துளி விஷம்

துளி விஷம், வாதினி, 19-29, ராணி அண்ணாநகர், பி.டி. ராஜன் சாலை, கே.கே. நகர், சென்னை 78, விலை 120ரூ. விதவிதமான கதைகள், விதவிதமான மனிதர்கள், விதவிதமான அனுபவங்களைக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்நூலாசிரியர் ஆனந்த் ராகவ், ஒரு நிருபர். ஓவியம்போல் எழுத்தில் வரையத் தெரிந்த நிருபர். கண்டதும், கேட்டதும், பட்டதும்தான் கதைகளாகின்றன என்றபோதும் ஆனந்தின் பார்வைத் துல்லியமும் எடுத்தக் கொள்ளும் கோணங்களம் அபூர்வமானவை. லயிப்புடன் ஊன்றி வாசிக்கச் செய்பவை. கிளர்ச்சியுறச் செய்யாத, அதே சமயம் ரசனையுடன் கவனிக்கத் தூண்டுபவை. எழுத்தில் மிகை இல்லை. […]

Read more

டால்ஸ்டாய் சிறுகதைகள்

டால்ஸ்டாய் சிறுகதைகள், டால்ஸ்டாய், ஆப்பிள் பள்ளிக் இன்டர்நேஷ்னல், (பி) லிட், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 94, பக். 144, விலை 90ரூ. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இலக்கிய நெஞ்சங்களில் பெரும் தாக்கத்தை உருவாக்கி, புதிய அதிர்வை, புதிய கோணத்திலில் கதைக்களம் உருவாக்கக் காரணமானவர் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். அவரின் வானவில்லை ஒத்த ஏழுவிதமான புதிய கதைகளைத் தொகுத்து வந்துள்ளது இந்நூல். நகைச்சுவையையும் வாழ்வியலையும் சேர்த்துக் கட்டியுள்ள இக்கதைகள் வாசிப்பவருக்கு ருசி கூட்டி வாழ்வில் தேடலைத் தூண்டி வரம் அளிக்க […]

Read more

ஸ்ரீ ரமண மகரிஷி

ஸ்ரீ ரமண மகரிஷி, பாலகுமாரன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 600002, பக். 344, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-512-0.html இந்தியத் திருநாட்டின் பெருமைகளுள் குறிப்பிடத்தக்கது, ஞானியர் பலர் தோன்றி, மக்களை நெறிப்படுத்தியதாகும் என்பர். ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றோர், வடநாட்டில் தோன்றியதுபோல, ராமலிங்க சுவாமிகள், பட்டினத்தார் போன்றவர்கள் தென்னாட்டில் தோன்றி பெருமை சேர்த்தனர். அண்மையில் வாழ்ந்து மக்களை நெறிப்படுத்திய ஸ்ரீரமண மகரிஷியும் இன்றியமையாத மகான் ஆவார். அவரின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் தெளிவாகக் கூறுகிறது. […]

Read more

பெரியார் பாதை

பெரியார் பாதை, நிலா சூரியன் பதிப்பகம், 27/2, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 75ரூ. சாதிமுறையை ஒழித்துத் தீண்டாமை அகற்றி, திராவிடனின் பெருமையை வரலாற்று வழியாக நிலைநிறுத்தி, பகுத்தறிவு மிக்க, கல்வியறிவு மிக்க சமுதாயம் உருவாக்க வேண்டுமென கடுமையாக உழைத்தார் தந்தை பெரியார். சமுதாயத்துக்காக அவர் ஆற்றிய தொண்டும், சேவையும், புரட்சியும் ஈடு இணையற்றது. அத்தகைய புகழ்பெற்ற பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை ரத்தினச் சுருக்கமாக புதுக்கவிதை நடையில் படைத்திருக்கிறார் நூலாசிரியர் பேரா. செ. ஏழுமலை.   —-   […]

Read more

தேவி பாகவதம்

தேவி பாகவதம், குருபிரியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ. புராணங்களில் இருந்தும், இதிகாசங்களில் இருந்தும், சுவையான சம்பவங்களை தொகுத்துக் கொடுத்துள்ளார் ஆசிரியர் குருபிரியா. மகாவிஷ்ணுவுக்கு மகாலட்சுமி அளித்த சாபம், புதன் யாருடைய மகன், வியாசர் தோற்றம், பீஷ்மரின் சபதம், பாண்டவர் வரலாறு, கிருஷ்ணாவதாரம் உள்பட 35 நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.   —-   நான்+நான்=நாம், வந்தனா அலமேலு, நக்கீரன், 105, ஜானிஜான்கான் ரோடு, சென்னை 14, விலை 60ரூ. ஆண், பெண் பழகும்போது ஏற்படும் […]

Read more