நானும் சினிமாவும்

நானும் சினிமாவும், ஏவி.எம்.சரவணன், தினத்தந்தி பதிப்பகம், விலை 250ரூ. சினிமா கனவுகளோடு சென்னையை எட்டிப்பார்க்கும் எந்த இளைஞனின் முயற்சியும், ஏவி.எம்.ஸ்டூடியோவை எட்டிப் பார்ப்பதில் இருந்துதான் தொடங்கும். பெருமைக்கு உரிய அந்த ஏவி.எம். என்ற மூன்றெழுத்துக்குச் சொந்தக்காரரான, ஏவி.மெய்யப்ப செட்டியாரின் மகனாகப் பிறந்து வளர்ந்து, அவரோடு இணைந்து நடந்த காலம் முதல், தானே சினிமாத் துறையில் தனித்து ஈடுபட்டு, அறுபது ஆண்டுகளைக் கடந்து இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது வரையான அனுபவங்களை அற்புதமாகத் தொகுத்திருக்கிறார் ஏவி.எம்.சரவணன். பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் அறிமுகமானபோது மிகவும் ஒல்லியாக இருந்தார். […]

Read more

ஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் வரலாறு

ஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் வரலாறு, மா.சந்திரமூர்த்தி, சிவன் ராத்திரி விழா மன்றம், விலை 125ரூ. திருவாரூர் மாவட்டம், குடவாசலில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆடிப்புலியூரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாறு மற்றும் கோவில் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 28/2/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026800.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மறவாதிரு மனமே

மறவாதிரு மனமே, தி.நெ.வள்ளிநாயகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. நீதிபதி, கவிஞர், பேச்சாளர், ஆய்வாளர், எழுத்தாளர் என்ற பன்முக ஆற்றல் கொண்டவர் தி.நெ.வள்ளிநாயகம். அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். “கனிந்தால் தானே கனி? துணிந்தால் தானே வழி! இருந்தால் தானே உயிர்! விளைந்தால் தானே பயிர்! “சுடச்சுடச் சங்கு வெண்மை தரும் உண்மை! தொடத் தொடக் கல்லும் சிலையாகும் தன்மை” என்பன போன்ற சுவையான கவிதைகள். “நரம்பு ஓடிந்தால் வீணை பாடாது” “சூரியனை ஒரே விரல் மறைத்திடுமே! காரிருளை ஒரே அகல் குறைத்திடுமே” […]

Read more

கல்கியின் யுகப்புரட்சி

கல்கியின் யுகப்புரட்சி, வானதி பதிப்பகம், விலை 140ரூ. “கல்கி” பத்திரிகையை 1942-ம் ஆண்டில் கல்கி, ரா.கிருஷ்ணமூர்த்தியும், அவர் நண்பர் டி.சதாசிவமும் தொடங்கினார்கள். அதற்குமுன், “ஆனந்த விகடன்” பத்திரிகையின் பொறுப்பாசிரியராக “கல்கி” பணியாற்றினார். அப்போது, ஆனந்த விகடனில் அவர் எழுதிய பல கட்டுரைகள் இதுவரை நூல் வடிவம் பெறாமல் இருந்தன. அவற்றை “யுகப்புரட்சி” என்ற பெயரில் வானதி பதிப்பகத்தார் இப்போது புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. புன்சிரிப்புடன் வாசகர்களைப் படிக்கச் செய்வது கல்கியின் பாணி. அந்த பாணியை […]

Read more

சகோதரி நிவேதிதை வாழ்க்கை வரலாறு

சகோதரி நிவேதிதை வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், விலை 275ரூ. சகோதரி நிவேதிதையின் இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள். 150 ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தில் பிறந்தவர். இவருக்கு “நிவேதிதை” என்ற பெயரை அளித்தவர் சுவாமி விவேகானந்தர். சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகப் புதல்வி நிவேதிதை என்றால், மகாகவி பாரதியாருக்கு ஆன்மிக குரு என்று கூறலாம். பிறப்பால் மேல்நாட்டுப் பெண் என்றாலும், இந்தியாவை தாய்நாடாக ஏற்றுக்கொண்டவர். அவர் வரலாற்றைப் படிப்பது, இந்தியாவின் அரசியல் வரலாற்றையும், ஆன்மிக வரலாற்றையும் சேர்த்துப் படிப்பதற்கு சமம். அழகாகவும், விரிவாகவும் அமைந்துள்ள […]

Read more

கண்ணுறங்காக் காவல்

கண்ணுறங்காக் காவல் (ஒரு முடிவின் ஆரம்பம்), ஆங்கிலத்தில் ப.சிதம்பரம், தமிழில் ரமணன், கவிதா பதிப்பகம், விலை 300ரூ. காங்கிரஸ் கட்சியின் மத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப. சிதம்பரம் எழுதிய கட்டுரைகள் கொண்ட நூல். அவர் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மொழி பெயர்த்தவர் ரமணன். அரசியல், பொருளாதாரம், வெளியுறவு, கொள்கை, சட்டம் ஆகியவை பற்றி தமது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார் சிதம்பரம். பக்கத்துக்குப் பக்கம் பயனுள்ள தகவல்கள் ஜொலிக்கின்றன. ஜனநாயகத்தின் உண்மையான பொருளைக் கூறுவதால், இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க […]

Read more

23 தோஷங்கள் பரிகார ஆலயங்கள்

23 தோஷங்கள் பரிகார ஆலயங்கள், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ. சூரியன், சந்திரன் உள்ளிட்ட 9 கிரகங்களும், மனிதனின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரின் உடலையும் மனதையும் நவக்கிரகங்கள்தான் இயக்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் நவக்கிரகங்களில் ஏதாவது ஒன்றில் தோஷம் ஏற்பட்டால் அந்த கிரகத்துக்குரிய பலன்கள் முழுமையாகக் கிடைக்காமல் போய்விடும். மேலும் கிரக சுழற்சி காரணமாக கெடுதல்பலன்கள்தான் நடக்கும். அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நமது முன்னோர்கள், தோஷ நிவர்த்தி தரும் ஆலயங்கள், பரிகார முறைகளை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் திருமணத் தடை, குழந்தைப் […]

Read more

முருகன் அருள் செல்வம்

முருகன் அருள் செல்வம், பி.எல்.முத்துக்குமாரன், விலை 300ரூ. முருகப் பெருமானைப் பற்றிய அனைத்து விவரங்களும் கொண்ட நூல். மேலும் இதில் முருகன் பாடல்கள் மூலமும், உரையோடு இணைக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 28/2/2018.  

Read more

எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம்

எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம், சபீதா ஜோசப், நக்கீரன் வெளியீடு, விலை 80ரூ. 136 திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர். பிறகு தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக தொடர்ந்து 11 ஆண்டுகள் பதவி வகித்து சாதனை படைத்தார். திரைப்படத்துறையில், அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகள் பற்றிய சுவைபட எழுதியுள்ளார் சபீதா ஜோசப். எம்.ஜி.ஆர். பற்றிய சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 28/2/2018.

Read more

சிங்காரவேலர்

சிங்காரவேலர், பா.வீரமணி, சாகித்திய அகாதெமி, விலை 50ரூ. விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமைச் சிந்தனையின் முன்னோடியுமான சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 28/2/2018.

Read more
1 45 46 47 48 49 223