தாய்

தாய், தொ.மு.சி.ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. உலகெங்கும் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்களால் அமரத்துவம் மிக்க புரட்சிகரமான நாவலாக அங்கீகரிக்கப்பட்ட நாவல், மார்சிம்கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலாகும். ஒரு புரட்சித்தாயின் வேட்டைத் தவமாக, என்றென்றும் அழியாத காவியமாக கார்க்கி இந்த நாவலைப் படைத்துள்ளார். இன்று வரை தொழிலாளி வர்க்கத்திற்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து, வீரத்தை ஊட்டி வரும் ஓர் உலக இலக்கியம் என்றே இந்த நாவலைக்கூறலாம். இந்த நாவல் உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. நாவலை தமிழில் எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன், அழகிய […]

Read more

நேற்று நான் இன்று நாம்

நேற்று நான் இன்று நாம், ஆர்.எம்.கிருபாகரன், மணிமேகலைப் பிரசுரம், விலை 110ரூ. இலங்கையில் உள்ள வவுனியா மற்றும் கொழும்புவில் நடந்த இனத் துவேச அடிப்படையில் நாம் எப்படியெல்லாம் பாதிப்படைகிறோம் என்பதை மையமாக இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது. பல பாத்திரங்கள் கொழும்பு நகரம், மலையகம் போன்ற இடங்களில் பயணிப்பதாக கதை செல்கிறது. நன்றி: தினத்தந்தி, 15/11/2017

Read more

நீங்களும்  ஆகலாம்

நீங்களும்  ஆகலாம், அ.டோமினிக் சேகர்கா, காகிதம் பதிப்பகம், விலை 50ரூ. மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகள் கொண்ட புத்தகம். “முயற்சி செய்தால் நீங்களும் ஆப்துல் கலாம் ஆகலாம்” என்று மாணவர்களை உற்சாகப்படுத்துகிறார் ஆசிரியர் அ.டோமினிக் சேகர். படிப்பில் சாதனை புரிந்த பல மாணவ மாணவிகள் பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. “இரத்தப் புற்றுநோயுடன் தேர்வு எழுதிய மாணவி”, “அன்று குழந்தை தொழிலாளி, இன்று முதல் மாணவர்”, “பார்வையற்ற மாணவரின் சாதனை” இதுபோன்ற தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளான மாணவர்கள் எத்தகைய அரிய சாதனைகள் […]

Read more

பிக்பாஸ்

பிக்பாஸ், தி.குலசேகர், எஸ்.எஸ்.பப்ளிகேஷன், விலை 100ரூ. 15 பேரை நூறு நாட்களுக்கு ஒரு வீட்டுக்குள்ளே அவர்கள் விருப்பத்தோடு இருக்க வைத்து அவர்களது நடவடிக்கைகளை சோதிக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா. மக்களின் மனதில் தனதான தனித்த அடையாளங்களினால், நிரந்தர இடத்தைப் பெற்று விட்டார். அது குறித்து இந்த நூலில் தி.குலசேகர் சுவையாக அலசுகிறார். நன்றி: தினத்தந்தி, 15/11/2017

Read more

நமக்கு ஏற்படும் நோய்களும் தீர்வுகளும்

நமக்கு ஏற்படும் நோய்களும் தீர்வுகளும், டாக்டர் மொ.முத்துசாமி, மணிமேகலைப் பிரசுரம், விலை 150ரூ. உலகில் நோய் தீர்க்கும் மருத்துவ முறைகளில் முக்கியமானது. மூலிகை மருத்வதுமே, இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்றவை மூலிகைகளையே அடிப்படைகளாகக் கொண்டுள்ளது. இந்த நூலில் டாக்டர் மொ.முத்துசாமி, நோய்கள் பற்றியும், அதை குணப்படுத்துவதற்கான மூலிகை தயாரிப்பு முறைகளையும் அருமையாக விளக்கியுள்ளார். மேலும் மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், குடல், வயிறு, கண், காது, மூக்கு போன்ற அனைத்து உடல் உறுப்புகள் குறித்தும் அனைவருக்கும் புரியும் வகையில் […]

Read more

பட்டி வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்

பட்டி வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 400ரூ. விக்கிரமாதித்தனுக்கு பதுமைகள் சொன்ன கதைகள் புகழ் பெற்றவை. விக்கிரமாதித்தனின் வீரதீரச் செயல்களும், கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்களும் எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டாதவை. இதுவரை விக்கிரமாதித்தன் கதைகள் பல்வேறு பதிப்பகங்களால், பல்வேறு பதிப்பகங்களால், பல்வேறு வடிவமைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது நர்மதா வெளியிட்டுள்ள புத்தகம், பெரிய அளவில் 532 பக்கங்களில் அமைந்துள்ளது. சிறந்த கட்டமைப்பு. நன்றி: தினத்தந்தி, 15/11/2017

