நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர், வானதி பதிப்பகம், விலை 200ரூ. தமிழ் நாடக உலகில் முடிசூடா மன்னராக விளங்கியவர் டி.கே.சண்முகம். இளைஞரான அவர்,அவ்வை மூதாட்டிய நடித்து “அவ்வை சண்முகம்” என்று போற்றப்பட்டார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சுப்பையா, எம்.என்.ராஜம், எம்.எஸ்.திரவுபதி உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் இவரது நாடகக் குழுவில் நடித்து, பின்னர் திரைப்படங்களில் புகழ் பெற்றனர். அவ்வை சண்மகத்தின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகன் டி.கே.எஸ்.கலைவாணன் சிறப்பாக எழுதியுள்ளார். டி.கே.சண்முகத்தின் ஆற்றலைப் புகழ்ந்து, தலைவர்களும், தமிழறிஞர்களும் தெரிவித்த கருத்துக்களும் இந்த நூலில் […]

Read more

நேரு சொன்ன நூறு

நேரு சொன்ன நூறு, திருக்குடந்தை பதிப்பகம், விலை 50ரூ. நவஇந்தியாவை உருவாக்கியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. சுதந்திரப் போராட்டத்தின் போது 10 ஆண்டுகள் சிறையில் கழித்தவர். 17 ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றியவர். அவர் நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கூறிய 100 விஷயங்கள், இந்த நூலில் உள்ளன. அண்மையில் காலமான திரைப்பட இயக்குனர் முக்தா சீனிவாசன் இதை எழுதியுள்ளார். சிறிய நூல்தான். ஆனால் சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026856.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

வெளிச்சத்தை நோக்கி

வெளிச்சத்தை நோக்கி, உதயை மு.வீரையன், மேன்மை பதிப்பகம், விலை 140ரூ. கல்வி முறை, மக்கள் தொகை, மனிதநேயம், மதுவின் தீமைகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் இந்த நூலில் புதைந்துள்ளன. ஆசிரியர் உதயை மு. வீரையன் 30 தலைப்புகளில் எழுதி உள்ள தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளன. சமுதாயத்துக்கு தேவையான அனைத்து கருத்துகளும் ஒரு சேர கிடைக்கின்றன. நன்றி: தினத்தந்தி,16/5/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026693.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

இந்தி ஏகாதிபத்தியம்

இந்தி ஏகாதிபத்தியம், ஆலடி அருணா, விகடன் பிரசுரம், விலை 240ரூ. நாடு விடுதலை அடைந்த பின் தமிழகம் கண்ட புரட்சியில் மிக முக்கியமானது மொழிப்போர் என்பதை தமிழ்ப் பேசும் நல்லுகம் நன்கறியும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் வலுக்கட்டாயமாக நடந்த இந்தி திணிப்பையும், அதற்கு எதிராக தமிழகம் மேற்கொண்ட போராட்டங்களையும் கச்சிதமாக விவரிக்கிறது இந்த நூல். ‘ஒரு இனத்தை அடிமைப்படுத்த வேண்டுமென்றால் அவர்களின் மொழியை அழித்து விட வேண்டும்’ என்ற சூழ்ச்சியின் அடிப்படையிலேயே, பாரதத்தின் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் மற்ற பகுதிகளில் இந்தியை திணிக்க […]

Read more

ஆதார் சட்டம்

ஆதார் சட்டம், பி.ஆர்.ஜெயராஜன், சுப்ரீம் லா பப்ளிகேஷன்ஸ், விலை 210ரூ. இந்தியாவில் வசிக்கும் தனிநபர் ஒவ்வொருவரின் வாழ்விற்கும் ஆதார் பதிவு ஆதாரமாக ஆகி வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் ஆதார் சட்டத்தை முழுமையாக விளக்கிக் கூறும் நூல். அனைவரும் தெரிந்து பயனடைய வேண்டிய தகவல்கள் ஆதார் சட்டம் ஓர் அறிமுகம், வகைமுறைகள், ஒழுங்குமுறை விதிகள் என 3 தலைப்புகளில் பயனுள்ள வகையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தரப்பட்டு உள்ளன. ஆதார் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் வகை செய்வதற்காக நமது அரசு 2016-ம் ஆண்டு […]

