சஹிதா
சஹிதா, கே.வி.ஷைலஜா, வம்சி புக்ஸ் வெளியீடு, விலை: ரூ.300. பெண் தன்னுடைய வாழ்க்கையில் மூன்று விடுதலைகளுக்கான போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. உடல் விடுதலை, சமூக விடுதலை, ஆன்ம விடுதலை. இதில் ஆன்ம விடுதலைக்குத் தான் எடுக்கும் முன்னெடுப்பையும் போராட்டத்தையும் முன்வைக்கிறது, மொழிபெயர்ப்பாளர் ஷைலஜாவின் முதல் நாவலான ‘சஹிதா’. துறவறமும் வீடுபேறும் ஆண்களுக்கானவை என்ற வழமையிலிருந்து விலகி, இறைமை என்பது பெண்களுக்குள் எப்போதுமே சூல் கொண்டியங்கும் பண்பு நிலை என்பதை இந்நாவல் உணர்த்துகிறது. தினம் ஐந்து முறை தொழுகை நடத்தும் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த சஹிதாவுக்கு […]
Read more