வங்கி சேவைகள்

  வங்கி சேவைகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ. மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்களை “பொக்கிஷம்” என்ற பொதுத் தலைப்பில் புத்தகங்களாக ரேவதி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது வெளிவந்துள்ள புத்தகம் வங்கி சேவைகள் பாகம் 1. வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கும் சேவைகள் குறித்த விவரங்களும், கடன் உதவிகள் பற்றிய விவரங்களும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. கடன்கள் பெறுவதற்கான தகுதிகள், ஆவணங்கள், அரசு தரும் மானியங்கள் பற்றிய விவரங்களும் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 25/10/2017,

Read more

டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள் ஓர் ஆய்வு

டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள் ஓர் ஆய்வு, இரா.நடராசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 130ரூ. அம்பேத்கரின் பல்வேறு வாழ்வியல் பரிமாணங்களையும், வாழ்க்கை வரலாற்றையும் பல்துறை சார்ந்த அவரின் சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளன. இந்திய சமூக மாற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளதார வளர்ச்சிக்காகவும் அவர் கையாண்ட முறைகளை இந்த நூல் படம் பிடித்து காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 25/10/2017,

Read more

உங்கள் ஆயுளை அறிய வேண்டுமா

உங்கள் ஆயுளை அறிய வேண்டுமா, டாக்டர் கே.என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. சில குழந்தைகள், பிறந்ததும் இறப்பது ஏன்? விபத்துகளில் மரணம் ஏற்படுவதற்கு காரணம் என்ன? இது போன்ற விஷயங்களை ஆராய்ந்து ஒருவருடைய ஆயுளை அறிய வழிகாட்டுகிறது இந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 25/10/2017,

Read more

உலகப் பணக்காரர் விஸ்வநாதன்

உலகப் பணக்காரர் விஸ்வநாதன், பி. விஸ்வநாதன், அசோக்ராஜா பதிப்பகம், விலை 90ரூ. தலைப்பைப் பார்த்தால், ‘பில்கேட்ஸ்’ போல உலகப்புகழ் பெற்ற ஒரு பெரிய பணக்காரர் விஸ்வநாதன் என்றும், இது அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் என்றும் எண்ணத் தோன்றும். அப்படியல்ல. இது ஒரு நாவல். இதை எழுதியவர் பெயர் பி.விஸ்வநாதன். அவர் எழுதியுள்ள 7 நாவல்களின் தலைப்புகளிலும் விஸ்வநாதன் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. நாவலைப் படிக்கும்போது, அவர் ஒரு புதுமையான எழுத்தாளர் என்பது புரிகிறது. நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more

கவிதை ஒளி

  கவிதை ஒளி, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 130ரூ. பேராசிரியர், பேச்சாளர், திறனாய்வாளர் என்று பன்முகம் கொண்டவர் இரா.மோகன். அவர் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதில் கவி ஆளுமைகள் என்ற தலைப்பில் வ.சு.ப.மாணிக்கனார், ஈரோடு தமிழன்பன் போன்றோரின் ஆளுமைகள் குறித்தும் கவிதைக் கீற்றுகள் என்ற தலைப்பில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ பற்றியும் சுவைபட எழுதியுள்ளார். சங்கச் சித்திரங்கள் என்ற தலைப்பில் சங்க கால இலக்கியத்தின் சிறப்பை விவரிக்கிறார். இலக்கிய அன்பர்களுக்கு இனிய விருந்து. நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Read more

கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன், க.ஜெய்சங்கர்,  வசந்தவேல் பதிப்பகம், விலை 100ரூ. தமிழ்த் திரைப்படங்களுக்கு 5 ஆயிரம் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற கண்ணதாசன் வெறும் கவிஞர் மட்டும் அல்ல. கதை – வசனம், நாவல், வாழ்க்கை வரலாறு, திரைப்படத் தயாரிப்பு, அரசியல்… இப்படி பல துறைகளில் முத்திரை பதித்தவர். “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் மரணம் இல்லை” என்று தன்னம்பிக்கையுடன் பாடினார் என்றாலும், அது உண்மை. கண்ணதாசனின் பாடல்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது மட்மல்ல, என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும். கண்ணதாசன் வாழ்க்கையும் திருப்பங்கள் நிறைந்தது. […]

