நாடக இசைக் களஞ்சியம்

நாடக இசைக் களஞ்சியம், சங்கரதாஸ் சுவாமிகள், அரிமளம் சு.பத்மநாபன், காவ்யா, விலை 330ரூ. நாடக இசைக் களஞ்சியம் என்ற மையக்கருத்தை முன்னிறுத்தி முழுமையாக எழுதப்பட்ட நூல். இதில் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் கூறியுள்ள இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய 2 தனிப்பண்புகளும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ச் சூழலில் நாடகத் தமிழ் குறித்தும், நாடகத்திற்கான இசையின் பங்களிப்பு குறித்தும், இயல், இசை, நாடக அறிஞர்களிடமும், ஆய்வாளர்களிடமும், புதிய சிந்தனைகளையும், தேடுதல்களையும் இந்த நூல் உருவாக்கியுள்ளது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

சிரிக்கவும் சிந்திக்கவும்

சிரிக்கவும் சிந்திக்கவும், இலங்கை ஆ.ரகுபதி பாலஸ்ரீதரன், சுமதி பதிப்பகம், விலை 250ரூ. இலங்கையைச் சேர்ந்த ஆ.ரகுபதி பாலஸ்ரீதரன், நகைச்சுவையாக எழுதுவதில் புகழ் பெற்றவர். அவர் எழுதிய நகைச்சுவை கதைகள் அடங்கிய புத்தகம் இது. சிறுவர் நகைச்சுவைக் கதைகள், கணவன் – மனைவி கதைகள், மிருகங்களின் கதைகள், பைத்தியக்காரக் கதைகள், ஒரு பக்கக் கதைகள்.. இப்படி பல வகையான கதைகள் இதில் அடங்கியுள்ளன. சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தில், ஆசிரியர் வெற்றி பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

கூவாய் குறளே

கூவாய் குறளே, உரை தமிழறிஞர் க.ப.அறவாணன், தமிழ்க்கோட்டம், விலை 120ரூ. திருக்குறள் அதிகார எண் 71 முதல் 80 வரை வானொலியில் தமிழறிஞர் க.ப.அறவாணன் உரை நிகழ்த்தினார். அந்த உரையே “கூவாய் குறளே” என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது. திருக்குறளின் சிறப்பையும், திருக்குறள் காட்டும் பாதையை விட்டு விலகிச் சென்ற மக்களின் போக்கையும் அறவாணன் சுட்டிக்காட்டுகிறார். திருக்குறளை நுட்பமாக ஆராய்ந்து, அவர் எபதியுள்ள உரையைப் படிக்கும்போது, திருவள்ளுவரே நேரில் நின்று பேசுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள்

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள், உளவியல் நிபுணர் நளினி சந்திரசேகரன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 50ரூ. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்படி வளர்த்தால் அவர்களுடைய எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்று இந்த நூலில் விளக்கியுள்ளார், உளவியல் நிபுணர் நளினி சந்திரசேகரன். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

காமராஜர் ஓர் மகாத்மா

காமராஜர் ஓர் மகாத்மா, டாக்டர் தேனி அ. ஈஸ்வரதாஸ், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 75ரூ. “படிக்காத மேதை” என்றும், “தமிழகக் குழந்தைகளின் கல்விக்கண் திறந்தவர்” என்றும் போற்றப்படுபவர் காமராஜர். அவர் முதல் – அமைச்சராக இருந்தபோது, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அமல் நடத்தி சாதனை புரிந்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக எழுதியுள்ளார் டாக்டர் தேனி அ.ஈஸ்வரதாஸ். காமராஜர் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

