மங்கல தேவி கண்ணகி கோட்டம்

மங்கல தேவி கண்ணகி கோட்டம், துரை மலையமான் பதிப்பகம், விலை 60ரூ. நிரபராதியான கோவலன் கொல்லப்பட்டதால் வெகுண்டெழுந்த கண்ணகி, மதுரையை தீக்கிரையாக்கினாள். பிறகு வைகைக்கரை வழியே 14 நாட்கள் நடந்து கேரள எல்லையை அடைந்தாள். அங்கிருந்து விண்ணுலகம் சென்றாள். இதுபற்றி துரைமலையமான் விவரமாக புள்ளி விவரங்களுடன் எழுதியுள்ள புத்தகம் இது. சிறிய புத்தகமானாலும் சிறந்த புத்தகம். ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

பொதுமக்களும் சட்டங்களும்

பொதுமக்களும் சட்டங்களும், ஆங்கிலத்தில் ஜி.சி. வெங்கட சுப்பாராவ், தமிழில் க. ராசாராம், முல்லை பதிப்பகம், விலை 150ரூ. நம்முடைய வாழ்க்கையில் காணக்கூடிய, சந்திக்ககூடிய சட்டங்கள் குறித்து ஜி.சி. வெங்கட சுப்பாராவ் ஆங்கிலத்தில் எழுதிய நூல். இதை முன்னாள் சபாநாயகர்,க. ராசாராம் மொழிபெயர்த்துள்ளார். தனிப்பட்ட சட்டங்கள், சொத்துகள் பற்றிய சட்டம், ஒப்பந்தங்களுக்கான சட்டம், கிரிமினல் சட்டம், சிவில் நடைமுறைச் சட்டம் மற்றும் பலவகை சட்டங்கள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

ரமலான் சிந்தனைகள்

ரமலான் சிந்தனைகள், எம்.ஏ. ஷாகுல் ஹமீது ஜலாலி, அஸீலா பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. ரமலான் மாதத்தில் பள்ளிவாசலில் எம்.ஏ. ஷாகுல் ஹமீது ஜலாலி முப்பது நாட்கள் நிகழ்த்திய சொற்பொழிவு புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. நோன்பைத் தொடங்குவோம், வாரிசுரிமைச் சட்டங்கள், இறை நம்பிக்கை, ஈகைப் பண்பு, மகத்தான இரவு போன்ற 27 தலைப்புகளில் இஸ்லாம் பற்றிய கருத்துகளை எடுத்துரைக்கிறார். அதோடு சொற்பொழிவு உருவான விதத்தையும், அதற்குக் கிடைக்கும் விமர்சனங்களையும் சேர்த்து பதிவு செய்துள்ளார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

உலக வரலாறு

உலக வரலாறு, ஐ. சண்முகநாதன், பூம்புகார் பதிப்பகம், விலை 750ரூ. உலகம் தோன்றியது முதல் இன்று வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. உலகம், இந்தியா, தமிழ்நாடு என்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. உலகம் என்ற தலைப்பில் பூமி தொடங்கியது எப்படி என்பது தொடங்கி உலகில் நடந்த முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக முதல் உலகப்போர், இரண்டாம் உலகப் போர், சந்திரனில் மனிதன், கென்னடி சுட்டுக்கொலை, இலங்கையில் போர் முடிந்தது போன்ற அனைத்துச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. இந்தியா […]

Read more

இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம்

இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம், தொகுப்பு சபீதா ஜோசப், ராஜமாணிக்கம்மாள் வெளியீடு, விலை 120ரூ. இயற்கை விவசாயமே இன்றைக்கு அவசியம் தேவை. அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் வலியுறுத்தி வந்தார். அவர் பத்திரிகைகள், சொற்பொழிவுகள் மூலம் வெளியிட்ட இயற்கை விவசாயம் குறித்த கருத்துகளை இந்த நூலில் எழுத்தாளர் சபீதா ஜோசப் தொகுத்துள்ளார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

அஷ்டபதி (கீதகோவிந்தம்)

அஷ்டபதி (கீதகோவிந்தம்), அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 100ரூ. கிருஷ்ண பகவான் மீது ஜயதேவ சுவாமிகள் பாடிய பாடல்களே “கீதகோவிந்தம்” ஆகும். கீத கோவிந்தம் காவியத்துக்கு, “அஷ்டபதி” என்ற பெயரும் உண்டு. அஷ்டபதியை பாராயணம் செய்தால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்தப் புத்தகத்தில், ஐயதேவ சுவாமிகள் வரலாறு முதலில் இடம்பெற்றுள்ளது. அதையடுத்து, அஷ்டபதி பாடல்களுக்கு விளக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

இயற்கை வைத்தியம்

இயற்கை வைத்தியம், எம்.மரிய பெல்சின், விகடன் பதிப்பகம், விலை 130ரூ. மூலிகைகள் நமக்கு வலி நீக்கும் நிவாரணியாகவும், பிணி போக்கும் மருந்தாகவும், சுவை தரும் உணவாகவும் இருக்கின்றன என்னும் ஆச்சரியம் தரும் தகவல்களை இந்த நூலில் எம்.மரிய பெல்சின் தருகிறார். எந்தெந்த மூலிகைகளில் என்னென்ன நோய் குணமாகும் என்பதை எளிமையாக விளக்கும் நூல். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

கொஞ்சம் சமூக சேவை மிஞ்சும் அனுபவங்கள்

கொஞ்சம் சமூக சேவை மிஞ்சும் அனுபவங்கள், ம. சுரேந்திரன், பாரதி புத்தகாலயம், விலை 160ரூ. தான் செய்யும் பணிகளுக்கு இடையே அக்கறையுடன் செய்யும் சமூக சேவை உன்னதமானது. ம. சுரேந்திரன் தனது சமூக சேவை அனுபவங்களை சுவாரஸ்யமாக இந்த நூலில் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு அனுபவங்களையும் அழகிய நடையால் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

இராமாயணம் காவிய நாயகர் கலைக் களஞ்சியம்,

இராமாயணம் காவிய நாயகர் கலைக் களஞ்சியம், த.வ.சிவசுப்பிரமணியன், கல்வி உலகம் பதிப்பகம், விலை 200ரூ. இது ஒரு அருமையான புத்தகம். ராமாயணத்தில் வருகிற எண்ணற்ற கதாபாத்திரங்கள் யார் என்பதை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இதை த.வ. சிவசுப்பிரமணியன் எழுதியுள்ளார். இதில் உள்ள சில தகவல்கள்: அக்க குமாரன் (அட்சய குமாரன்); இலங்கை வேந்தன் ராவணனின் இரண்டாம் மகன். அக்கயன்: முப்பதினாயிரம் கோடி வானர சேனைக்குத் தலைவன். அகத்திய முனிவர்: பிரம தேவரின் மகனான புலத்தியரின் மகன். விதரபர்கோன் மகளாகிய உலோப முத்திரையை மணந்து சித்தன் என்னும் […]

Read more

தமிழக வரலாறும் பண்பாடும்

தமிழக வரலாறும் பண்பாடும், டாக்டர் மா.இராசமாணிக்கனார், சாரதா பதிப்பகம், விலை 280ரூ. தமிழ்நாட்டின் வரலாற்றை விவரித்து டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய புத்தகம் சிறப்பு வாய்ந்தது. நீண்ட இடைவெளிக்குப்பின், அது மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more
1 58 59 60 61 62 223