநாட்டின் ஸ்கந்த வழிபாடு, தமிழகத்தின் முருகன் வழிபாட்டோடு இணைந்தது பற்றிய கட்டுரை, இவ்வுலக இன்பத்தைப் பெறும் பொருட்டே, அதற்காக வேண்டுவதற்காகவே தமிழகத்தில் முருகன் வழிபாடு இருந்ததை பரிபாடலின் மூலம் விளக்கும் கட்டுரை ஆகிய இரண்டும் முருகன் வழிபாட்டின் வரலாற்றை ஆய்வுப்பூர்வமாக விளக்குகிறது. மனிதனின் உழைப்பு, உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் அடித்தளத்திலேயே கலைகள் தோன்றுகின்றன; […]

Read more

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரும் தந்தை பெரியாரும்

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரும் தந்தை பெரியாரும், முத்து. குணசேகரன், உலகத் தமிழாய்ச்சி நிறுவனம், விலை 105ரூ. 1923-ம் ஆண்டு மே 1-ந் தேதியை மே தினமாக முதன் முதலாகக் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர். அது முதல்தான் “மே தினம்” கொண்டாடப்படுகிறது. பொது உடமை இயக்க முன்னோடி இவர். திராவிட இயக்கத்தின் முன்னோடி தந்தை பெரியார். பெரியாரும், சிங்காரவேலரும் 1932-ல் “சுயமரியாதை சமதர்ம இயக்கம்” என்ற பேரியக்கத்தை தொடங்கினர். அது பற்றி விரிவாகக் கூறும் சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 04/5/2016. […]

Read more
1 2 3 4