பீனிக்ஸ் முற்றுப்பெறாத சித்திரம்

பீனிக்ஸ் முற்றுப்பெறாத சித்திரம், எஸ்.டி.எஸ்.இராசதேவன், சுவாதி பதிப்பகம், விலை 150ரூ. நூலாசிரியர் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மற்றும் குறுக்கிட்ட தடைக்கற்களைப் படிக்கற்களாக்கியதன் மூலம் பல்வேறு வெற்றி, தோல்விகளைப் பெற்றுள்ளார். அதன் மூலம் பெற்ற படிப்பினைகளை பாடமாக அமைத்து, இந்த நூலை படிப்போர் தம் வாழ்க்கையிலும் வெற்றி நடைபோட்டு முன்னேற வழிகாட்டி உள்ளார். நன்றி: தினத்தந்தி,25/10/2017.

Read more

கன்னியாகுமரிக் கோயில்

கன்னியாகுமரிக் கோயில், பேராசிரியர் சி.பிரதாபசிங், காவ்யா, விலை 430ரூ. இந்தியாவின் தென்கோடியில் அமைந்து இருக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய சிறப்பான ஆய்வு நூல். கோவில் தோன்றிய காலம், அந்தக் கோவிலில் காணப்படும் சிலைகள், கல்வெட்டுக்கள், வாகனங்கள், இசைக்கருவிகள் குறித்த நுணுக்கமான தகவல்கள், அங்கு பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் விழாக்கள், அதில் பங்கேற்றவர்கள் பற்றிய விவரம், கோவில் தொடர்பாக கூறப்படும் கதைகள் என அனைத்தும் ஆய்வு நோக்கில் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றாலும், ஆன்மிகம் மற்றும் வரலாற்று […]

Read more

108 திவ்ய தேசங்கள்

108 திவ்ய தேசங்கள், இரா. இளையபெருமாள், சகுந்தலை நிலையம், விலை 300ரூ. தமிழ்நாட்டின் நூற்றுக்கணக்கான வைணவத் தலங்கள் உள்ளன. இவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த 108 தலங்கள் பற்றி இந்த நூல் விவரிக்கிறது. ஒவ்வொரு கோவிலும் எந்த இடத்தில் அமைந்துள்ளது, எந்த வழியாகப் போகலாம் என்ற விவரங்களுடன், அந்த கோவிலின் சிறப்புகள் பற்றி தெளிந்த நீரோடை போன்ற நடையில் எழுதியுள்ளார் இரா. இளையபெருமாள். கோவில் மூலவர்கள் படங்கள், ஆர்ட் காகிதத்தில் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. சிறந்த கட்டமைப்புடன் உயரிய பதிப்பாக வெளிவந்துள்ளது இந்த நூல். […]

Read more

பணமே ஓடிவா

பணமே ஓடிவா, சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் பணத்தை எப்படி சேமிப்பது, அதை எப்படி பெருக்குவது என்பது பலருக்குத் தெரிவதில்லை. பணத்தை ‘குட்டி போட வைப்பது‘ எப்படி என்பதை இந்தப் புத்தகத்தில் தெளிவாகவும், சுவைபடவும் எழுதியுள்ளார் சோம. வள்ளியப்பன். ‘லட்சாதிபதி ஆவதற்கு நிச்சயமான வழி என்ன தெரியுமா? ஒவ்வொரு மாதமும் கட்டாயமாக ஒரு தொகையைச் சேமிப்பது மட்டுமல்ல. சேமிப்பதை ஏதாவது ஒரு லாபகரமான இடத்தில் முதலீடு செய்து வருவதும்தான்’ இப்படி பல […]

Read more

சிந்தையில் விளைந்த சீரிய மு(வி)த்துக்கள்

சிந்தையில் விளைந்த சீரிய மு(வி)த்துக்கள், ஹஜ்ஜா ஏ. யாஸ்மின் ஆலிமா, எஸ்கேஎஸ் பப்ளிஷர்ஸ், விலை 100ரூ. பல்வேறு பத்திரிகைகளில் வெளியா இஸ்லாமிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்த நூலில் ரமலான், ஹஜ், முகரம் மாதங்களின் மகிமை, சமுதாயம் உயர்வடைய வழிகாட்டும் உன்னத இஸ்லாமிய வழிமுறைகள், சமுதாய அவலங்கள் – அதைச் சரி செய்ய தீர்வுகள் என்பன போன்ற தலைப்புகளில் நூலாசிரியர் ஹஜ்ஜா ஏ. யாஸ்மின் ஆலிமா எளிய தமிழில் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி,19/7/2017.

