மனதோடு மழைச்சாரல்

மனதோடு மழைச்சாரல், மன்னை ஜீவிதா அரசி, காகிதம் பதிப்பகம், விலை 150ரூ. மன்னை ஜீவிதா அரசி எழுதிய கவிதைகள் கொண்ட தொகுப்பு. பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் ஜீவிதா அரசி, சமூகத்தில் காணப்படும் அநீதிகளை சாடும்போது, அவர் எழுத்துக்களில் தீப்பொறி பறக்கிறது. உணர்ச்சிமயமான கவிதைகளை எழுதியுள்ள ஜீவிதா அரசி பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

நினைத்ததை முடித்த ஜி.ஆர்.

நினைத்ததை முடித்த ஜி.ஆர்., பி.டி.விமல், மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. சேலம் மாவட்டம் உப்பாரப்பட்டியில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஜி.ராமச்சந்திரன். இவர் சினிமா துறையில் நுழைந்து தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவருடைய வாழக்கை வரலாற்றை புகைப்படங்களுடன் பி.டி.விமல் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

பெரியார் 95

பெரியார் 95, ஞான.வள்ளுவன், இனியவன் பதிப்பகம், விலை 300ரூ. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றி பல நூல்கள் வெளியாகி உள்ளன. இருந்தபோதிலும் பெரியாரைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் ஞான.வள்ளுவன் எழுதிய நூல். பெரியாரின் இளமைப் பருவம் தொடங்கி 95 தலைப்புகளில் பெரியார் வாழ்வில் நடந்த அனைத்துத் தகவல்களையும் திரட்டித் தந்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

அண்ணன்மார் சுவாமி கதை

அண்ணன்மார் சுவாமி கதை, கவிஞர் சக்திக்கனல், நர்மதா பதிப்பகம், விலை 290ரூ. கொங்கு நாட்டு வேளாளர் காவியமான பொன்னர் – சங்கர் வரலாறு, “அண்ணன்மார் சுவாமி கதை” என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நாடோடி இலக்கியம். பொன்னர், சங்கர், தங்கம் ஆகிய மூவரும் வரத்தால் பிறந்தவர்கள். தாயார் தாமரை, தான் பட்ட இன்னல்களை எல்லாம் மக்களிடம் சொல்கிறார். தான் செய்த சபதங்களையும் சொல்கிறாள். அண்ணன்மார் இருவரும், பங்காளிகளை பழிவாங்கி, அன்னையின் சபதத்தை நிறைவேற்றுகிறார்கள். பெற்றோர் மறைவுக்குப்பின், பொன்னர், சங்கர் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் […]

Read more

பொழுதுக்கால் மின்னல்

பொழுதுக்கால் மின்னல், கா.சு. வேலாயுதன், சப்னா புக் ஹவுஸ், விலை 180ரூ. எழுத்தாளர் கா.சு.வேலாயுதன் எழுதிய நாவல். கோவை மண்ணின் மணம் கமழுகிறது. மானுட வாழ்வின் இருப்புக்கும், இலக்குக்கும் இடையே நிகழும் ஓயாத யுத்தத்துக்கும் மத்தியில் உறவுகளின் அர்த்தம் குறித்து இந்த நாவல் பேசுகிறது. நன்றி: தினத்தந்தி,19/7/2017.

Read more

தக்கர் கொள்ளையர்கள்

தக்கர் கொள்ளையர்கள், இரா. வரதராசன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. இந்தியாவில் கொள்ளையர்கள் தடம் பதித்த காலக்கட்டத்தில், “தக்கர்” என்ற கொள்ளைக்காரர்கள் மத்திய இந்தியாவில் அட்டூழியங்கள் செய்து வந்தார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்தார்கள். அவர்களுடைய செல்வங்களை கொள்ளையடித்தார்கள். பிற்காலத்தில், இவர்களை வெள்ளையர்கள் அடக்கினார்கள். 3689 தக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 466பேர் தூக்கில் போடப்பட்டனர். 1504பேர் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு தக்கர்கள் பற்றிய அபூர்வ விஷயங்களை, இரா. வரதராசன் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் . ஒரு நாவலுக்கு […]

Read more

செரிமானம் அறிவோம்

  செரிமானம் அறிவோம், டாக்டர் பா.பாசுமணி, விகடன் பிரசுரம், விலை 100ரூ. சாப்பிடுகிற உணவு சத்துள்ளதாகவும், எளிதில் ஜீரணிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். சாப்பிடுவதில் ஒழுங்கீனம் ஏற்பட்டால், உடல் நலம் பாதிக்கப்படும். எந்தெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை விரிவாக விளக்குகிறார், டாக்டர் பா.பாசுமணி. சாப்பிடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும், சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் தருகிறார். நன்றி: தினத்தந்தி, 2/8/2017.

Read more

டிஜிட்டல் பணம்

டிஜிட்டல் பணம், சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. வளர்ந்த நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை விரிவாக அலசும் நூல். நிதிச் சமுகத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டுமானால் அதற்கு டிஜிட்டல் பணமே ஒரே வழி என்பதை எளிமையாக இந்த நூல் புரிய வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 2/8/2017.

Read more

பெண்மை ஒரு வரம்

பெண்மை ஒரு வரம், ஐ.ஏ.எஸ். அதிகாரி பா. ஜோதி நிர்மலாசாமி,விஜயா பதிப்பகம், விலை 145ரூ. “பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா” என்று பாடினார், மகாகவி பாரதியார் அன்று. அத்தகைய பெண்ணின் பெருமையைப் பற்றி நேர்மையும், எளிமையும், எளியவர்பால் அன்பும்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பா.ஜோதி நிர்மலாசாமி எழுதிய புத்தகம்தான் “பெண்மை ஒரு வரம்”. பெண்ணின் குணநலன்கள், இந்த சமுதாயத்தில் அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் போன்ற அனைத்தையும் தன்னையும், தன் குடும்பத்தையும் மையமாக வைத்தே எழுதியிருக்கிறார். பணி காலத்திலும், தனது சொந்த வாழ்க்கையிலும் ஒரு […]

Read more

இன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும்

இன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும், ப. திருமலை, கற்பகம் புத்தகாலயம், விலை 250ரூ. சமூக, பொருளாதார, அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. இதில் பொதுமக்களிடம் இருந்து அன்னியப்பட்டு போகிறதா பொது வினியோகத் திட்டம்? அள்ளும் மணல் அழியும் உயிரினம், தமிழகத்தில் தலித் படுகொலைகள், பிளாஸ்டிக் பயங்கரம், சுங்கச் சாவடியா வழிப்பறி நிலையமா?, பொது சிவில் சட்டம் அவசியமா? என்பன போன்ற 42 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவிலும், மாநில அளவிலுமான மக்கள் பிரச்சினைகள் குறித்து இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன. மக்களின் அன்றாட வாழக்கையைப் பறிக்கும் அரசின் கொள்கைகள் […]

Read more
1 55 56 57 58 59 223