கடைசித் தீக்குச்சி

கடைசித் தீக்குச்சி, ராஜேஷ்குமார், அருணோதயம், விலை 150ரூ. கிரைம் கதை மன்னர் ராஜேஷ்குமார் தனது கைவண்ணத்தில் அடுக்கடுக்காக கோர்த்துவிடும் மர்ம முடிச்சுகளை வாசர்களை விட்டே அவிழ்க்க ஆர்வப்படுத்தும் மற்றொரு திகில் நாவல் ‘கடைசி தீக்குச்சி’. இது தினத்தந்தியில் தொடர்கதையாக வெளியானபோதே வாசகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. சித்தார்த் என்பவர் தலைமையில் குரங்குகளை கொண்டு பயோஜெனிக் எனும் ப்ராஜெக்டை இளம் ஆராய்ச்சியாளர்கள் சபரியும், பிரதாப்பும் மேற்கொள்கிறார்கள். இதற்கிடையே சபரியின் மனைவியான அஜந்தாவின் தோழி வாசுகி அவன் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். போலீசுக்கு […]

Read more

தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள், தொகுப்பு ந.முருகேசபாண்டியன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 110ரூ. 25 ஆண்டுகளாக சிறுகதைகள் எழுதி வருகிறார், இறையன்பு ஐ.ஏ.எஸ். விமர்சகர்களாலும், வாசகர்களாலும் பாராட்டப்பட்ட கதைகள் ஏராளம். அந்தக் கதைகளில் மிக மிகச் சிறப்பான கதைகளை தேர்வு செய்து இந்தப் புத்தகத்தில் இடம் பெறச் செய்திருப்பவர் ந.முருகேசபாண்டியன். கதைகளைத் தரம் அறிந்து தேர்வு செய்வதில் அவருக்குள்ள இந்தத் தொகுப்பை தரம் உயர்ந்ததாகச் செய்திருக்கின்றன. இதில் உள்ள 14 கதைகளும் நன்முத்துக்கள். ஒரு பூனையை மையமாக வைத்து எழுதப்பட்ட பூனாத்தி என்ற கதை, […]

Read more

நெருங்காதே நீரழிவே

நெருங்காதே நீரழிவே, டாக்டர் எஸ். விஜயராகவன், சுஜாதா தேசிகன், கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. சர்க்கரை நோயினால் (நீரழிவு) பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அந்த நோயிலிருந்து விடுபட வழி சொல்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணக் கதைகள், ஆதிரையார், குமரன் பதிப்பகம், விலை 150ரூ. தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமான் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சோழப் பேரரசின் முதல் அமைச்சராக இருந்தவர். அவரால் அருளப்பெற்றது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநீலகண்டர், கண்ணப்பர், குலச்சிறையார், திருமூலர், காரைக்கால் அம்மையார் உள்பட 72 சிவனடியார்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் புத்தகத்தை எழுதியுள்ளார், ஆதிரையார். அழகிய அட்டைப்படம், அருமையான வடிவமைப்பு. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

பணம் பத்திரம்

பணம் பத்திரம், செல்லமுத்து குப்புசாமி, கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. பணத்தை எப்படிச் சேமிக்கலாம்? அந்த சேமிப்பை எதில் முதலீடு செய்யலாம்?, அதை எப்படி அதிகரிக்கலாம்? என்பது குறித்த பர்சனல் பைனான்ஸ் பற்றி செல்லமுத்து குப்புசாமி எழுதிய நூல். வீடு, தங்கம், நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்வது சரியானதா? பங்கு சந்தையில் எப்படி முதலீடு செய்ய வேண்டும்? என்பது குறித்து எளிமையாக விளக்குகிறார். சேமிப்பின் அவசியத்தை விளக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், எழிலினி பதிப்பகம், விலை 600ரூ. ஆறடுக்கு முறைப் பதிப்பு ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது சேர முனிவரான இளங்கோ அடிகளால் இயற்றப்பட்டது. கற்பில் சிறந்த கண்ணகி, அவளுடைய கணவன் கோவலன் ஆகியோரின் சரித்திரத்தைக் கூறும் நூல். இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் எனும் முப்பெரும் காண்டங்களைக் கொண்டது. இது மூவேந்தர்களின் தலைநகரான புகார், (காவிரிப்பூம்பட்டினம்), மதுரை, வஞ்சி என்னும் மூன்று பெருமைகளையும் விளக்குகிறது. சிலப்பதிகாரத்திற்கு ஆறடுக்கு முறைப் பகுப்பில் புலவர் மா.நன்னன், அழகிய முறையில் உரை எழுதியுள்ளார். முதலில் ஒவ்வொரு காதைகளிலும் உள்ள […]

Read more

ஐக்கிய நாடுகள் சபையும் உலக அமைதியும்

ஐக்கிய நாடுகள் சபையும் உலக அமைதியும், பிள்ளை லோகியா, பரத் புக்ஸ், விலை 50ரூ. மீண்டும் உலகப்போர் மூண்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்டது ஐ.நா. சபை. அதுபற்றிய விவரங்கள் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

தியாக தீபங்கள் பன்னிரெண்டு

தியாக தீபங்கள் பன்னிரெண்டு, கோவை சுந்தரம், விலை 15ரூ. மகாத்மா காந்தி, நேரு, வ.உ.சிதம்பரனார், பாரதியார், காமராஜர், சத்திய மூர்த்தி உள்பட 12 தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம். படங்களும் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

செஞ்சொல் உரைக்கோவை

செஞ்சொல் உரைக்கோவை, கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 86ரூ. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலக்கிய இன்பம், முத்தமிழ், திருப்புகழ் இன்பம், தேவார இன்பம் என்ற 8 தலைப்புகளில் கிருபானந்த வாரியார் பேசிய பேச்சுக்களின் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு

முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு, முனைவர் பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 65ரூ. தமிழ்நாட்டில் தோன்றிய மிக முக்கியத் தலைவர்களில் ஒருவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். மக்களிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கு வியப்புக்கு உரியது. ஒரே சமயத்தில் பாராளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் போட்டியிடுவார். இரண்டிலும் வெற்றி பெறுவார். நேதாஜியுடன் நெருங்கிப் பழகியவர். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் மணிக்கணக்கில் சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றல் படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிந்த நடையில் விறுவிறுப்பாக எழுதியுள்ளார் முனைவர் ப.பாலசுப்பிரமணியன். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more
1 56 57 58 59 60 223