பத்மினி

பத்மினி, டி.ராமகிருஷ்ணா, தமிழில் பேராசிரியர் சிவ.முருகேசன், சந்தியா பதிப்பகம், விலை 100ரூ. ஆங்கில நாவல் எழுதிய முதல் தமிழர் தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவை இணைந்திருந்த பழைய சென்னை மாகாணத்தில், 1854-ம் ஆண்டில் பிறந்தவர் டி.ராமகிருஷ்ணா. ஆங்கிலத்தில் நாவல் எழுதிய முதல் தமிழர் இவர்தான். “பத்மினி” ஓர் இந்தியக் காதல் கதை” என்ற இந்த நாவலை 1903-ம் ஆண்டில் (அதாவது 114 ஆண்டுகளுக்கு முன்) அவர் எழுதினார். அதைத் தமிழில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் சிவ.முருகேசன். விஜயநகர அரசரைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றும் சலுவா என்பவன், […]

Read more

குளச்சல் போர்

குளச்சல் போர், எஸ்.ஆன்றனி கிளாரட், என்.டி. தினகர், ஆர். பிரேம்குமார், நகர்வு வெளியீட்டகம், விலை 100ரூ. குளச்சல் போர் என்பது, திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் படைகளுக்கும் டச்சு கிழக்கிந்திய படைகளுக்கும் இடையே நடந்த மோதல் ஆகும். 1740-ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, டச்சு கப்பல்களில் இருந்து குளச்சல் நகரை நோக்கி குண்டு மழை பொழியத் தொடங்கியதில் இருந்து, குளச்சல் போர் தொடங்கியது. வரலாற்று முக்கியம் பெற்ற இந்தப் போரைப் பற்றிய அனைத்து விவரங்களும் இந்த நூலில் உள்ளன. விறுவிறுப்பான நாவலைப் போல […]

Read more

திருக்குர்ஆனில் மறுமை

திருக்குர்ஆனில் மறுமை,  தமிழில் கே.எம். முகம்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 210ரூ. மறுமை குறித்து சிந்திக்காத முஸ்லிம் யாரும் இருக்க முடியா. இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில், இறைநம்பிக்கையுடன், மறுமையின் மீதுள்ள நம்பிக்கையும் இணையும் பொழுதுதான் அது முழுமை பெறுகிறது. ஒவ்வொரு தனிமனிதனின் மறுமை வாழ்வு அவனது மரணத்தில் இருந்துதான் தொடங்குகிறது. மறுமை எப்படி நிகழும்? உலக அழிவு எப்படி இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுக்கு கேரள இஸ்லாமிய அறிஞர் கே.சி. அப்துல் லாஹ் மவுலவி அழகிய முறையில் விளக்கம் அளித்துள்ளார். அவர் எழுதிய […]

Read more

மல்லிகைபூ

மல்லிகைபூ, ஞா.சிவகாமி, பூம்புகார் பதிப்பகம், விலை 50ரூ. தலைமைச் செயலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய ஞா.சிவகாமி எழுத்துறையிலும் முத்திரை பதித்தவர். அவர் எழுதியுள்ள மல்லிகைப்பூ என்ற இந்தப் புத்தகத்தில், 25 சிறுகதைகள் அடங்கியுள்ளன. எல்லாமே மனதைத் தொடும் கதைகள். நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

கடவுளால் முடியாத செயல்கள்

கடவுளால் முடியாத செயல்கள், முரு.பழ.ரத்தினம் செட்டியார், பதிப்பாசிரியர் சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலை 125ரூ. மயிலம், பொம்மபுர ஆதினத் திருமடத்தில் நடந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 12ம் ஆண்டு விழா மாநாட்டில் வெளியிடப்பட்ட நூல். சைவ சித்தாந்த ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல ஆய்வுப் பெட்டகமாகவும், ஆய்வு அணுகுமுறைகளோடு சைவ சித்தாந்தத்தை உணர வைக்கிறது. அத்துடன் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைகளை ஆராய்பவர்கள் ஆராய்ச்சி முறைகளுக்காகவும், தெளிவுக்காகவும் படிக்க வேண்டிய புத்தகம். முரு.பழ.ரத்தினம் செட்டியார் […]

Read more
1 50 51 52 53 54 223