Read more

அன்பின் பிரபந்தம்

அன்பின் பிரபந்தம், உலகக் கவிதைகள், மெொழிபெயர்ப்பாளர் கிருஷ்ண பிரசாத், காவ்யா, விலை 950ரூ. பிறமொழி இலக்கியங்கள் தமிழ் மொழியில் செய்தல் வேண்டும் என்று பாடினார் பாரதி. அந்த முண்டாசு கவிஞனின் அவாவை நிறைவேற்றும் வகையில் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் புகழ்பெற் கவிதைகளும், பாப்லோ நெருடா, அகமத் பராஸ் போன்ற உலக புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகளும் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு உள்ள பெருநூல் இது. உலக கவிஞர்களின் நவரசம் ததும்பும் பாடல்களை ஒருசேர படிக்கும்போது வாசகரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பிரவாகம் எடுப்பது திண்ணம். […]

Read more

நூலகத்தால் உயர்ந்தேன்

நூலகத்தால் உயர்ந்தேன், முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கம், வசந்தா பதிப்பகம், விலை 1200ரூ. தமிழ்நாட்டில், நூலகத்துறை வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கம். கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்டவர் மோகனரங்கம். அவர் தனது வாழ்க்கை வரலாற்றை “நூலகத்தால் உயர்ந்தேன்” என்ற தலைப்பில் எழுதியுள்ளார். காரணம், தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை நூலகங்களில் கழித்திருக்கிறார். நூலில் ஏராளமான தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பற்றிய விவரங்களையும் விரிவாக எழுதியுள்ளார். எனவே, இந்த நூல் மூலம் ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்ல, பலருடைய வாழ்க்கையைப் பற்றி அறிய முடிகிறது. குறிப்பிட்டுச் சொன்னால், […]

Read more

ஆகாயத் தாமரை

ஆகாயத் தாமரை, பாரதி வசந்தன், பழனியப்பா பிரதர்ஸ், விலை 220ரூ. அற்புதமான சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்ற பாரதி வசந்தன், கவிதையாப்பதிலும் தனக்குள்ள வல்லமையை எடுத்துக்காட்டி இருக்கிறார், ஆகாயத்தாமரை நூலின் மூலம். எல்லாம் மரபுக் கவிதைகள். சமுதாயத்தின் கொடுமைகளை சாடும்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பும்போதும், அவருடைய கவிதைகள் நமது இதயத்தைத் தொடுகின்றன. கவிதைகளில் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கடல் அலைபோல் பொங்கி எழுகின்றன. மாதிரிக்கு ஒரு கவிதை, “என் இனம் என் மொழி என் நிலம் மீட்பது இதுவே வாழ்வின் லட்சியம் – என் […]

Read more

சினிமா நிருபரின் கலை உலகப் பயணம்

சினிமா நிருபரின் கலை உலகப் பயணம், மேஜர் தாசன்(எஸ்.தேவாதிராஜன்), அமராவதி பதிப்பகம், விலை 50ரூ. சினிமா பத்திரிகையாளர்களில் முக்கியமானவர் மேஜர் தாசன்.(இயற்பெயர் எஸ்.தேவாதிராஜன்). சினிமா நடிகர் – நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் என்று அனைவரையும் பேட்டி கண்டு எழுதியவர். அவர் தனது அனுபவங்களை, டெலிவிஷ,னில் பத்திரிகையாளர் கீழாம்பூர் எஸ்.சங்கரசுப்பிரமணியனுடன் பகிர்ந்து கொண்டார். அந்த பேட்டி நூல் வடிவம் பெற்றுள்ளது. புத்தகம் சிறியதுதான். ஆனால் சுவையான தகவல் நிறைய உள்ளன. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

பாரதிராஜாவின் திரைப்படங்கள் ஒரு பார்வை

பாரதிராஜாவின் திரைப்படங்கள் ஒரு பார்வை, அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், முனைவர் கமலம் சங்கர், விலை 110ரூ. தமிழ்த்திரை உலகில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர், இயக்குனர் இமயம் பாரதிராஜா. உண்மையா கிராமங்களையும், உண்மையான மனிதர்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினர். ஒவ்வொரு திரைப்படத்தையும் ஒரு இலக்கியமாக உருவாக்கினார். காலத்தால் அழிக்க முடியாதவை அவருடைய படங்கள். அது மட்டுமா? சாதாரண நடிகர்களுக்கு நடிப்பு கற்றுக்கொடுத்து, நட்சத்திரங்களாக ஜொலிக்க வைத்தார். உதவி டைரக்டர்களாக இருந்தவர்களை, டைரக்டர்களாக உயர வைத்தவர். தமிழ் சினிமாவின் அந்தஸ்த்தை உயர்த்தியவர்களில் பாரதிராஜாவுக்கு தனி […]

Read more
1 42 43 44 45 46 223