பொலிக பொலிக

பொலிக பொலிக, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 325ரூ. ஸ்ரீராமானுஜரின் சரிதம் ஸ்ரீராமானுஜரின் வரலாற்றை “பொலிக பொலிக” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் பா. ராகவன். ஒரு நாவல் போல விறுவிறுப்புடன் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

சங்க இலக்கியத்தில் சூழலியல்

சங்க இலக்கியத்தில் சூழலியல், ஆ. அரிமாப்பாமகன், இராசகுணா பதிப்பகம், விலை 190ரூ. அனைத்து உயிர்களுக்கும் மரியாதை தர மறந்தால், வாழ்க்கை என்பது முடிவுக்கு வந்துவிடும் என்பதை நூலாசிரியர் தெளிவாக விளக்கமளித்து உள்ளார். சங்க இலக்கியங்கள் சூழலியல் திறனாய்விற்கு உட்பட்டு இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள்

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள், புலவரேறு அரிமதி தென்னவன், டி.எஸ். புத்தக மாளிகை, விலை 120ரூ. மனித மனங்களின் நிலையான உயர்வு என்பது அறநூல்களைப் பொறுத்தே உள்ளது. அந்த உணர்வோடு ஆத்திச்சூடி, நன்னெறி ஆகிய ஏழு அறநூல்களுக்கு புலவரேறு அரிமதி தென்னவன் கருத்தும், விளக்கமும் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

எல்லையில்லா பிரபஞ்சம்

எல்லையில்லா பிரபஞ்சம், மதிமாறன், வேமன் பதிப்பகம், விலை 250ரூ. பிரபஞ்சம் வரையறைக்கு உட்படாதது. தோற்றமும் முடிவும் அற்றது. இந்த பிரபஞ்சத்தின் கீழ் அண்டவியல், சூரியக்குடும்பம், கோள்கள், நட்சத்திரம், பூமி மற்றும் அதில் இருக்கும் மலைகள், கடல்கள், எரிமலை, வாழும் உயிரினம் என அனைத்தையும் அடக்கிவிடலாம். அவை குறித்து இந்த நூலின் மதிமாறன் ஆய்வு நோக்கில் அறிவியல் கண்ணோட்டத்தில் எழுதி இருக்கிறார். இந்த நூல் வானியல் பற்றியும் பேசுகிறது. வான்வெளி அறிவியல் சாதித்தவை குறித்தும் பேசுகிறது. பள்ளி மாணவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த […]

Read more

ஆரோக்கியம் உங்கள் கையில்

ஆரோக்கியம் உங்கள் கையில், டாக்டர் பி.எஸ்.லலிதா, விகடன் பிரசுரம், விலை 155ரூ. நம் உச்சி முதல் பாதம் வரையிலான உடலின் முக்கிய உறுப்புகள், உள்ளங்கையில் புள்ளிகளாக அமைந்துள்ளன. எந்த உறுப்பு எந்த புள்ளியைக் காட்டுகிறது என்பதை அறிந்து, முறையாக அழுத்தம் கொடுப்பதன் மூலம், நோயாளியை குணப்படுத்தலாம் என்று கூறுகிறார், இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் பி.எஸ்.லலிதா. மருந்தில்லா மருத்துவம் பற்றி பல தகவல்கள் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி)

ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி), வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 420ரூ. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட “ஜி.எஸ்.டி.” வரி பற்றி முப விவரம் அறிந்தவர்கள் மிகச் சிலரே. ஜி.எஸ்.டி. பற்றி பொதுமக்களிடையே குழப்பங்களும், சந்தேகங்களும் நிலவி வருகின்றன. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் 501 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை “பொக்கிஷம்” என்ற தலைப்பில் தகவல் களஞ்சியங்களை வெளியிட்டு வரும் வடகரை செல்வராஜ் உருவாக்கியுள்ளார். “ஜி.எஸ்.டி.” பற்றிய சந்தேகங்களை போக்கும் வகையில் 700-க்கும் மேற்பட்ட கேள்வி – பதில்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: […]

Read more

டாக்ஸி டிரைவர்

டாக்ஸி டிரைவர், ஆனந்த் ராகவ், கிழக்கு பதிப்பகம், விலை 120ரூ. எழுத்தாளர் ஆனந்த் ராகவ் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு. ஒரு சமூதாயத்தின் நேர்மை, கலாசாரம் எல்லாவற்றுக்கும் அளவுகோலே அந்தர ஊரின் வாடகை வண்டி ஓட்டுகிறவர்கள்தான் என்ற கருத்தில் அமைந்துள்ள ‘டாக்ஸி டிரைவர்’ , 75 வயது தந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, அவர் உயிர் பிழைத்து வரமாட்டாரா என்று ஏங்கும் மகனின் ஏக்கத்தை வெளிப்படும், ‘இரண்டாவது மரணம்’ உள்பட அனைத்துக் கதைகளும் அருமை. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

ஜி.எஸ்.டி. ஓர் அறிமுகம்

ஜி.எஸ்.டி. ஓர் அறிமுகம், பாலாஜி பதிப்பகம், விலை 500ரூ. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் எனப்படும் ஜி.எஸ்.டி. 1/7/17 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சரக்குக்கு இந்தியா முழுவதும் ஒரே வரிவிகிதம் தான். இன்னொரு மாநிலத்தில் வாங்கினால் வரி குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனால்தான் ஒரே தேசம் ஒரே வரி எனப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் தவிர எல்லா மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு இந்த வரி பொருந்தும். இந்தச் சட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைச் செய்திகளை வணிகம் செய்வோர் அனைவருமே தெரிந்து […]

Read more

நாட்டுப்புற இலக்கிய வரலாறு

நாட்டுப்புற இலக்கிய வரலாறு, பேராசிரியர் க. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 240ரூ. நாட்டுப்புற இலக்கியம் பற்றிய தகவல்களை விளக்கமாகவும், சுவைபடவும் எழுதியுள்ளார் பேராசிரியர் க. சண்முகசுந்தரம். நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

சித்தர்கள் கூறும் இரகசியங்கள்

சித்தர்கள் கூறும் இரகசியங்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி இரா.கற்பூரசுந்தரபாண்டியன், கல்வியாளர் சாந்தா பாண்டியன், ஆர்.கே.எஸ். பதிப்பகம், விலை 200ரூ. சித்தர்களின் தத்துவங்கள், நெறி, பாதை போன்றவற்றைப் பற்றி இந்த நூல் விளக்குகிறது. அதேபோல் சித்தர் நெறிக்கு அடிப்படையான யோகப் பயிற்சி முறைகளைப் பற்றிய விரிவான விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது. சித்தர்கள் அருளிய நோய்தீர்க்கும் மருந்துகள் பற்றியும், தமிழகத்தில் சித்தர்கள் ஜீவசமாதியான இடங்களைப் பற்றிய பட்டியலும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more
1 62 63 64 65 66 223