தப்புக்கடல

  தப்புக்கடல, பெ.கருணாகரன், குன்றம் பதிப்பகம், விலை 150ரூ. மண் வாசனை வீசும் பெ. கருணாகரன் கதைகள் தமிழ்நாட்டில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், பத்திரிகையாளருமான .கருணாகரன் எழுதிய 15 சிறுகதைகள் கொண்ட புத்தகம் ‘தப்புக்கடல’. கதாபாத்திரங்களை வடிவமைப்பது, கதையை வேகமாக நடத்திச் செல்வது இரண்டிலும் முழு வெற்றி பெற்றிருக்கிறார், கருணாகரன். அணிந்துரை வழங்கிய வெ. இறையன்பு, “பெ.கருணாகரன் எழுத்துகள் பரிச்சயமானவை மட்டுமல்ல. படிக்கத் தூண்டுபவையும் கூட… மண்ணின் மணம் நிறைந்தவை” என்று குறிப்பிட்டிருப்பது, முற்றிலும் உண்மை. நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

ஒரு துணைவேந்தரின் கதை

  ஒரு துணைவேந்தரின் கதை, சே.சாதிக், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், முதல்பாகம் விலை 400ரூ, இரண்டாம் பாகம் விலை 350ரூ. சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சே.சாதிக், தனது வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களைத் தொகுத்து கதை போல எழுதி இருக்கிறார். முதல் பாகத்தில் இளமைக் காலப் பள்ளிப் படிப்பு முதல் பி.இ.படிப்பில் சேரும் வரையிலான நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். இரண்டாம் பாகத்தில் பொறியியல் மாணவராகவும், ஆசிரியராகவும் இருந்த காலகட்டத்தை விளக்கியுள்ளார். எழுத்து, மொழி, பேச்சு மொழி இவ்விரண்டையும் கையாண்டு மிகச் சாதாரண நடையில் பாமரரும் […]

Read more

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0,

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0, சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், விலை 175ரூ. உணர்வு மேலாண்மை என்ற எமோஷனல் இன்டெலிஜென்ஸ் புத்தகத்தில் மனிதர்களிடையே நட்பை ஏற்படுத்த தேவைப்படும் குணாதிசயங்கள் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் நமக்கு ஏற்படும் விதவிதமான உணர்வுகளை எப்படி ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்ற வழியையும் இந்த நூல் கற்றுத்தருகிறது. அத்துடன், பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும், பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தங்களில் இருந்து மீள்வதற்கான வழிகளும் கற்றுத்தருகிறது. மன்னிப்பின் அவசியத்தையும், மற்றவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவத்தையும் இந்த நூல் மூலம் தெரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் […]

Read more

பத்துப்பாட்டினில் ஆளுமை வளர்ச்சி,

பத்துப்பாட்டினில் ஆளுமை வளர்ச்சி, முனைவர் கெ.ரவி, நிலாசூரியன் பதிப்பகம், விலை 200ரூ. பழந்தமிழர்கள் ஆளுமைத் திறன் உடையவர்களாகத் திகழ்ந்தனர். சங்க இலக்கிய நூலான பத்துப்பாட்டினில் இடம் பெற்றுள்ள தமிழர்களின் ஆளுமையை முனைவர் கெ.ரவி ஆய்வு செய்துள்ளார். பத்துப்பாட்டினில் காணப்படும் ஆளுமை வளர்ச்சிக் கோட்பாடு, உளவியல் அறிஞர்களின் ஆளுமை வளர்ச்சிக் கோட்பாட்டோடு ஒத்துப்போகும் தன்மையை இந்த நூலில் அவர் விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

பேராற்றல் படைத்தவர்களே எழுந்திருங்களே

பேராற்றல் படைத்தவர்களே எழுந்திருங்களே, ஏ,எல்.சூர்யா, பி.பாசிட்டிவ் புரொடக்ஷன்ஸ், விலை 100ரூ. வாழ்க்கையில் வெற்றி பெற வழிகாட்டும் கட்டுரைகள் அடங்கிய புத்தகம். “அறிவாற்றலும் அறியாமையும்”, “கனவுகள் மெய்ப்படுமா?”, “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” முதலான தலைப்புகளில் 15 கட்டுரைகளை ஏ.எல்.சூர்யா எழுதி இருக்கிறார். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

சட்டம் என்ன சொல்கிறது?

சட்டம் என்ன சொல்கிறது?, மணிமேகலைப் பிரசுரம், விலை 220ரூ. சட்டம் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியம், பல்வேறு பிரச்சினைகளுக்கு சட்டம் கூறும் தீர்வு என்ன என்பதை, சட்ட நிபுணர் ஏ.பி.ஜெயச்சந்திரன் கேள்வி – பதில் ரூபத்தில் எழுதியுள்ளார். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

உலக நாயகன் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 280ரூ. ‘தினத்தந்தி’யில் வரலாற்றுச் சுவடுகள் நெடுந்தொடர் வெளியானபோது, நடிகர் கமல்ஹாசன் வரலாறு 70 வாரங்களாக வெளிவந்தது அது இப்போது தினத்தந்தி பதிப்பகத்தால் ‘உலக நாயகன் கமல்ஹாசன்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 352 பக்கங்கள். முழுவதும் கண்ணைக் கவரும் வண்ணத்தில். 6 வயதில் ‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது. சினிமாவுக்காக பரத நாட்டியம் கற்றுக் கொண்டு ‘டான்ஸ் மாஸ்டர்’ ஆனது. 27 வயதில் நூறு படங்களில் நடித்து சாதனை புரிந்தது. தமிழ், மலையாளம், […]

Read more

பொங்கல் விழாச் சிந்தனைகள்

பொங்கல் விழாச் சிந்தனைகள், ஐவர் வழி.வ.வேட்பையன், திருவள்ளுவர் மன்றம், விலை 150ரூ. பொங்கல் பற்றியும், இலக்கியங்கள் குறித்தும் பயனுள்ள கட்டுரைகள் கொண்ட நூல். தமிழறிஞர்கள் புலவர்களும், எழுதிய கட்டுரைகள் சிந்தனைக்கு விருந்தளிக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

அனைத்து நோய் தீர்க்கும் 50 யோசனைகள்

அனைத்து நோய் தீர்க்கும் 50 யோசனைகள், பி.கிருஷ்ணன் பாலாஜி, ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி, விலை 300ரூ. ஆரோக்கியமா வாழ யோகாசனங்கள் உதவுகின்றன. அனைத்து வகையான நோய்களைத் தீர்க்க உதவும் 50 யோகாசனங்கள் பற்றி படங்களுடன் இந்த நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

புத்தரின் போதனைகள் தீக நிகாயம்

புத்தரின் போதனைகள் தீக நிகாயம், பிக்கு போதிபால மகாதேரோ மற்றும் திரிபீடகத் தமிழாக்கக் குழுவினர், திரிபிடகக் குழுவினர், விலை 500ரூ. புத்தர் பெருமாள் 84ஆயிரம் போதனைகளைத் தமது தாய் மொழியான பாலி மொழியில் சீடர்களுக்கும், பொதுமக்களுக்கும் போதித்துள்ளார். இது காலப்போக்கில் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. தொடர்ந்து 21-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழ் மொழியிலும் வெளிவரத் தொடங்கி உள்ளது. அதனுடைய முதல்நூல்தான் இது. இதில் ஒழுக்கவியல் மற்றும் பெரும் இயல் கீழ் 34 பிரிவுகளில் புத்தரின் போதனைகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் […]

Read more
1 47 48 49 50 51 223