பலன் தரும் பாரம்பரிய பண்டிகைகள்

பலன் தரும் பாரம்பரிய பண்டிகைகள், கா. சுந்தரமூர்த்தி, விஜயா பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. தென்னகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தீபாவளி, பொங்கல், மகாசிவராத்திரி, மாசிமகம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்பட 21 பண்டிகைகள் பற்றிய புத்தகம். இந்தப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதன் நோக்கம், அதன் புராணப் பின்னணி, பலன்கள் முதலியவை பற்றி தெளிவாகவும், சுவையாகவும் எழுதியுள்ளார் கா. சுந்தரமூர்த்தி. நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

கதைகள் சொல்லும் கருத்துகள்

கதைகள் சொல்லும் கருத்துகள், ஆர். பத்மபிரியா, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ. நீதிக்கதைகள் பள்ளி, மாணவ-மாணவிகள் மற்றும் சிறுவர்கள் நீதிகளைப் பின்பற்றி சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக பல அரிய பழைய நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட நீதிகதைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

யோக முத்திரைகளின் அறிவியல்

யோக முத்திரைகளின் அறிவியல், தமிழில் வி.மகாலிங்கம், சப்னா புக் ஹவுஸ், விலை 185ரூ. முத்திரைகளின் வரலாறு, பொதுவான செய்முறை, பஞ்சபூதக் கொள்கை போன்றவை தொகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 200 முத்திரைகள் விரிவாக படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. முத்திரைகளைச் செய்வதன் மூலம் உடல், மன சமநிலையையும் நோயற்ற வாழ்வையும் எவ்வாறு பெற முடியும் என்பதை இந்நூல் அறிவியல் பூர்வமாக விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

பட்டணம் போனேன் பாட்டெழுத

பட்டணம் போனேன் பாட்டெழுத, சப்னா புக் ஹவுஸ், விலை 85ரூ.பட்டணம் போனேன் பாட்டெழுத, சப்னா புக் ஹவுஸ், விலை 85ரூ. சினிமா பாடலாசிரியராக வேண்டும் என்ற கனவுகளுடன் கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற கவியன்பன் பாபு, தனது வலிகளையும் தோல்விகளையும் மெல்லிய புன்னகையுடன் இந்த நூலில் செதுக்கி இருக்கிறார். ஒரு நாவலைப் படிப்பதுபோல விறுவிறுப்பாகவும் சுவையாகவும் தனது அனுபவங்களை இந்த நூலில் அவர் பதிவு செய்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 09 /8/2017.

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும், பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. பல்வேறு தலைப்புகளில் பரமன் பச்சைமுத்து எழுதிய 25 கட்டுரைகள் கொண்ட நூல். சிவாஜிகணேசன் பற்றிய கட்டுரை அருமை. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

உண்மை விளக்கம்

உண்மை விளக்கம், பதிப்பாசிரியர் சென்னை பல்கலைக்கழக சைவசித்தாந்த துறை தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்த வெளியீடு, விலை 80ரூ. மனவா சகங்கடந்த தேவநாயனார் இயற்றிய உண்மை விளக்கம் எனும் சைவ சித்தாந்தச் சாத்திர நூல். உண்மை விளக்கம் நூலுக்கு தெளிவான பொழிப்புரையும் விளக்கமும் தந்த க.வச்சிரவேலு முதலியார் வழங்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

சிற்றிதழ் வரலாறும் புதுக்கவிதை வளர்ச்சியும்

சிற்றிதழ் வரலாறும் புதுக்கவிதை வளர்ச்சியும், பா. பாரதி, சிவகுரு பதிப்பகம், விலை 90ரூ. வணிக நோக்கம் இன்றி, இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபடுபவை சிற்றிதழ்கள். சிறந்த சிற்றிதழ்கள் பற்றிய விவரங்கள் இந்த நூலில் உள்ளன. புதுக்கவிதையின் வளர்ச்சி பற்றியும் கூறுகிறார் ஆசிரியர் பா. பாரதி. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

மங்கையர்க்கரசியின் காதல்

மங்கையர்க்கரசியின் காதல், வ.வே.சு.ஐயர், முல்லை நிலையம், விலை 55ரூ. கமல விஜயம், மங்கையர்க்கரசியின் காதல், அனார்க்கலி உள்ளிட்ட 8 தலைப்புகளில் எழுதப்பட்ட கதைகள் அடங்கிய நூல். இதில் இடம் பெற்றுள்ள கதைகளை படிப்பவர்களின் உள்ளத்தை உருக்குவதுடன், உயர்ந்த கருத்துக்களை படிப்பவர்களுக்கு கற்றுதரும் பாடமாகவும் அமைந்துள்ளது. தமிழில் கதை எழுதுபவர்களுக்கு இந்த நூல் ஒரு நல்வழியை காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே, டாக்டர் வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. இன்றைய பேட்டி நிறைந்த உலகில் தங்கள் குழந்தைகளை கல்வி, கேள்வி, ஞானம் யாவற்றிலும் சிறந்தவர்களாக எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் பெற்றோர்கள் திணறுகிறார்கள். அவர்களுக்கு குழந்தை வளர்ப்பு, தேர்வுக்கு படிக்க வைப்பது எப்படி? நினைவாற்றலைப் பெருக்குவது எப்படி? என்பன போன்ற அனைத்துச் செய்திகளையும் சொல்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

ஆன்மிகம் அறிவோம்

ஆன்மிகம் அறிவோம், இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், விலை140ரூ. ஆன்மிக வழிபாடு அதிகமாக இருந்தாலும், ஆன்மிகத்தைப் பற்றிய அறிதல் குறைவாகவே இருக்கிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஆன்மிக, தத்துவ, சமூக, அறிவியல் விளக்கங்களுடன் அவசியம் அறிய வேண்டிய செய்திகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more
1 61 62 63 64 65 223