சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன்

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன், உளிமகிழ் ராஜ்கமல், வானதி பதிப்பகம், பக். 248, விலை 180ரூ. சோழ வரலாற்றில் மாபெரும் வீரனாக, தவிர்க்க முடியாத ஓர் தலைவனாகக் கருதப்படுபவர் ஆதித்த கரிகாலன். இவனின் தம்பி தான் அருண்மொழி என்னும் ராஜராஜன். சோழப் பேரரசை ஆதித்த கரிகாலன் ஐந்து ஆண்டுகள் தான் ஆட்சி புரிந்திருக்கிறார். அதற்குள்ளாகவே எவரும் தொட முடியாத சாதனைகளை எல்லாம், சாதாரணமாகத் தொட்டுச் சென்றது இவரின் பெருஞ்சிறப்பு. அவர் காலத்தில் அவருக்கு நிகரான வீரனே கிடையாது என்பதைச் சொல்வதாக இருக்கிறது. மாவீரனான ஆதித்த […]

Read more

வலை வாசல் வருக

வலை வாசல் வருக, முனைவர் பா.சிதம்பர ராஜன், க.சண்முகம், எஸ்.ஆர்.எம். கல்லூரி, பக். 72, விலை 150ரூ நம் தாய் மொழியாம் தமிழில், கணினி தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் புனையப்பட்டுள்ள அற்புத நுால். ஒவ்வொரு கணினி அறிவியலை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நம்மை சார்ந்த நிகழ்வுகளை தக்க சான்றுகளுடன் விளக்குகிறது இந்நுால். தரவுப் பகுப்பாய்வு, மேகக் கணிமை, வலையிணைப்புக் கணிமை, மின்வெளி பாதுகாப்பு, தன்னியக்க இயந்திரம் உள்ளிட்டவற்றை எளிய நடையில் இரத்தினச் சுருக்கமாகப் பட்டியலிடுகிறது இந்நுால். இன்றைய தலைமுறை மாணவர்கள் […]

Read more

மகத்தான பேரூரைகள்

மகத்தான பேரூரைகள், பெ.சுபாசு சந்திரபோசு, அன்னம், பக். 240, விலை 200ரூ பேச்சு என்பது உலக அளவில் ஒரு கலையாக உருவான போது, ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி, அரசியல், புரட்சி, சமயம், நீதி போன்ற துறைகளில் மாற்றங்களை உருவாக்க, மகத்தான பேச்சாளர்கள் உலக அளவில் உருவாகினர். உலக அளவில் மகத்தான பேருரைகள் ஆற்றிய தத்துவ ஞானிகள், அரசியல் சிந்தனையாளர்கள், பகுத்தறிவுவாதிகள், எழுத்தாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், சமயவாதிகள், அரசியல் மேதைகள், சட்ட வல்லுனர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என, 25 நபர்களின் பேருரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. […]

Read more

கீரைகளும் மருத்துவப் பயன்களும்

கீரைகளும் மருத்துவப் பயன்களும், டாக்டர் மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 112, விலை 90ரூ. ஆதி காலம் முதல் இன்று வரை, கீரை வகைகளுக்கு என்றென்றும் சிறப்பிடம் உண்டு. கீரை இல்லாமல் மதிய உணவு இல்லை. மனித உடலில் ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதில், மூலிகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அவற்றில், கீரைகளின் பங்கு மிக முக்கியமானது என, முன்னோராகிய மூதாதையர் சொல்வர். சமையலறையில் கீரைகளின் பயன்பாடு, அவற்றின் மருத்துவ குணம், அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து, நுாலாசிரியரும், மருத்துவருமான மானக்சா கூறியுள்ளது […]

Read more

விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீ ருத்ரம், திருக் – திருச்சிய விவேகம், பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி, தமிழில் பேராசிரியர் க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 848, 256, 301, விலை 1000ரூ, 250ரூ, 250ரூ. நம்மிடையே வாழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்தசிறந்த துறவியான தயானந்த சரஸ்வதி, இந்த நாட்டின் அறிவுச் செல்வமான உபநிஷத், வேதம் ஆகியவற்றின் பருப்பொருளை உலகம் முழுவதும் சென்று, தன் சிறந்த ஆங்கில உரையால் விளக்கிய மகான். ஆயிரம் பேர் கொண்ட விஷ்ணுவை விளக்கும் சஹஸ்ரநாம விளக்கம் ஆன்மிகக்கடல். அதை மொழிபெயர்த்த ஆசிரியர் […]

