ஸ்ரீராமானுஜர் 1000 ஆண்டுகள்

ஸ்ரீராமானுஜர் 1000 ஆண்டுகள், எஸ்.சுந்தரேசன், சாந்தி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரல் 1017-ம் ஆண்டு பிறந்து, 1137-ம் ஆண்டுவரை வாழ்ந்த ஸ்ரீ ராமானுஜர் வைணவக் கொள்கைகளை நிலை நிறுத்தியவர் என்று கொண்டாடப்படுகிறார். அவர் குல வேறுபாடு பார்க்காமல், கீழ் சாதி, மேல் சாதி என்ற பேதம் இல்லாமல் ஆற்றிய சமயத் தொண்டுகள் பற்றி மிக விரிவான தகவல்கள் தக்க சான்றுகளுடன் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. திருப்பதி கோவிலில் இருக்கும் சிலை சிவனா, விஷ்ணுவா என்ற சர்ச்சை எழுந்தபோது, அந்த சிலை விஷ்ணுதான் […]

Read more

மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்.

மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்., ஜி.விசுவநாதன், கே.எஸ்.எல்.மீடியா லிமிடெட், விலை 150ரூ. விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதன், மக்கள் போற்றும் தலைவரான எம்.ஜி.ஆரின் வரலாறு, அவருடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என பல்வேறு விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. கட்சியைத் தொடங்கியபோது, அவரை மலையாளி என்று வர்ணித்தார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதற்கு எம்.ஜி.ஆர்., “யார் தமிழர் என்பதற்கு நீங்களே விளக்கம் சொல்லுங்கள். தமிழக முதல்வராக இருந்த ஓமந்தூராரின் தாய்மொழி தெலுங்கு, ஆனால் அவர் தமிழ் மீது வைத்திருந்த பற்றினை நாடே அறியும். முதல்வராக […]

Read more

என்னை நான் சந்தித்தேன்

என்னை நான் சந்தித்தேன், ராஜேஷ்குமார், அமராவதி, விலை 390ரூ. 1500 நாவல்களுக்கும், 2000 சிறுகதைகளும் எழுதி சாதனை படைத்தவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். கிரைம் கதைகள் எழுதுவதில் மன்னர். அவர் தன் அனுபவங்களைப் பற்றி எழுதிய புத்தகம்தான் “என்னை நான் சந்தித்தேன்”, பெரும்பாலான வாழ்க்கை வரலாறு நூல்கள் சுவையாக அமைவது இல்லை. இந்தப் புத்தகம் அதற்கு விதிவிலக்கு. அவருடைய நாவல்கள் போல் இதுவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் சினிமாக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு இவர் பட்ட அவஸ்தையை நகைச்சுவையுடன் எழுதி, நம்மை சிரிக்க வைக்கிறார். எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய […]

Read more

கண்ணன் வருவான்

கண்ணன் வருவான், இந்திரா சவுந்தராஜன், திருமகள் நிலையம், விலை 250ரூ. மகாபாரதத்தில் பாண்டவர்கள் ராஜசூய யாகம் நடத்தும் வேளையில் அவர்களுக்கு கிருஷ்ணரின் பெருமைகளை விளக்கிக் கூறும் வகையில், கிருஷ்ணரின் வரலாறும் அவரது அவதார மகிமைகளும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. எழுதியவர் இந்திரா சவுந்தரராஜன் என்பதால் இந்த வரலாற்றை விறுவிறுப்பான நாவல் போல சுவைபடத் தந்துள்ளார். கிருஷ்ணரையும், துவாரகையையும் அழிக்க வந்த சால்வனின் சம்ஹாரம் வரை உள்ள வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ள இந்த நூலில், ஆன்மிகக் கருத்துக்களை ஆங்காங்கே அருமையான விளக்கங்களுடன் தந்து இருப்பது சிறப்பு. இந்தப் புத்தகத்தை […]

Read more

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், பாலகுமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், விலை 275ரூ. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் ராமரின் வரலாறு பலராலும் பலவிதங்களில் பாராட்டப்பட்டுள்ளது. அவற்றில் வால்மீகி முனிவர் தந்த ராமாயணத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. அதில் உள்ள காவிய நயத்தைப் போற்றியபடி ராம காவியத்தைத் தந்து இருக்கிறார் பாலகுமாரன். படிப்பதற்கு சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, துளசிதாசர், கம்பர், அருணாசலக்கவிராயர் ஆகியோர் வழங்கிய ராம காதைகளில் உள்ள சிறப்புக்களையும் இந்த நூலில் தொட்டுக்காட்டி இருப்பது சிறப்பு. அயோத்தியா காண்டம் வரை சொல்லப்பட்டுள்ள இந்த […]

