விடுதலை இயக்கத்தில் தமிழகம்

விடுதலை இயக்கத்தில் தமிழகம், டாக்டர் ஜி.பாலன், வானதி பதிப்பகம், பக். 624, விலை 300ரூ. விடுதலை இயக்கத்தில் பங்குபெற்ற வேலு நாச்சியார், கட்டபொம்மன், வ.உ.சி., திரு.வி.க., ம.பொ.சி., ஜீவானந்தம், கக்கன் போன்ற தமிழகத் தியாகச் செம்மல்களின் வரலாறுகளை தெளிவாகத் தொகுத்து, எழுதப்பெற்றுள்ள நூல். அண்ணல் காந்தியடிகள், தமிழகத்தில் பயணம் செய்தபோது நிகழ்ந்த நிகழ்வுகள், அழகாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளன. தேசியக்கொடி பற்றிய கட்டுரையில், தேசியக்கொடியின் தோற்றம், அமைப்பு, அளவு, வரையறை, வண்ணங்கள், சக்கரச்சின்னம் முதலியவற்றை விளக்கி, சுதந்திரக்கொடியான மூவர்ணக்கொடியின் வரலாறு விளக்கப் பெற்றுள்ளது. தேசியக் கொடியைப் […]

Read more

முற்கால மக்கள் வரலாறு

முற்கால மக்கள் வரலாறு, ஆயிஷா பதிப்பகம், 78, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5. வரலாறு என்பது இறந்த காலத்தில் வேர் பாய்ச்சி நிகழ்காலத்தை வழி நடத்தும் வல்லமை பெற்றது. இந்நூலில் குகைவாசிகள், அகழ்வாசிகள் உள்ளிட்ட பலரின் வரலாறுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் மனிதர்களுக்கு வழிகாட்டுதல்களும், உயரிய படிப்பினைகளும் உள்ளன. திருக்குர்ஆன் விளக்கவுரையாளரும், மார்க்க சட்ட மேதையுமான இப்னு கஸீர் (ரஹ்) அரபி மொழியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா என்ற சரித்திர நூலின் நான்காம் பாகத்தை எம்.அப்துர் ரஹ்மான் மன்பஈ, முற்கால மக்கள் வரலாறு […]

Read more

நீங்களும் விஞ்ஞானி ஆகவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா?, இரா. நடராசன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, சென்னை 18, விலை 65ரூ. விஞ்ஞானி ஆக வேண்டும் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழிகாட்டத்தான் ஆளிருக்காது. அப்படியாப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் கதை வடிவில் பல நாட்டு விஞ்ஞானிகளின் வாழ்க்கையை சுவைபட விளக்குகிறது இந்நூல். — மங்காவு, சொ. அருணன், கபிலன் பதிப்பகம், 321, மூன்றாம் முதன்மைச்சாலை, புதுச்சேரி -8, விலை 60ரூ. மொத்தம் 11 சிறுகதைகள் […]

Read more
1 2