தமிழ் சினிமாவின் மயக்கம்

தமிழ் சினிமாவின் மயக்கம், கௌதம சித்தார்த்தன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்கங்கள் 184, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-810-4.html ஒரு சினிமாவின் நீள அகலங்களை அதன் போக்கில் சொல்லிவிட்டு, பிடித்திருந்தால் ஆஹா, ஓஹோ என்றும் பிடிக்காவிட்டால் மொக்கை என்று எழுதுவது ரசனையின் பாற்பட்டது. அதை விமர்சனம் என்று தளத்தில் இயங்க விட்டுப்பார்க்கும் போக்கு, தமிழ் இதழ்களில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதைத்தாண்டி ரசனை விமர்சனப் போக்கிலிருந்து விலகி அதனுள் ஒரு நுட்பமான அரசியல் […]

Read more

கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள்

இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள், மு. அப்பாஸ் மந்திரி, நர்மதா வெளியீடு, சென்னை – 17, பக்கம் 192, விலை 90 ரூ. அன்பையும் அறத்தையும் அடிநாதமாகக் கொண்டது கன்ஃபூசியனிஸம். இதை சீனாவில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அறிமுகப்படுத்தியவர் கன்ஃபூசியஸ். உண்மை, இரக்கம், ஒருமுகப்படுத்துவது, சகோதரத்துவம், தாய்மையைப் போற்றுதல், கல்வி, ஒழுக்கம் போன்ற பலவற்றைக் குறித்த கன்ஃபூசியஸின் தத்துவங்களை விளக்கும் கதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. சமூகத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும் சென்றடையும் வகையில், கசப்பு மருந்துக்கு இனிப்புப் பூச்சுடன் தத்துவங்களை அளிக்கும் இந்த […]

Read more

நாடக மேடையும் திரை உலகமும்

நாடக மேடையும் திரை உலகமும், ஏ.எல்.எஸ். வீரய்யா, திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 17, விலை 75 ரூ கவிஞர் கண்ணதாசனின் பாசறையில் உருவான இந்நூலாசிரியர், சுமார் 50 ஆண்டுகள் சினிமாத் துறையிலும், அதற்கு முன் சில ஆண்டுகள் நாடகத் துறையிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவர். அந்த அடிப்படையில் இவ்விரு துறைகளைப் பற்றிய தனது சுவாரஸ்யமான அனுபவங்களையும், மற்ற பல செய்திகளையும் தொகுத்து அவ்வப்போது புத்தகங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இந்நூலிலும் வியப்பான, சுவையான பல செய்திகளை துணுக்கு வடிவிலும், சிலவற்றை […]

Read more

காற்றின் கையெழுத்து

காற்றின் கையெழுத்து, பழநிபாரதி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 130ரூ. ஒரு பத்திரிகை நின்று போனது குறித்து எழுதும்போது… எழுத்தாளர் சுஜாதா, ‘நிகழ் காலத்தைப் பிரதிபலிக்காத எதுவும் நிலைக்காது’ என்று சொன்னார். பத்திரிகைகளுக்கு மட்டுமல்ல… படைப்பாளிக்கும் அது பொருந்தும். சினிமா பாடலாசிரியராக இருந்தாலும் பழநிபாரதிக்குள் இருக்கும் ‘சமூகன்’ கொடுக்கும் சாட்டையடிகள்தான் இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள். வளரும் நாடுகளை உய்விக்க வந்ததாகச் சொல்லப்படும் உலகமயமாக்கல், பாரம்பரியத்தை நசுக்கி அன்னிய நாட்டிடம் கையேந்தி நிற்கும் நிலை ஆகியவற்றைக் காட்டுவதாகவே இந்த தொகுப்பின் […]

Read more

மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்.

மனிதப்புனிதர் எம்.ஜி.ஆர், கே.பி. ராமகிருஷ்ணன், எழுத்தாக்கம் – ஆர். கோவிந்தராஜ், வெளியீடு- விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை -2, விலை 110ரூ. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் என்ற பெயர் கலை, அரசியல் மற்றும் வெகுமக்கள் கலாச்சாரத்தில் இன்னும் அதிர்வுகளை ஏற்படுத்துவதாகும். எம்.ஜி.ஆர் என்ற ஆளுமை மறைந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் தமிழ் நினைவில் அவர் அழிக்க முடியாத புராணிக கதாபாத்திரமாக நீடிக்கிறார். அவரது வள்ளல் தன்மை, மனிதாபிமானம், மக்கள் ஈர்ப்பு, அரசியல், சினிமா என சகல பரிமாணங்களிலும் நு¡ல்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் […]

Read more

மயிலிறகு மனசு

மயிலிறகு மனசு – தமிழச்சி தங்கபாண்டியன்; பக். 79; ரூ.80; விகடன் பிரசுரம், சென்னை-02 நெருக்கமான நண்பர்களிடத்தில் நாம் கொண்டிருக்கும் நட்பின் பிரதிபலிப்புகளை உளவியல் நோக்கோடு ஆராயும் நூல். பள்ளித்தோழி, வீட்டு வேலை செய்பவர், திரைப்பட நடிகை, மருத்துவர், சிந்தனையாளர், கவிஞர் போன்றோருடனான நட்பின் பிணைப்புகளை ஆசிரியர் தருகிறார். இனிமையான நினைவுகள் என்பவை எப்போதுமே மனதில் நிலைத்து நிற்பவை. நெருக்கமான சிலரைப் பற்றி நினைவுகள் மனதில் தோன்றினாலே அவை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த அடிப்படையில், கைவினைக் கலைஞர் ராதிகா, திரைப்பட நடிகை ரோகிணி, கவிஞர் […]

Read more