புயலிலே ஒரு தோணி

புயலிலே ஒரு தோணி, ஜி.அசோகன், விலை 40ரூ. ப. சிங்காரம் எழுதிய “புயலிலே ஒரு தோணி” தமிழின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றென போற்றப்படுகிறது. குடும்ப நாவல். தீபாவளி சிறப்பிதழில் அந்நாவல் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/11/2017.   —-   பொன்மொழிகள், முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், விலை 40ரூ. ராஜாஜி, பெரியார், கலைஞர் மு. கருணாநிதி ஆகியோருடைய பொன்மொழிகள் கொண்ட புத்தகம். தொகுத்தவர் முக்தா சீனிவாசன். நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

மகாகவியும் இசைப் பேரரசியும்

மகாகவியும் இசைப் பேரரசியும், முனைவர் மு. கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ. இசையில் சிகரத்தைத் தொட்டு புகழின் உச்சத்தை அடைந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. மகாகவி பாரதியார் பற்றியும், எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றியும் பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம் இது. மொத்தம் 40 கட்டுரைகள், பாரதியார் பற்றியும், எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றியும் அறிந்து கொள்ள இந்த ஒரு புத்தகம் போதும். அந்த அளவுக்கு, அந்த இரு மேதைகளையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் கட்டுரைகள் அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

இதழியல் மேலாண்மை

  இதழியல் மேலாண்மை (சி.பா.ஆதித்தனார்), கவிஞர் சுரா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 90ரூ. இதழியல் துறையில் பெரும் புரட்சியை உண்டாக்கியவர், “தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்”. பாமரர்களையும் படிக்க வைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றையும், சாதனைகளையும் எழில்மிகு நடையில், சுவைபட எழுதியுள்ளார் முனைவர் கவிஞர் சுரா. இளம் பத்திரிகையாளர்களுக்கு ஒரு வழிகாட்டி என்று சொல்லத்தக்க வகையில் நூலை கவிஞர் சுரா உருவாக்கி இருப்பது பாராட்டுக்குரியது. ஆதித்தனார் நிறுவிய ‘தினத்தந்தி’, 75 ஆண்டுகள் வெற்றி நடை போட்டு, பவள விழா கொண்டாடும் நேரத்தில் இப்புத்தகம் […]

Read more

நாலேகால் டாலர்

நாலேகால் டாலர், ஜெயந்தி சங்கர், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. வாழ்க்கை போராட்டத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட நூல். மனித உளவியலை, உளைச்சலை மிகத் திறமையாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

பாயும் தமிழகம்

பாயும் தமிழகம், சுசீலா ரவிந்திரநாத், தமிழில் எஸ்.கிருஷ்ணன், கிழக்கு பதிப்பகம், விலை 400ரூ. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சி பற்றி நுட்பமாகவும், ஆழமாகவும் விவரிக்கும் புத்தகம். டி.வி.எஸ். குழுமம், முருகப்பா குழுமம், இந்தியா சிமெண்ட், ஸ்ரீராம் குழுமம், சன்டிவி, அப்பல்லோ மருத்துவமனை முதலியவற்றின் வரலாற்றையும், சாதனைகளையும் சுசீலா ரவிந்திரநாத் ஆங்கிலத்தில் எழுதியதை, எஸ்.கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு மட்டும் அல்ல, புதிதாக தொழில் தொடங்கி சாதனை படைக்க விரும்புவோருக்கும் இது பயனுள்ள கையேடு. நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more

திரும்ப வருமா என் குழந்தை மனது?

