சட்ட வல்லுநர் திருவள்ளுவர்

சட்ட வல்லுநர் திருவள்ளுவர், டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அகநி வெளியீடு, பக். 275, விலை 220ரூ. மேல் நாட்டவர்கள் தான் நம் நாட்டின் சட்டங்களை வடிவமைத்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன்… 1980 – 83ம் ஆண்டுவாக்கில், நம் சட்டக் கல்லூரிகளில் ரோமன், ஆங்கிலேய, லத்தீன், அமெரிக்கர்கள் மட்டுமே சட்ட அறிஞர்களாக அறிமுகம் செய்யப்பட்டனர். இந்தியாவிலிருந்து சட்ட அறிஞர்களாக ஏனோதானோவென்று அறிமுகம் செய்யப் பட்டவர்கள் மனுவும், சாணக்கியரும் (கவுடில்லியர்) மட்டுமே. தமிழில் நீதி நூல்கள் அதிகம் இருக்கின்றன என்ற உண்மையோ, தமிழ்மொழி சட்டக் கருத்துக்கள் […]

Read more

சரித்திரப் புகழ் தெய்வீக இசைப் பாடகர்கள் பாகம் – 2

சரித்திரப் புகழ் தெய்வீக இசைப் பாடகர்கள் பாகம் – 2, எஸ்.எஸ். பரத்வாஜ், மணிமேகலை பிரசுரம், பக். 328, விலை 275ரூ. முறையான இசைப் பயில விரும்புவோர், ஒரு சாகித்தியத்தை யார் எழுதியது என்பதையும், அந்த சாகித்தியத்தின் முழு அர்த்தத்தையும் முற்றிலும் புரிந்து கொள்ள முனைவர். இதெல்லாம், இசைக் கல்லூரிகளில் பயின்றால் மட்டுமே சாத்தியம். இப்போதைய அவசர உலகில், சங்கீதம் கற்றுக் கொடுப்பவர்களே, வாக்கேயக்காரர்கள் பற்றி அறிய ஆவல் காட்டுவதில்லை. ஆனால், வாக்கேயக்காரர்கள் பற்றி அறிய ஆவல் கொண்டோர், அவர்களைப் பற்றி மேம்போக்காக எழுதப்பட்டுள்ள […]

Read more

உங்களுக்கான 24 போர் விதிகள்

உங்களுக்கான 24 போர் விதிகள், செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்., சுரா பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. இப்போதைய நேர்மையற்ற சில அதிகாரிகளை மனதில் நிழலாட விட்டு, இந்தப் புத்தகத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம். எடுத்தாலும் தவறில்லை. படித்து முடித்து இறுதியில், இப்படிப்பட்ட சிந்தனையைத் தூண்டும் அதிகாரியை நாம் பெற்றிருக்கிறோமே என, ஆச்சரியப்பட்டுக் கொள்ளலாம். தனக்கு நேர்ந்த அவமானங்களைத் தாண்டி, எப்படி ஒரு அதிகாரியாகச் செயல்படுவது என்பதற்கு, தன் அனுபவத்தின் மூலமும், தான் படித்த அரிய புத்தகங்களின் மூலமும் மனதைப் பதப்படுத்தித் […]

Read more

இதயம் காக்கும் பாரம்பரிய உணவுகள்

இதயம் காக்கும் பாரம்பரிய உணவுகள், யசோதரை கருணாகரன், ஆனந்த விகடன், விலை 165ரூ. இதயத்தைக் காக்கும் உணவுகள் என்ற தலைப்பில், பல்வேறு உணவுகள் பாரம்பரிய பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் வகைகளை இதில் காணலாம். கொள்ளு ரசப்பொடி, முடக்கத்தான் இட்லி, இலந்தை வடை என்று பல ரெசிபிகள் இதில் அடக்கம். இந்த மூன்று நூல்களையும் வெளியிட்டு உணவுத் தயாரிப்பின் சிறப்பை ஆனந்த விகடன் பிரசுரம் வெளிப்படுத்தியிருக்கிறது. நன்றி: தினமலர், 9/4/2017.

Read more

மருந்தென வேண்டாவாம்

மருந்தென வேண்டாவாம், மருத்துவர் சி.எஸ். சிவராமன், ஆனந்த விகடன், விலை 115ரூ. சுக்கு, வெந்தயம், மஞ்சள், சீரகம் உட்பட நமது பண்டைய கால சமையல் உணவுக்கான பொருட்கள் எந்த அளவு உடலின் சமநிலைக்கு உதவுகிறது என்பதை விளக்கும் நூல். அறுசுவை உணவு வாழ்வைச் சிறக்க வைக்கும் என்பதும் இந்த நூலில் கூறப்படும் கருத்தாகும். நன்றி: தினமலர், 9/4/2017.