Read more

அந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்

அந்த மாமனிதர்களோடு இந்த மனிதர், பேராசிரியர் டாக்டர் ந.வேலுசாமி, யு.எம்.ஐ.யூனிக் மீடியா இன்டிகிரேட்டர், விலை 200ரூ. இந்த நூல் புதுமையானது. இதை எழுதிய பேராசிரியர் டாக்டர் ந. வேலுசாமி, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக இணைப்பதிவாளர். ராஜாஜி, டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், சி.சுப்பிரமணியம், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெயகாந்தன், உள்பட 36 தலைவர்கள் பிரமுகர்களை அவர் இளம் வயதில் சந்தித்துப் பேசினார். அப்போது ஏற்பட்ட அனுபவங்களை இந்த நூலில் சுவைபட எழுதியுள்ளார். இதன் மூலம், அந்த தலைவர்களின் சிறப்புகளை நன்கு உணர முடிகிறது. புதிய முறையில் எழுதப்பட்ட சிறந்த […]

Read more

உலகப் பெருமக்கள்

உலகப் பெருமக்கள், தொகுப்பும் பதிப்பும் பேரா. சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 300ரூ. “காசு பிள்ளை” என்று அழைக்கப்படும் கா.சுப்பிரமணியபிள்ளை, “கல்விக்கடல்” என்று திரு.வி. கல்யாணசுந்தரனாரால் பாராட்டப்பட்ட தமிழறிஞர். அவர் எழுதிய புகழ்பெற்ற நூல்களில், “உலகப்பெருமக்கள்” என்ற இந்த நூலும் ஒன்று. இதில் மகாத்மா காந்தி, ஸ்டாலின், ரூஸ்வெல்ட், ஜார்ஜ் பெர்னாட்ஷா, செகப்பிரியர்(ஷேக்ஸ்பியர்) உள்பட 15 உலகத் தலைவர்களின் வரலாறுகள் அடங்கியுள்ளன. தூய தமிழ் நடையில் காசு பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார். ஆண்டுகள் பல சென்று விட்டபோதிலும், இளமையோடு விளங்குவது இந்த நூலின் […]

Read more

அவ்வையார் வரலாற்று நாடகக் காப்பியம்

அவ்வையார் வரலாற்று நாடகக் காப்பியம், கவிஞர் அவ்வை நிர்மலா, விழிச்சுடர்ப் பதிப்பகம், விலை 400ரூ. சங்க காலத்தில் வாழ்ந்த அவ்வையாரைக் கதைக்களனாகக் கொண்டு, கவிஞர் அவ்வை நிர்மலா எழுதிய வரலாற்று நாடகக் காப்பியம். நாடகம் முழுவதும் மரபுக் கவிதைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐந்து அங்கங்கள் ஒவ்வொன்றிலும் எட்டுக் காட்சிகள். 61 நாடகக் கதை மாந்தர்கள் என 12,345 அடிகளில் ஓர் அருமையான காப்பியத்தைப் படைத்துள்ளார். இது இருபதாம் நூற்றாண்டின் சிறந்த தமிழ் கவிதை நாடகம் என்றால் அது மிகையல்ல. “அரிய உழைப்பு, ஆழ்ந்த படிப்பு, ஆற்றல் […]

Read more

வெடிச்சிரிப்பு

  வெடிச்சிரிப்பு, அ.மா.சாமி, நவமணி பதிப்பகம், விலை 150ரூ. ஏராளமான கதை கட்டுரைகளை எழுதி வாசகர்களிடம் புகழ் பெற்ற ராணி வார இதழின் முன்னாள் ஆசிரியர் அ.மா.சாமி எழுதியுள்ள நகைச்சுவை நூல் வெடிச்சிரிப்பு. இதில் 5 நாடகங்கள் உள்ளன. கதைகளை நகைச்சுவையுடன் எழுதுவது அ.மா.சாமிக்கு கைவந்த கலை. எனவே இந்த நகைச்சுவை நாடகங்கள் வாசகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பதில் வியப்பில்லை. நன்றி: தினத்தந்தி, 1/11/2017

Read more
1 51 52 53 54 55 223