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ. புதுக்கவிதைகளின் தொகுப்பு. ஐஸ் பெட்டிக்குள் ஒருநாள் பிணமாக உறங்கப் போகிறோம் என்பதற்கான ஒத்திகைதான் இப்போது நாம் அனுபவிக்கும் ஏ.சி. சுகம் என்பதை “குளிரூட்டப்பட்ட அறையில் உறங்கி வாழ்வின் கடைசி நிமிடங்களுக்காக ஒத்திகை பார்ப்பது அனிச்சையாகி விட்டது” என்று கோ.வசந்தகுமாரன் அழகுற எடுத்துரைக்கிறார். “துக்க வீட்டில் நீ அழும் அழகைக் கண்கொட்டாமல் பார்த்து ரசிக்கிறது ஈவிரக்கமற்ற என் காதல்”, “கடல் பிரிய மனமில்லை. கைக்குட்டையில் நனைத்துக் கொண்டேன்” என்பன போன்ற சுவையான கவிதைகளை […]

Read more

சட்டப்பேரவையில் டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன்

  சட்டப்பேரவையில் டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 225ரூ. 1996முதல் ஐந்தாண்டுகளும், 2006ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளும் தமிழக சட்டசபை காங்கிரஸ் உறுப்பினராகப் பணியாற்றியவர் டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன். சட்டசபையில் அவர் ஆற்றிய பணியை புத்தகமாக எழுதியுள்ளார். சட்டசபையில் அவர் ஆற்றிய உரைகள், கலந்துகொண்ட விவாதங்கள், எழுப்பிய கேள்விகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

ஜப்பான் நாட்டுச் சிறுவர்க கதைகள்,

  ஜப்பான் நாட்டுச் சிறுவர் கதைகள், அரு.வி.சிவபாரதி, ஜீவா பதிப்பகம், விலை 80ரூ. ஜப்பான் நாட்டுச் சிறுவர் சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலில் 21 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கு எளிதில் புரியும வகையில் அரு.வி.சிவபாரதி அழகிய முறையில் மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

ஸ்ரீராமநுஜர் நூற்றெட்டு அந்தாதி

ஸ்ரீராமநுஜர் நூற்றெட்டு அந்தாதி, துரை மலையமான், துரை மலையமான் பதிப்பகம், விலை 22ரூ. மூங்கிற்குடி திருவரங்க அமுதனார் அருளிய ராமாநுஜரின் 108 அந்தாதி அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.   —-   ஆய்வுக்குரிய ஜோதிட நியதிகள், கி.கந்தசுப்பு, மனோன்மணி பதிப்பகம், விலை 240ரூ. ஜோதிடம் என்பது பலிக்கக் கூடியதுதானா, அது அவசியமானதா என்ற கேள்விகளை எழுப்புவோர் பலர். அதற்கெல்லாம் விடையளிக்கிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

வேத வரிகளும் தூதர் மொழிகளும்

  வேத வரிகளும் தூதர் மொழிகளும், டாக்டர் கே.வி.எஸ். ஹவீப் முகம்மத், இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், விலை 200ரூ. திருக்குர்ஆன் என்பது இறைவாக்கு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் ‘ஹதீஸ்’ எனப்படும். நபிகளாரின் பொன்மொழிகளும்,திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட நன்னெறிக் கருத்துகளும் சில ஆயிரம் பக்கங்கள் கொண்டவை. அத்தகைய இஸ்லாமிய கருத்துகளை அனைவரும் அறிந்திடும் வகையில் சுருக்கமாக டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத் இந்த நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தனித் தனித்தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. சொற்பொழிவு ஆற்றுவோருக்கும், […]

Read more
1 54 55 56 57 58 223