வீழ்வேன் என்று நினைத்தாயோ?

வீழ்வேன் என்று நினைத்தாயோ?, மாலன், கவிதா பதிப்பகம், விலை 100ரூ. சிங்கப்பூர் குடிசைகள் எப்படி அடுக்குமாடி வீடுகள் ஆயின? சிங்கப்பூரை லீ குவான் யூ கட்டியமைத்த கதையை 128 பக்கங்களில் ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என்ற நூலில் சுருக்கமாக எழுதியிருக்கிறார் மூத்தப் பத்திரிகையாளரான மாலன். குடிசைகளில் இருந்த பெரும்பான்மை சிங்கப்பூர்வாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள் எப்படி சொந்தமாயின எனும் அத்தியாயத்திலிருந்து ஒரு பகுதி இது. ‘‘லீ குவான் யூவின் கனவுதான் என்ன? ஒரு தேசம் உறுதியாக நிற்க வேண்டுமானால் அதில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உறுதியாக […]

Read more

கண்ணுறங்காக் காவல்

கண்ணுறங்காக் காவல் (ஒரு முடிவின் ஆரம்பம்), ஆங்கிலத்தில் ப.சிதம்பரம், தமிழில் ரமணன், கவிதா பதிப்பகம், விலை 300ரூ. காங்கிரஸ் கட்சியின் மத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப. சிதம்பரம் எழுதிய கட்டுரைகள் கொண்ட நூல். அவர் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மொழி பெயர்த்தவர் ரமணன். அரசியல், பொருளாதாரம், வெளியுறவு, கொள்கை, சட்டம் ஆகியவை பற்றி தமது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார் சிதம்பரம். பக்கத்துக்குப் பக்கம் பயனுள்ள தகவல்கள் ஜொலிக்கின்றன. ஜனநாயகத்தின் உண்மையான பொருளைக் கூறுவதால், இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க […]

Read more

அபாயம் தொடாதே

அபாயம் தொடாதே, பட்டுக்கோட்டை பிரபாகர், கவிதா பதிப்பகம், விலை 200ரூ. கடந்த 40 ஆண்டுகளாகச் சிறுகதை, நாவல், தொடர்கதை, சின்னத்திரை தொடர்கள், வெள்ளித் திரையில் கதை – உரையாடல் எனத் தொடர்ந்து வெகுசன தளத்தில் பரவலாகப் பேசப்படும் எழுத்தாளரின் நாவல். எந்த முன்குறிப்பும் இல்லாமல் தொடங்கும் கதை, தொடங்கிய வேகத்திலேயே சட்டென முடிந்தும்போகிறது. சியாமளாவின் கொலைக்குக் காரணமான விவேக்கை அவனது கல்யாண மேடையில் வைத்தே கைது செய்வதோடு நாவல் முடிகிறது. வழக்கமான துப்பறியும் கதைதான் என்றாலும் மின்னல் வேக வாசிப்புக்கு உத்தரவாதம் உண்டு. நன்றி: […]

Read more

சொல் புதிது பொருள் புதிது

சொல் புதிது பொருள் புதிது, ம. இராஜேந்திரன், கவிதா பதிப்பகம், பக். 224, விலை 170ரூ. நமது அன்றாடப் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறும் ஐம்பது ஆங்கிலச் சொற்களைத் தேர்வு செய்து அவற்றிற்கு நிகரான தமிழ்ச் சொற்களை ஆய்வு நோக்கில் நிறுவியிருக்கிறார் ம. இராசேந்திரன். ஆங்கிலத்தில் இன்ன சொல்லுக்கு இன்ன பொருள்; இதைத் தமிழில் இந்த சொல்லால் குறிக்கலாம் என்கிற பாணியில் இவர் எழுதவில்லை. ஆங்கிலச் சொல்லுக்குரிய பொருள்; அந்தப் பொருளையுணர்த்தும் தமிழ்ச் சொற்கள். அவை இலக்கியத்திலும் மக்கள் வழக்கிலும் எங்கெங்கெல்லாம் பயின்று வந்திருக்கின்றன; அவற்றில் மிகவும் […]

Read more

கணையாழிக் கட்டுரைகள் (1995-2000)

கணையாழிக் கட்டுரைகள் (1995-2000), தொகுப்பாசிரியர் ம.ரா. க. முத்துக்கிருண்ன், ஜீவ கரிகாலன், கவிதா பதிப்பகம், பக். 352, விலை 260ரூ. சிறுபத்திரிகை உலகில் தனக்கென தனி இடம் பிடித்த “கணையாழி‘’யில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழந்தமிழ், சமகால இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், தமிழ்த் திரைப்படங்கள், வெளிநாட்டுத் திரைப்படங்கள் பற்றிய அறிமுக, விமர்சனக் கட்டுரைகள், புதிய நாடக முயற்சிகள் பற்றிய கட்டுரைகள், படைப்பாளிகளின் இலக்கியம் சார்ந்த பதிவுகள், பழங்கால வரலாறு தொடர்பான கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் என பல திசைகளிலும் பயணிக்கின்றன இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள […]