Read more

குறுந்தொகை

. குறுந்தொகை, முனைவர் இர.பிரபாகரன், காவ்யா, விலை 700ரூ. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை சங்க இலக்கிய நூல்கள் ஆகும். எட்டுத்தொகை நூல்களில் ஒன்று குறுந்தொகை. குறுகிய பாடல்களைக் கொண்டதால் இது குறுந்தொகை எனப்பட்டது. இது மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது. குறுந்தொகையில் உள்ள பாடல்கள் கற்பனை வளமும், கவிதை நயமும் நிறைந்த காதல் ஓவியங்கள். குறுந்தகைப் பாடல்கள் காதல் வாழ்க்கையின் பல்வேறு கூறுபாடுகளையும், காதலர்களின் உள்ளத்தையும் சுருக்கமாகவும் அழகாகவும் கூறும் சுவையான பாடல்கள். அத்தகைய குறுந்தொகை பாடலுக்கு முனைவர் இர.பிரபாகரன் (மேரிலாந்து, அமெரிக்கா) அழகிய […]

Read more

வயிறு மட்டும் வாழ்க்கையல்ல

வயிறு மட்டும் வாழ்க்கையல்ல, ஏகலைவன், வாசகன் பதிப்பகம், விலை 70ரூ. கேள்விகள் கேட்கப் பழகுவோம், ஏளனங்களை ஏளனப்படுத்துவோம், தோல்விகளைத் தூர்வாருவோம், கோடுகளும் ஓவியமாகும், சாதனைகள் சாத்தியமே என்பன போன்ற தலைப்புகளில் கவிஞர் ஏகலைவன் எழுதிய தன்னம்பிக்கைக் கட்டுரைகளால் நம் நெஞ்சில் நம்பிக்கை ஊட்டுகிறார். நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Read more

வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்

வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்., முனைவர் க.பன்னீர்செல்வம், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், விலை 190ரூ. ஒரு துணை நடிகராக சினிமா உலகில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆர். கடும் உழைப்பினால் கதாநாயகனாக உயர்ந்தார். பின்னர் ‘வசூல் மன்னன்’ ஆனால். கலைஞருடன் ஏற்பட்ட மோதலால் தி.மு.க. வை விட்டு விலகி, அ.தி.மு.க.வை தொடங்கி, ஆட்சியைக் கைப்பற்றினார். 10 ஆண்டுகள் தமிழக முதல்- அமைச்சராக பதவி வகித்து, புகழின் உச்சியில் இருக்கும்போதே மறைந்தார். இது ஒரு புறம் இருக்க, துப்பாக்கியால் சுடப்பட்டு, யமனுடன் போராடி வெற்றி பெற்றார். ஏழை எளிய மக்களுக்கு உதவி, […]

Read more

சிறுபான்மை முஸ்லிம்களுக்கான இஸ்லாமிய சட்டம்

சிறுபான்மை முஸ்லிம்களுக்கான இஸ்லாமிய சட்டம், அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் நளீமி, இலக்கியச் சோலை, விலை 120ரூ. உலகில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் மிகப் பெரிய அளவில் வாழும் சிறுபான்மை சமூகம், இந்திய முஸ்லிம்களே. இலங்கையிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினரே. ஒரு பன்மைச் சமூகத்தில் வாழ்கின்ற முஸ்லிம் சிறுபான்மையினரின் வாழ்வியல் பற்றிய சிந்தனையை முஸ்லிம்கள் மத்தியில் கட்டியெழுப்ப இந்நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Read more
1 53 54 55 56 57 223