திரும்ப வருமா என் குழந்தை மனது?, நவுஷாத்கான், மணிமேகலைப் பிரசுரம், விலை 65ரூ. ரசிக்க வைக்கும் சின்னச் சின்ன கவிதைகள் கொண்ட புத்தகம். மாதிரிக்கு ஒன்று தமிழில் வல்லினம், மெல்லினம் இருந்தபோதும் இதயத்துக்கு அழகாய்த் தெரிவது என்னவோ உன் இடையினம்தான்! நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more

புரட்சித் தலைவி ஜெ!ஜெ!,

புரட்சித் தலைவி ஜெ!ஜெ!, முனைவர் க.பன்னீர் செல்வம், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், விலை 185ரூ. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அவருடைய இளமை பருவம், சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் பணியாற்றிய காலகட்டங்களில் அவர் செய்த சாதனைகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இறுதியாக அவர் மறைவு தொடர்பான செய்திகளை  “சங்கக் கரையில் தங்கம் புதைப்பு” கட்டுரையில் தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more

நாலடியார் (திருக்குறளுடன் ஓர் ஒப்பிட்டுப்பார்வை)

நாலடியார் (திருக்குறளுடன் ஓர் ஒப்பிட்டுப்பார்வை), மானோஸ், ஹலோ பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. திருக்குறள், உலகின் தலைசிறந்த நீதிநூல், அதை அடுத்து சிறந்த நீதிகளை போதிக்கும் நூல் நாலடியார். இதில் அடங்கிய பாடல்கள், சமண முனிவர்களால் இயற்றப்பட்டவை. சில கருத்துக்களை திருக்குறள், நாலடியார் ஆகிய இரு நூல்களுமே வலியுறுத்துகின்றன. அதுபற்றி “யோகாசித்தர்” என்று புகழ் பெற்ற மானோஸ் ஆராய்ந்து அதுபற்றி இந்த நூலில் அழகாக எழுதியுள்ளார். திருக்குறள், நாலடியார் ஆகிய இரு நீதிநூல்களையும் ஒன்றாக படித்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் இந்நூல் தருகிறது. மானோஸ் முயற்சி பாராட்டுக்கு […]

Read more

இறைவன் எழுந்தருளும் இனிய கோவில்கள்

இறைவன் எழுந்தருளும் இனிய கோவில்கள், கவிஞர் சீனு.செந்தாமரை, செந்தமிழ் இலக்கிய பேரவை, விலை 100ரூ. தமிழகத்தின் சக்தி வாய்ந்த, பிரபல கோவில்களின் சிறப்பு பற்றி எளிய நடையில் எழுதியுள்ளார் நூலாசிரியர் கவிஞர் சீனு.செந்தாமரை. ஒவ்வொரு கோவில் பற்றியும் நறுக்கு தெறித்தாற்போல், நுணுக்கமான, அரிய தகவல்கள், கோவிலின் மூலவர் மற்றும் கோபுரங்கள் புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டு உள்ளன. மாமரம், நெல்லி, மூங்கில் ஆகியவற்றை ஸ்தல விருட்சங்களாக கொண்ட அபூர்வ கோவில்கள் குறித்த தகவல்களை திரட்டி இருப்பது கோவில்களை உடனடியாக சென்று தரிசிக்கும் ஆர்வத்தை புத்தகத்தை படிப்போரிடம் ஏற்படுத்துகிறது. […]

Read more

ஓவியப் பேழை

ஓவியப் பேழை, சிவன் மலைப்பித்தன் நடராசன், அருள் வாக்கு சித்தர் சாமி சிவன் மலைப்பித்தன் அம்மணியம்மாள் வெளியீடு, விலை 1000ரூ. திருக்குறளுக்கு புதுவிதமாக உரை எழுதியிருக்கிறார், சிவன் மலைப்பித்தன் நடராசன். 1330 குறள்பாக்களுக்கு உரை எழுதியிருப்பதுடன், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் வரைபடங்களும் வைத்துள்ளார். படங்களில் இன்னும் சற்று மெருகேற்றி இருக்கலாம் என்றாலும், இது முதல் முயற்சி என்பதால் எல்லோரும் மனம் திறந்து பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி, 25/10/2017,

Read more
1 52 53 54 55 56 223