Read more

எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன்

எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன், ஆர்.சி.சம்பத், கவிதா பதிப்பகம், பக்.160, விலை ரூ.120. எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள் எத்தனையோ வந்திருந்தாலும், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் எத்தனையோ சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் இடம்பெற்றிருக்கும் என்பதை இந்த நூல் வெளிக்கொண்டு வந்துள்ளது. எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்கும்போது அழுது நடிக்க மாட்டார். முகத்தை மூடிக்கொள்வார். சிலபேர் இதைப்பார்த்து, அவருக்கு உணர்ச்சிகரமாக நடிக்கத் தெரியாது என்பார்கள். உண்மை அதுவல்ல. அவர் தன் ரசிகர்களிடையே ஓர் அழகனாகவும், வீரனாகவும் வெளிப்பட விரும்பினார். வீரன் அழுதால் மக்களுக்கு அவன் வலிமையில் நம்பிக்கை […]

Read more

கரப்பான் பூச்சி நகைக்குமோ?

கரப்பான் பூச்சி நகைக்குமோ?, நீதியரசர் பிரபா ஸ்ரீ தேவன், கவிதா பதிப்பகம், பக். 280, விலை 225ரூ. அனுபவ அறிவும் அக்கறையும் ‘எனக்கு ஏதாவது பெருமை இருக்குமானால், எனது எண்ணத்தில் தெளிவும், செயல்பாடுகளில் நேர்மையும், தீர்ப்புகளில் நியாயமும் இருக்குமானால், அதற்குக் காரணம் நான் வி.கிருஷ்ணஸ்வாமி அய்யரின் கொள்ளுப் பேத்தி என்பது தான்’ (பக்.80) என்று பெருமையுடன் கூறும் நூலாசிரியர், தினமணி நாளிதழில் எழுதிய 45 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ‘அவர்கள் குரல்களைக் கேளுங்கள். அவை நம்பிக்கையின் சவங்களுக்கு ஊதும் சங்கா இல்லை சமூகத்தை […]

Read more

கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல், மாலன், கவிதா பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 130ரூ. நூலாசிரியர் பல்வேறு கட்டங்களில் எழுதிய 18 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். முதல் கட்டுரையில் பாரதியே நவீன சிறுகதையின் முன்னோடி என விளக்குவதோடு நிற்காமல் வ.வே.சு. அய்யரின் ஐரோப்பியத் தாக்கத்தை ஆதாரப் பூர்வமாகக் கூறியிருப்பது நூலின் தனிச்சிறப்பாகும். புதுமைப்பித்தனும், சமீபத்தில் மறைந்த ஜெயகாந்தனும் எந்த அடிப்படையில் வேறுபடுகிறார்கள், அவர்களது வாழ்க்கைச் சூழல் அவர்களது எழுத்தை எந்த வகையில் வேறுபடுத்துகிறது என்பதை மிக நுட்பமாக விளக்கியிருக்கிறார். கயல் பருகிய கடல் எனும் […]

Read more

கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல், மாலன், கவிதா பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. இலக்கியங்களை ஆய்வு செய்து கட்டுரைகள் வடிப்பதில் புகழ் பெற்ற மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதிய சிறந்த இலக்கியக் கட்டுரைகள் கொண்ட நூல் கயல் பருகிய கடல். இதில் மாலன் முக்கியமாக ஆராய்ந்துள்ள விஷயம், தமிழில் வெளியான முதல் சிறுகதை எது? அதை எழுதியவர் மகாகவி பாரதியாரா? அல்லது வ.வே.சு. அய்யரா? தமிழ் இலக்கியவாதிகள் நீண்ட காலமாக சொல்லி வருவது, தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு. அய்யர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்பதாகும். […]

Read more

பஞ்ச லட்சணதிருமுக விலாசம்

பஞ்ச லட்சணதிருமுக விலாசம், பிரமனூர் வில்லியப்ப பிள்ளை, பதிப்பாசிரியர் ம.பெ. சீனிவாசன், கவிதா பதிப்பகம், பக். 353, விலை 200ரூ. 96 வகை சிற்றிலக்கியங்களை பட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால் பிற்காலத்தில் பல்கிப் பெருகிய பல்வேறு சிற்றிலக்கியங்களில் விலாசம் உட்பட சிற்றிலக்கிய வகை 417 என்று ச.சிதம்பரம் கூறியுள்ளார். அந்த வகையில் சிற்றிலக்கியங்கள் 96 வகைதான் எனப் பாட்டியல்கள் வரையறை செய்திருப்பது பொருந்தாது என்கிறார் பதிப்பாசிரியர். அத்தகைய சிற்றிலக்கியங்களுள் ஒன்றுதான் விலாசம். அவற்றுள் பிரமனூர் வில்லியப்ப பிள்ளை, சிவகங்கை துரைசிங் மன்னரைப் பாட்டுரைத் தலைவனாகக் […]

Read more
1 2