Read more

கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை

கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை, seed அறக்கட்டளை, ஆனந்த விகடன், விலை 185ரூ. திருநெல்வேலியில் நடந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவில் சமையல் கலையில் தேர்ந்தவர்கள் தயாரித்த உணவு வகைகள் தயாரிப்புகள் தரப்பட்டுள்ளன. வழுவழு தாளில், வண்ண உணவுகள் தயாரிப்பும் இந்த நூலின் தனிச்சிறப்பு. நன்றி: தினமலர், 9/4/2017.

Read more

நினைவுச் சின்னம்

நினைவுச் சின்னம், வரலாற்று நாவல், அ. ரெங்கசாமி, தமிழோசை பதிப்பகம், பக். 464, விலை 400ரூ. சயாம் – பர்மா மரண ரயில் பாதைத் திட்டத்தின் போது, ஜப்பான் இழைத்த கொடுமைகளால், 2.5 லட்சம் தமிழர்கள் உயிர் இழந்த சம்பவத்தை ஒட்டி மலேயத் தமிழர்களுக்காக, போர் நினைவுச் சின்னம் ஒன்றைப் போல எழுப்ப முடியாததால், இந்நாவலுக்கு பேனா முனை கொண்டு ‘நினைவுச் சின்னம்’ எழுப்பியுள்ளதாகக் கூறும் இந்நாவலாசிரியரின் எழுத்தோவியம், இன்றைய தலைமுறையினர் மூதாதையர்களின் அவல வரலாற்றைத் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. மலேஷியத் தமிழ்த் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி […]

Read more

மெல்லக் கொல்லும் பால்

மெல்லக் கொல்லும் பால், டாக்டர் ஜெகதீசன், எம்.டி., டிசிஎச்., எம்.எஸ்சி., விலை 100ரூ. பால் நல்லதா, கெட்டதா? என்று பட்டிமன்றம் வைத்தால் நிச்சயம் யார் வெல்வர் என்று நினைக்கிறீர்கள்? கெட்டது என்ற அணியினர் தான். காரணம் அதற்கான அத்தனை ஆதாரங்களையும் திரட்டி, புள்ளி விபரங்களோடு மருத்துவர் அவர்கள், மெல்லக்கொல்லும் பால் என்னும் நூலை எழுதியிருக்கிறார். இவர், முதுநிலை மரபியல் மருத்துவம் பயின்றவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்று குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவம் பார்த்துக்கொண்டிருப்பவர். ஒரு மருத்துவர் ஆதாரங்களுடன் எழுதி இருக்கும் […]

Read more

அருள்வளர் மதுரை மீனாட்சி அம்மை கலிவெண்பா

அருள்வளர் மதுரை மீனாட்சி அம்மை கலிவெண்பா, மு. இராமலிங்கம், எல்கேஎம் பப்ளிகேஷன், பக். 32, விலை 22ரூ. மீனாட்சி அம்மையின் சிறப்புகளை பாடுவதாக அமைந்துள்ளது இந்நூல். நன்றி: தினமலர், 29/1/2017. —- ஐம்பெரும் காப்பியக்கதைகள், ஆர்.சி.சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 45ரூ. எளிய கதை வடிவில், மாணவர்கள் படித்து பயன் அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்நூல். நன்றி: தினமலர், 29/1/2017.  

Read more

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை, மு. நியாஸ் அகமது, விகடன் பிரசுரம், பக். 192, விலை 140ரூ. “நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன்‘’- இது தனக்கு மிக நெருங்கியவர்களுடன் ஜெயலலிதா பகிர்ந்து கொண்ட வாசகம். அந்த நரகங்கள் எவை, அவற்றை எப்படித் தாண்டிக் குதித்துத் தப்பித்து வந்தார் என்பதை விவரிப்பதுதான் இந்த நூல். இரண்டாவது வயதில் தந்தையை இழந்தது, தாயார் வேதவல்லி, “சந்தியா’‘ என்கிற பெயர் தாங்கி படங்களில் நடித்தது, சர்ச் பார்க் கான்வென்டில் ஜெ.யின் படிப்பு, […]

Read more
1 120 121 122 123 124 240