நிழல்படம் நிஜப்படம்

நிழல்படம் நிஜப்படம், யுகன், நற்றிணை, விலை 300ரூ. அரசியல்வாதிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிறந்த ஆங்கிலத் திரைப்படத்துக்கும், ஆர்ட் பேப்பரில் வண்ணப்படம் இணைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் தரம் பிரமாதம். புத்தகத்தைப் பார்த்தவர்கள், அதன் விலை 300ரூ மிகக் குறைவு என்று ஒப்புக்கொள்வார்கள். நன்றி: தினத்தந்தி, 12/7/2017.

Read more

அறிவுலக மேதை அண்ணல் அம்பேத்கார்

அறிவுலக மேதை அண்ணல் அம்பேத்கார், பேராசிரியர் மு. இராமதாஸ், புதுச்சேரிகூட்டுறவு புத்தக சங்கம், விலை 380ரூ. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை “பாரத ரத்னா” அண்ணல் அம்பேத்கார். இந்தியாவின் வரலாற்றில் அவேர் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அவருடைய வரலாற்றை, எல்லோரும் விரும்பி ரசிக்கும் விதத்தில் பேராசிரியர் மு.இராமதாஸ் எழுதியுள்ளார். அம்பேத்காரின் சாதனைகளும், இந்தியாவின் முன்னேற்றதுக்கு அவருடைய செயல்பாடுகளும் எவ்வாறு உதவின என்பது பற்றிய விவரங்களும் இதில் உள்ளன. படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 23/8/2017.

Read more

பாரதி காவியம்

பாரதி காவியம், நெல்லை சு. முத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 300ரூ. மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த “பாரதி காவியம்” என்ற நூல் இப்போது வெளிவந்துள்ளது. இதை எழுதிய நெல்லை சு.முத்து, இந்திய விண்வெளித்துறை முதல் நிலை விஞ்ஞானி என்றாலும், இலக்கியத்தில் மூழ்கித் திளைப்பவர். தமிழில் 140 நூல்கள் எழுதியுள்ள சாதனையாளர். பாரதி வரலாற்றை அருமையான கவிதைகளில் வடித்துத் தந்துள்ளார். படிப்பவர்கள் “நிச்சயமாக இது ஒரு காவியம்தான்” என்று ஒப்புக்கொள்வார்கள். அந்த அளவுக்கு அருமையும், […]

Read more

கட்டுரை எழுதுவது எப்படி?

கட்டுரை எழுதுவது எப்படி?, டாக்டர் மா. இராசமாணிக்கனார், முல்லை பதிப்பகம், பக். 32, விலை 15ரூ நாம் எந்தப் பொருளை எழுத வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை ஆழமாகச் சிந்தித்து தயார் செய்ய வேண்டும். வாக்கியங்கள் கருத்தால் பிணைந்து செல்லத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 6.8.2017.

Read more

எரிநட்சத்திரம்

எரிநட்சத்திரம், ரா. கிருஷ்ணமூர்த்தி, வசந்தா பதிப்பகம், விலை1 25ரூ. ஒரு சினிமா நடிகையின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார் ரா. கிருஷ்ணமூர்த்தி. உள்ளத்தைத் தொடும் உணர்ச்சிமயமான கதை. நன்றி: தினத்தந்தி, 16/8/2017

Read more

திருக்குறள்

திருக்குறள், புலவர் துரை தமிழரசன், கதிரவன் பதிப்பகம், விலை 400ரூ. உலக அளவில் திருக்குறளுக்கு வெளியான உரைகள் போல வேறெந்த நூலுக்கும் உரைகள் வெளியானதில்லை. இவ்வளவு உரைகள் இருந்தபோதிலும் தமக்குத் தோன்றும் புதிய கருத்துகளை – சிந்தனைகளை தமிழ் உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் புதிய உரைகளை பலரும் எழுதி வருகிறார்கள். அந்த வகையில் புலவர் துரை தமிழரசனின் ‘திருக்குறள் எளிய தெளிவுரையும், இனிய ஆய்வுரையும்’ என்ற இந்த நூலில் பல சிறப்புகள் காணப்படுகின்றன. […]

Read more

சிவாஜிகணேசன் பிள்ளைத்தமிழ் அந்தாதி

சிவாஜிகணேசன் பிள்ளைத்தமிழ் அந்தாதி, கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி, செம்மொழிக்கழகம், விலை 70ரூ. முதல் படத்திலேயே (“பராசக்தி”) புகழின் சிகரத்துக்குச் சென்றவர் சிவாஜிகணேசன். “வீரபாண்டிய கட்டபொம்மன்” படத்தில், கட்டபொம்மனாகவே வாழ்ந்து காட்டியவர். அந்த நடிப்பு அவருக்கு ஆசியா – ஆப்பிரிக்கா நாடுகளின் தலைசிறந்த நடிகர் என்ற விருதைப் பெற்றுத் தந்தது. கலைத்தாயின் தலைமகன் என்று அவனைவராலும் போற்றப்ட்ட சிவாஜிகணேசனைப் பற்றி, உணர்ச்சி மயமான பாடல்களை எழுதியுள்ளார், கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி. நல்ல தமிழில், அதே சமயம் எல்லோரும் புரிந்து ரசிக்கும் விதத்தில் கவிதைகள் அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

அம்மா தமிழகத்தின் இரும்புப்பெண்

அம்மா தமிழகத்தின் இரும்புப்பெண், முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், கிரி லா ஹவுஸ், விலை 220ரூ. சினிமா நட்சத்திரமாக ஒளிவீசி, பின்னர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாகத் திகழ்ந்து, தமிழக முதல்-அமைச்சராகபணிபுரிந்தவர் ஜெயலலிதா. அவருடைய வாழ்க்கை வரலாற்றை சிறந்த முறையில் எழுதியுள்ளார் முனைவர் சந்திரிகாசுப்ரமணியன். இந்தப் புத்தகத்தில் உள்ள சில தகவல்கள் – ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த 92 தமிழ்ப் படங்களில் 85படங்கள் வெள்ளிவிழா (25 வாரம்) கொண்டாடியவை. நடிக்க மட்டுமல்ல, பாடல்கள் பாடுவதிலும் திறமையானவர்.திரைப்படங்களில் 11 பாடல்கள் பாடியுள்ளார். 1968-ல் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற […]

Read more

பொய்யாமொழி

பொய்யாமொழி, முனைவர் மு. பழனிசாமி, நிவேதிதா பதிப்பகம், விலை 180ரூ கவிதைகள், கட்டுரைகள், வேளாண்மை நூல்கள் எழுதிப் புகழ்பெற்ற முனைவர் மு.பழனிசாமி “பொய்யா மொழி” நாவலை எழுதி வெற்றி பெற்றுள்ளார். நல்ல தமிழில் நாவலை சுவைபட எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. ‘நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

நெய்வேலியின் நிலக்கரிச் சுரங்கம்

நெய்வேலியின் நிலக்கரிச் சுரங்கம், சோமலெ, முல்லை பதிப்பகம், விலை 90ரூ. நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும், சுரங்கம் தோண்டப்பட்டதும் வியப்பான வரலாறு. அதை, சுவைபட எழுதியுள்ளார் சோமலெ. நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more
1 59 60 61 62 63 223