அன்புள்ள மாணவனே

அன்புள்ள மாணவனே, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 135ரூ. தனி மனிதரிடையே ஒளிந்திருக்கும் முழுத்திறன்களை வளர்த்தெடுப்பதும், அதைச் சமுதாயத்தின் நலனுக்கும் பயன்பெற வைப்பதுமே கல்வியின் இலக்குகளாகும். அந்த வகையில் கல்வியின் உன்னதம் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சாளருமான வெ. இறையன்பு மாணவர்களோடு அறிவார்ந்த அற்புதமான உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார். அவர் மாணவர்களுக்கு எழுதிய 30 மடல்களின் தொகுப்பே இந்நூல். ‘குழந்தைகளை வளர்ப்பது பெரிது அன்று. அவர்களது அறிவை வளர்ப்பதே அதை விடப் பெரிது ‘நீ மகத்தான ஆற்றலாக உருவாவதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறாய். அற்ப […]

Read more

உச்சியிலிருந்து தொடங்கு

உச்சியிலிருந்து தொடங்கு, வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை175ரூ. தினந்தோறும் காலையில் எந்தச் செய்தித்தாளைப் படித்தாலும் அதில் ஏதாவது ஒரு தற்கொலைச் செய்தி இடம் பெற்றுவிடும். அண்மையில் ‘புளுவேல்’ விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் தற்கொலை செய்த செய்திகளைப் படித்தபோது நெஞ்சம் பதறியது. மனிதன் என்றால் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் இதைப் போராடி வெற்றிக்கொள்வதே வாழ்க்கை. தற்கொலை எண்ணத்தில் இருந்து மனித குலம் மீட்சியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான, பேச்சாளருமான வெ.இறையன்பு இந்த நூலை எல்லோருக்கும் புரியும் […]

Read more

கண்டேன் புதையலை

கண்டேன் புதையலை, பிரியசகி, புக்ஸ் பார் சில்ரன், விலை 160ரூ. நமது வாழ்வின் ஆதாரம் கல்வியே. குழந்தைகளுக்கு இயற்கையாக அமைந்துள்ள ஆர்வத்தையும், அவர்தம் தனித்திறனையும் ஒருங்கிணைத்து கற்பிக்க வேண்டும். அந்த அடிப்படையில் புதிய கல்விச் சிந்தனைகளை எளிய தமிழில் ஆசிரியர் பிரியசகி விளக்கியுள்ளார். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ள நூல். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026650.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

கதை திரைக்கதை இயக்கம்

கதை திரைக்கதை இயக்கம், கலைச்செல்வன், நிழல் பதியம் பிலிம் அகாடமி, விலை 350ரூ. சினிமா துறையில் ஈடுபட நினைப்பவர்கள் பல லட்சம். ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிட்டுகிறது. சினிமாவுக்கு கதை எழுதுவது, கடினமான வேலை அல்ல. ஆனால் திரைக்கதை எழுதுவதும், இயக்குவதும் கடினமான வேலைகள். கதை, திரைக்கதை, இயக்கம் பற்றி முழு விவரங்களையும் தருகிறார் கலைச்செல்வன். நாடகங்கள் நடத்துவதில் அனுபவம் பெற்ற இவர், திரைப்படத் துறையில் துணை டைரக்டராகவும், கதை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அவருடைய அனுபவ முதிர்ச்சி, எழுத்தில் பிரதிபலிக்கிறது. சுருக்கமாகச் […]

Read more

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், டாக்டர் எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், விலை 200ரூ. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய சிற்பி டாக்டர் அம்பேத்கர். அதனால், அவருடைய பெயர் இந்தியாவின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றையும் சாதனைகளையும் இந்த நூலில் முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே சிறப்பாக எழுதியுள்ளார். “இந்த நூலின் தலையாய நோக்கம், டாக்டர் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி என்பதோடு மட்டும் அல்லாமல், கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த உலகமே புகழும் ஒரு சிறந்த சட்டமேதை என்பதையும் வெளிக்கொணர்வதே ஆகும்” […]

Read more

அம்மாவின் கதை

அம்மாவின் கதை, எஸ்.கிருபாகரன், விகடன் பிரசுரம், விலை 175ரூ. தமிழகத் திரை உலகிலும், அரசியலிலும் அரை நூற்றாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தியவர் ஜெயலலிதா. பேராசிரியராக விரும்பிய ஜெயலலிதா, “வெண்ணிற ஆடை” படத்தின் மூலம் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் எம்.ஜி.ஆர். மூலம் அரசியலுக்கு வந்தார். தமிழக முதல் – அமைச்சர் ஆனார். எதிர்நீச்சல் போட்டார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார் எஸ்.கிருபாகரன்.பலரும் அறிந்திராத ஜெயலலிதா வாழ்க்கையின் ஆரம்பகால நிகழ்ச்சிகள், அவர் எதிர்கொண்ட சவால்கள், எதிர்ப்புகள் என அனைத்து சம்பவங்களையும் விரிவாகவும், […]

Read more

நான் கண்ட அந்தமான்

நான் கண்ட அந்தமான், நந்தவனம் சந்திரசேகரன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ. பயணங்கள் மனிதனைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகின்றன. ஒரேபாதையில் பலர் பயணித்தாலும் ஆளுக்கு ஆள் அனுபவம் வேறுபடும். அந்தவகையில் அந்தமான் தீவுக்குச் சென்று அங்கு தான் பெற்ற அனுபவத்தை, வித்தியாசமான நடையில் பயணக்கட்டுரையாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 25/4/2018.

Read more

ஊதா வண்ண இலைகளின் பாடல்

ஊதா வண்ண இலைகளின் பாடல், பி.உஷாதேவி, அகநி வெளியீடு, விலை 150ரூ. பக்குவமான பத்து சிறுகதைகளின் தொகுப்பு. வேகமாக வாசிக்க விடாமல், அனுபவங்களாய் மனதுக்குள் விரிந்து யோசித்து வாசிக்க வைக்கும் வரிகள். ஒவ்வொரு கதையும் உள்ளுக்குள் தாக்கமாய்ப் பதிவதை, தவிர்க்க முடியாது. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 25/4/2018.

Read more

பொன்னானவழி

பொன்னானவழி, பானுமதி கே., சீட் சக்ஸீட், விலை 250ரூ. ஆர்வம் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் வெற்றியும் இருக்கிறது. குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு வெற்றிக்கு வழிகாட்ட பெற்றோரும், ஊக்கத்துடன் செயல்பட்டு லட்சியத்தினை அடைய பிள்ளைகளும் பெற்றோர்களும் என எல்லோரும் படிக்க வேண்டிய நூல். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 25/4/2018.

Read more

அழகு ஏன் அழகாயிருக்கிறது

அழகு ஏன் அழகாயிருக்கிறது, பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 50ரூ. அழகு வெளியே இருக்கிறதா? அல்லது உள்ளேயா? மனித மூளையின் நரம்பு மண்டலத்தில் எங்கோ ஒளிந்து கிடக்கிறது அழகுணர்ச்சி. அதுதான் மனிதனின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவிக்கொண்டிருக்கிறது. அழகைப்பற்றிய ரசனை உள்ளோருக்கான அழகான நூல். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 25/4/2018.

Read more
1 44 45 46 47 48 223