வியப்பின் மறுபெயர் வீரமணி

வியப்பின் மறுபெயர் வீரமணி, மஞ்சை வசந்தன், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, விலை 250ரூ. திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல். ஒரு காவிய நாயகரின் வரலாற்றை, காவியமாகவே படைத்திருக்கிறார் மஞ்சை வசந்தன். புத்தகத்தை கையில் எடுத்தால், கீழே வைக்க மணம் வராது. அந்த அளவுக்கு சுவை, விறுவிறுப்பு. புத்தகத்தில் உள்ள மறக்க முடியாத சில தவல்கள் பிறந்து 11 மாதமே ஆகி இருந்த நிலையில் வீரமணியின் தாயார் மறைந்தார். அதன் பின் சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார். இவருடைய இயற்பெயர் சாரங்கபாணி. […]

Read more

நட்சத்திரத் தோரணங்கள்

நட்சத்திரத் தோரணங்கள், கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு, புதுகை தென்றல் வெளியீடு, விலை 70ரூ. ஹைக்கூ கவிதைகள் தோன்றி 100 ஆண்டுகள் ஆகின்றன. அதையொட்டி, இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு எழுதியுள்ள அழகான ஹைக்கூ கவிதைகள், படங்கள் இடம் பெற்றுள்ளன. ஹைக்கூ கவிதைகளை ரசிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்கள் இந்த நூலை பெரிதும் ரசிப்பார்கள். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

ஐயப்பனின் முத்துமணி மாலை

ஐயப்பனின் முத்துமணி மாலை, புலவர் வெய்கை முத்து, மு.கல்யாணி பதிப்பகம், விலை 100ரூ. ஐயப்பன் வரலாறும், ஐயப்பன் பாடல்களும் அடங்கிய நூல். புத்தகம் கண்ணுக்கு அழகாகவும், கருத்துக்கு விருந்தாகவும் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

நண்டுமரம்

நண்டுமரம், இரா.முருகன், கிழக்கு பதிப்பகம், விலை 250ரூ. பல்வேறு பத்திரிகைகளில் எழுத்தாளர் இரா.முருகன் எழுதிய 30 சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு சிறுகதையிலும் கதாபாத்திரங்களுக்கிடையே நிகழும் உரையாடல்கள் தனித்துவமானவை. அவர் கையாளும் நடை தேர்ந்த எழுத்தாளருக்குரிய நடை. படிக்கத் தூண்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

என் இதயமே நீ நலமா?

என் இதயமே நீ நலமா?, டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 80ரூ. இதயம், மனிதனை இயங்கச் செய்கின்ற தொழிற்சாலை. இத்தகைய சிறப்பு பெற்ற இதயம் எவ்வாறு இயங்குகின்றது? இதயத்தில் வருகின்ற நோய் நிலைகள், அதைத் தடுக்கும் வழிமுறைகள், எத்தகைய உணவுப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்? என்பன போன்ற கருத்துகளை நவீன விஞ்ஞான மருத்துவப் பார்வையிலும், அன்றைய சித்தர்கள் காட்டிய வழியிலும் இந்த நூலில் டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா அழகிய முறையில் விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

அய்ந்தைந்தாய்

அய்ந்தைந்தாய், க.பன்னீர்செல்வம், பரத் புக்ஸ், விலை 115ரூ. ஐங்கர விநாயகர், பஞ்ச சக்திகள், ஐந்து வகை நந்திகள், ஐந்தெழுத்து மந்திரம், இறைவனின் ஐந்தொழில், திருமாலின் ஐந்து படைகள், சிவனின் ஐந்து சபைகள் இப்படி ஐந்துடன் கூடிய அரிய பல தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

சவுந்தரியலகரி மூலமும் மொழிபெயர்ப்பும்

சவுந்தரியலகரி மூலமும் மொழிபெயர்ப்பும், வே.ராஜேஸ்வரி, ஷாந்து பதிப்பகம், விலை 200ரூ. முனைவர் பட்டத்துக்காக நூலாசிரியர் ‘சவுந்தரியலகரி மூலமும் மொழிபெயர்ப்பும் – ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 7 தலைப்புகளில் எழுதி உள்ளார். இதில் வடமொழியில் எழுதப்பட்ட ஆதிசங்கரரின் சவுந்தரியலகரியும், அதன் மொழிபெயர்ப்பான வீரகவிராச பண்டிதர் எழுதிய சவுந்தரியலகரியும் மொழிபெயர்ப்பு நோக்கில் ஆய்வு செய்யப்பட்டு பல தகவல்களை நூலாசிரியர் வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்

இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம், தமிழில் ரஷீத் ஹஜ்ஜுல், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 150ரூ. இஸ்லாத்தின் தன்னிகரில்லாத கொள்கைகளையும், நடைமுறைகளையும் குர்ஆனும், நபிமொழியும் பேசுகின்றன. இஸ்லாத்தின் விஷயதானங்களை அவற்றின் இயல்புகளோடு உள் வாங்கி எளிமையாகவும், அறிவுபூர்வமாகவும் இஸ்லாமிய அழைப்பாளர்கள் முன்வைக்க வேண்டும். இதன் மூலம் குழப்பங்கள் தெளிவடையும். சந்தேகங்கள் நீங்கும். அன்பு, சகோதரத்துவம் வளரும், புரிந்துணர்வுகள் அதிகரிக்கும். இஸ்லாம் பற்றிய பிழையான புரிதல்கள் அகலும். இந்த அடிப்படையில், இஸ்லாமிய அழைப்பாளர்களின் அழைப்பு மொழியின் தரத்தை நெறிப்படுத்தும் வகையில் அற்புதமான வழிமுறைகளை அல்லாமா யூசுப் […]

Read more

காந்தி வழியது உலகம்

காந்தி வழியது உலகம், பேராசிரியர் இராம் பொன்னு, சர்வோதையா இலக்கியப் பண்ணை, விலை 150ரூ. அகிம்சை வழியில் போராடி, இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் மகாத்மா காந்தி. காந்தியின் அடிச்சுவட்டில், அமைதியான முறையில் தங்கள் நாட்டுக்கு பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. கறுப்பின மக்களின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறையில் சித்ரவதை அனுபவித்தவர் மாண்டேலா. அவருடைய வாழ்க்கை வரலாறு உள்ளத்தை உருக்குகிறது, மற்றும் மார்டின் லூதர்கிங், தலாய்லாமா, “எல்லை காந்தி” கான் அப்துல் கபார்கான் உள்பட மொத்தம் 8 […]

Read more

மாறுமோ தமிழக வறட்சி நிலை?

மாறுமோ தமிழக வறட்சி நிலை?, ச. அரிகரபுத்ரன், மணிமேகலைப்பிரசுரம், விலை 60ரூ. நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் நாட்டு நலன், மக்கள் நலன், மொழி நலன், சிந்தனை ஆற்றல்கள் காணப்படுகிறது. பெண் குழந்தைகள் குப்பைத் தொட்டியில் வீசப்படும் அவலம் கண்டு ஆசிரியரின் உள்ளக்குமுறல் வெளிப்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more
1 49 50 51 52 53 223