Read more

இந்தியாவின் இருண்ட காலம்

இந்தியாவின் இருண்ட காலம், சசி தரூர், கிழக்கு பதிப்பகம், விலை 350ரூ. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் நன்மைகளை பாராட்டும் நூல்கள் பல இருக்கின்றன. ஆனால் காலனி ஆதிக்கம் இந்தியாவை எப்படிச் சீரழித்தது என்பதையும், இந்தத் தேசத்தை எப்படி பின்னோக்கி இழுத்துச் சென்றது என்பதையும் இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. பிரிட்டிஷார் இந்தியாவுக்கு இழைத்த அநீதியைத் தகுந்த ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்நூல் நம்முடைய கடந்த காலம் குறித்த பிழையான புரிதலைக் களைய உதவும் ஒரு முக்கிய ஆவணமாகவே இருக்கிறது. ஜாலியன் […]

Read more

எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம்

  எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம், மேன்மை வெளியீடு, விலை 150ரூ. தமிழ்த்திரை உலகின், நகைச்சுவை நடிப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கொடிகட்டிப் பறந்தபோது, அவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர், காளி என்.ரத்தினம். என்.எஸ்.கிருஷ்ணன் நடிப்பில் நவீனம் கலந்திருக்கும். காளி என்.ரத்தினத்தின் நகைச்சுவையில் முழுக்க முழுக்க கிராமிய மணம் கமழும். “கிராமிய கலையில் அண்ணன் (காளி என்.ரத்தினம்) பெரிய மாஸ்டர்” என்று கலைவாணர் பாராட்டியுள்ளார். நாடகத்திலும், சினிமாவிலும் நடிப்பதற்கு எம்.ஜி.ஆருக்கு பயிற்சி அளித்ததுடன், அத்துறைகளில் அவர் கால் பதிக்க வழிவகுத்தவர் காளி என்.ரத்தினம்தான். அவருடைய […]

Read more

அவரும் நானும்

அவரும் நானும், துர்கா ஸ்டாலின், உயிர்மை பதிப்பகம், விலை800ரூ. ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். அதேபோன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிக்கு பின்னால் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் இருப்பதை இந்த நூல் ஊர்ஜிதப்படுத்துகிறது. மனைவி சிறப்பாக இருந்தால் வீடு சிறப்பு பெறும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க வாழ்ந்து வரும் நூலாசிரியரின் மறக்க முடியாத மனப்பதிவுகளை அபூர்வ புகைப்படங்களுடன் இந்த நூல் சித்தரிக்கிறது. ஒரு அரசியல் குடும்பம் எதிர்கொள்ளக் கூடிய நெருக்கடிகள், சவால்கள், சோதனையான […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார்

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார், சுவாமி கமலாத்மனாந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 200ரூ. இந்திய தேசிய ஒற்றுமை, மத நல்லிணக்கம், சமய சமரசம், பெண்களின் மேன்மை போன்றவற்றில் சுவாமி விவேகானந்தருக்கும் மகாகவி பாரதியாருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் பல மேற்கோள்களுடன் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. விவேகானந்தர் பற்றி பாரதியார் எழுதிய பல கட்டுரைகளும், தமிழ் மொழிபெயர்ப்புடன் கூடிய அவரது ஆங்கில கட்டுரைகளும் இதில், இடம் பெற்றுள்ளன. விவேகானந்தர் பற்றி பல்வேறு பத்திரிகைகளில் பாரதியார் வெளியிட்ட 75 மேற்கோள்கள், பகவத் கீதை தமிழ் மொழிபெயர்ப்பில் அவர் […]

Read more

ஞானாமிர்தம்

ஞானாமிர்தம், ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், விலை 650ரூ. திருவொற்றியூரில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாகீச முனிவர், சைவ சித்தாந்த கொள்கைகளை விளக்கி எழுதிய நூல் ஞானாமிர்தம். இதில் உள்ள 75 பாடல்களில் காணப்படும் கடினமான அத்தனை வார்த்தைகளுக்கும் எளிய பதவுரை, மற்றும் விளக்கவுரை, தொகுப்பு உரை ஆகியவற்றுடன் அந்தப் பாடல்களில் உள்ள ஆழ்ந்த தத்துவங்களை விளக்கமாகத் தந்து இருக்கிறார் ஆசிரியர். சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான ஆன்மா, இறைவன், பாசம் ஆகியவற்றை பல்வேறு இலக்கியங்களில் காணப்படும் கருத்துக்களை மேற்கோள் காட்டி விளக்கமாகத் தந்து இருப்பது […]

Read more
1 43 44 45 46 47 223