பன்முகன்

பன்முகன், சந்திரா மனோகரன், காவ்யா வெளியீடு, விலை 180ரூ. கவிதை, கட்டுரை, நாவல், சிறுவர் இலக்கியம், விளையாட்டு, மொழிபெயர்ப்பு பணிகளோடு சிற்றிதழாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் நூலாசிரியரின் 25-ஆவது நூலிது. இதிலுள்ள 24 கதைகளிலும் வரும் சாதாரண மனிதர்கள், எல்லாச் சோதனைகளிலிருந்தும் தன்னம்பிக்கையோடு மீண்டெழுந்து சாதனை மனிதர்களாக தடம் பதிக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026537.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: தி இந்து, 7/4/2018.

Read more

மைதானம்

மைதானம் (விளையாட்டுக் கட்டுரைகள்) , சந்திரா மனோகரன், ஓவியா பதிப்பகம், பக்.144, விலை  ரூ.100. கிரிக்கெட்டில் தொடங்கி, கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி, தடகளம், செஸ், கார் பந்தயம் என பல்வேறு விளையாட்டுகளை பற்றி இந்நூல் அலசுகிறது. மேற்கண்ட விளையாட்டுகளுடன் தொடர்புடைய உலகக் கோப்பைகள், ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டி தொடர்பான விவரங்கள், அதில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களைப் பற்றியெல்லாம் நூலாசிரியர் விவரித்திருக்கிறார். டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ரோஜர் ஃபெடரர், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, தமிழகத்தைச் சேர்ந்த கார் பந்தய […]

Read more

தமிழர் தளபதிகள்

தமிழர் தளபதிகள், கா. கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை 17, பக். 112, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-4.html மனித குலத்தில் போர் என்பது காலந்தோறும் நடந்துகொண்டே இருக்கிறது. போர்க் கருவிகளும், போர் முறைகளும் மாறியிருக்கிறதே தவிர போர் மறையவில்லை. இந்நூல் போர்ப்படை தளபதிகள் குறித்து சங்க இலக்கிய நூலின் வழி நின்று விவரிக்கிறது. மறைந்திருந்து மரத்துக்கு நீர் வார்க்கும் வேர்கள் போலவே போர்ப்படைத் தளபதிகள் திகழ்ந்தனர் என்பதை சரித்திர நிகழ்வுகளையும், சங்கத் தமிழ் பாடல்களையும், […]

Read more

சங்கச் செல்வி

சங்கச் செல்வி (செம்மொழிப் பெட்டகம்), முனைவர் சுந்தர ஆவுடையப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 128, விலை 60ரூ. சங்க நூல்களில் உள்ள அரிய பொருட்கள் பற்றி அழகாக எடுத்துரைக்கும் 30 சிறிய கட்டுரைகளின் தொகுப்பு நூல். யவனர் என்னும் அயல்நாட்டார் பற்றியும், அசுணம் என்னும் விலங்கு பற்றியும் தெரிவிக்கும் இந்த நூல், பண்டைத் தமிழரின் பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் தெளிவாக விளக்குகிறது. வான்கேழ் வட்டம் என்னும் சந்தனம் அரைக்கும் வெள்ளைக்கல், இந்தியாவின் […]

Read more