வரலாறு கற்பித்தலில் புதுமைகள்

வரலாறு கற்பித்தலில் புதுமைகள், வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 320, விலை 200ரூ. ஆசிரியர் பணிக்குப் படிப்பவர்களுக்காக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்க கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின்படி வரலாறு கற்பிப்பதைப் பற்றி எழுதப்பட்டுள்ள நூல். வரலாறு கற்பித்தலில் புதுமைகள் என்று தலைப்பு இருந்தாலும், கற்பித்தலில் இன்றைய புதுமை எப்படி படிப்படியான வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்டது என்பதை நூல் விளக்குகிறது. கிரேக்க, ரோமானிய, இடைக்கால, மறுமலர்ச்சி கால, நவீன கால வரலாற்று எழுத்தாண்மைகளை நூல் விளக்குகிறது. இந்தியாவிலும்கூட கல்ஹனா, அபுல்பஃஸல் காலத்திலிரந்து அர்.சி. மஜும்தார் […]

Read more

உணவு யுத்தம்

உணவு யுத்தம், எஸ். ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 240ரூ. நமது உடல் நலக் குறைபாட்டுக்கு, மாறிப்போன முறையற்ற உணவு முறையே காரணம். உணவின் பெயரால் நாம் நாள்தோறும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை எடுத்துக்கூறும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதி 40 கட்டுரைகளின் தொகுப்பு. பிரபலமாகி வரும் துரித உணவகங்கள் உடல நலத்திற்கு பிராதன கேடு விளைவிக்கும். எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம். மரண விலாஸ்களாக மாறிவிட்ட சாலையோர மோட்டல்கள், ஆயுளைக் குறைக்கும் ஆயில் (எண்ணெய்) உணவுகள், வயிற்றைப் புரட்டிப் போடும் புரோட்டாக்கள், நகரம் […]

Read more

நான் கண்ட ஜப்பான்

நான் கண்ட ஜப்பான், எத்திராஜன் ராதா கிருஷ்ணன், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-338-4.html பேராசிரியர் எத்திராஜன் ராதாகிருஷ்ணன், 23 முறை ஜப்பானுக்கு சென்று வந்தவர். எனவே ஜப்பான் பற்றிய பயனுள்ள தகவல்களைக் கூறும் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ஜப்பானில் மேலை நாட்டு நாகரிக்த்தின் தாக்கம் மிகுந்து வந்தாலும், ஜப்பானிய பெண்களிடம் பெண்மைக்கே பெருமையும், அழகும் சேர்க்கும் மென்மையும், நளினமும் நிறைந்து காணப்படுகின்றன என்கிறார் ஆசிரியர். ஜப்பானிய கல்வி முறையைப் பற்றிய விவரங்கள் விரிவாகக் […]

Read more

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம் சாமி சிதம்பரனார், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை 14, பக். 142, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-807-4.html சித்தர்கள் என்றதும் சித்த வைத்தியம் பதினெண் சித்தர்கள், கூடு விட்டு கூடு பாய்தல் உள்ளிட்ட எண் வகைச் சித்தர்கள், அற்புதங்களைச் செய்யக் கூடியவர்கள் என்ற வகையில்தான் எண்ணங்கள் ஓடும். ஆனால் சாமி சிதம்பரனார் எழுதியுள்ள சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம் என்ற நூலைப் படிக்கும்போது சித்தர்களின் பல்வேறு குணாதிசயங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. மக்கள் […]

Read more

கலீபாக்கள் வரலாறு

கலீபாக்கள் வரலாறு, வி.எம். செயது அகமது, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 75ரூ. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு நல்லாட்சி புரிந்த அபூபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி(ரலி) ஆகிய கலீபாக்களின் வரலாற்றையும் அவர்களுக்கு இணையாக நல்லாட்சி செய்த உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) வரலாற்றையும் வடக்கு கோட்டையார் வி.எம். செய்யது அகமது எழுதியுள்ளார். இந்த வரலாற்றுத் தொடர் தினத்தந்தி ஆன்மிக மலரில் வெளியாகி லட்சக்கணக்கான வாசகர்களின் […]

Read more

இதயம் திருந்த இனிய மருந்து

இதயம் திருந்த இனிய மருந்து, சிராஜுல் ஹஸன், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை12, பக். 63, விலை 30ரூ. முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்களுக்கும் இஸ்லாத்தின் சில அடிப்படைச் செய்திகளை, இறை மார்க்கத்தின் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துரைக்கும் நோக்கில் மிகமிக எளிமையாக ஆக்கப்பட்டிருக்கும் நூல் இது. இஸ்லாம் வலியுறுத்தும் இறைக்கொள்கை, ரமலான் மாதத்தின் சிறப்பு நோன்பு. மறுமை போன்றவற்றுடன் பெற்றோரை மதித்தல், நட்புக் கொள்ளுதல், கலந்தாலோசித்தல் முதலிய வாழ்வியல் நடைமுறைகளையும் மனதில் பதியும்படி விளக்கப்பட்டுள்ளது சிறப்பு. மனிதர்களின் இதயங்களில் படிந்துள்ள […]

Read more

அத்தையின் அருள்

அத்தையின் அருள், சு. வெங்கடசுப்ராய நாயக்கர், கண்ணம்மா பதிப்பகம், 144, மகாலட்சுமி இல்லம், பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி, பக். 100, விலை 70ரூ. அப்பாவைக் காட்டிலும மாமாவின்பேரில்தான் குழந்தைகளுக்கு பிரியம் அதிகம். அப்பாவின் உடன்பிறந்த அத்தை பேரிலும் ஒரு அலாதிப் பிரியம் ஏற்படும். அதிலும் சிறுபிள்ளையாய், தாயை இழந்துவிட்ட குழந்தைகளுக்கு அப்பத்தை பேரில் சொல்லவொண்ணாப் பிரயம் சகஜமே என்று கி.ராஜநாராயணன் கொடுத்திருக்கும் முன்னுரையே இந்நூல் பற்றிய விளக்கமாக அமைந்துவிடுகிறது. இந்நூலை யாரோ ஒருவன் தன் அத்தையைப் பற்றி எழுதியிருப்பதாக சாதாரணமாக நினைக்க முடியாது. ஒரு அத்தையை […]

Read more
1 2 3