Read more

எங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்

எங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள், சி.எஸ்.தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 192, விலை 175ரூ. நீண்டதாகப் பலரும் கருதும் இந்த வாழ்க்கை உண்மையில் மிகவும் சிறியது. கண் மூடி இமைப்பதற்குள் காலம் பறந்து விடுகிறது. இதை உணர்ந்தோர் வாழ்க்கையில் எதையேனும் சாதிக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். பலர் இலக்குகள் இன்றி, கிடைத்த வாழ்க்கையில் சமரசமாகி நீர்த்து விடுகின்றனர். வாழ்க்கையின் இடையில் வரும் ஒவ்வொரு சவாலான கட்டத்திலும் வெல்வதற்கு முயல்வதே ஊக்கமுள்ளோரின் இலக்கு. எங்கும் எதிலும் எப்போதுமே நேர்மையோடு முதன்மையாக நிற்க […]

Read more

மகாபாரதமும் மாயக் கண்ணனும்

மகாபாரதமும் மாயக் கண்ணனும், இரா.ஜீவரத்தினம், கைத்தடி பதிப்பகம், பக்.114, விலை 120ரூ. இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் கோகுல கிருஷ்ணனின் ஆளுமை மிகுந்து காணப்படும். இதில் பலவித மாயங்களைப் புரிந்து, எல்லாரின் மனதிலும் எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பவன் மாயக் கண்ணன். பாரதக் கதையின் மீது நாட்டம் கொண்ட ஜீவரத்தினம், வியாச பாரதம் மற்றும் வில்லிபுத்துாரார் பாரதம் முதலியவற்றில் உள்ள நிகழ்ச்சிகளை தொகுத்து, வாசர்களின் பாராட்டைப் பெறுகிறார். – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர், 5/5/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027995.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை

ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை, வண்ணைத் தெய்வம், மணிமேகலை பிரசுரம், பக். 272, விலை 170ரூ. இலங்கை மண்ணைவிட்டு பிரான்சிற்கு புலம் பெயர்ந்த எழுத்தாளரான வண்ணைத் தெய்வத்தின் பதிமூன்றாவது புத்தகம் இந்தச் சிறுகதைத் தொகுதி. அகரம் என்ற இதழில், 26 சிறுகதைகளையும், 12 குட்டிக் கதைகளையும் தொகுத்திருக்கின்றனர். மண்ணைவிட்டு புலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தன் மண்வாசனையை மறக்காமல் மனதோடு சுமந்து வாழ்பவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் வகையில் பதிவு செய்திருக்கிறார். சிறுகதைகளில் வரும் எழுத்துக்கள் மிக எளிமையானதாக இருக்கிறது; கருத்தளவில் ஆழமானதாக இருக்கிறது. நன்றி: தினமலர், […]

Read more

மண்ணும் மனிதரும்

மண்ணும் மனிதரும், டி.பி. சித்தலிங்கையா, சாகித்திய அகாடமி, பக். 648, விலை 485ரூ. கன்னட இலக்கியத்தின் கலங்கரை விளக்கம் என போற்றப்படும் சிவராம காரந்த் எழுதிய மூன்று தலைமுறைகளின் கதைதான் மண்ணும் மனிதரும். சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். மனித வாழ்க்கையில் இயற்கையின் பங்கு மற்றும் சுற்றுச்சூழலியல் பங்கு பற்றி சிந்தித்து, தொலைநோக்குப் பார்வையோடு முன் நகர்த்தும் முன்னோடி இவர். ஒரு கடலோர கிராமத்தில், பரம்பரையாக வாழ்ந்து வரும் வேளாண்மைக் குடும்பத்தில், நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது. மகன் நிலத்தை விற்று நகரத்துக்குச் சென்று […]

Read more

சேப்பியன்ஸ்

சேப்பியன்ஸ், யுவால் நோவா ஹராரி, தமிழில் நாகலட்சு சண்முகம், மஞ்சுள் ப்பளிஷிங் அவுஸ், பக். 499, விலை 499ரூ. பிரபஞ்சத்தோற்றம், பூமி உருவாதல், உயிரினங்களின் தோற்றம் என 1,350 கோடி ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாற்றை விளக்கி வியக்க வைக்கிறது இந்த நூல். கோடானு கோடி உயிர் இனங்களில் ஒன்றாகவும், அரை குறை ஆடையுடனும், பரட்டைத் தலையுடனும், காய் கனிகளைப் பொறுக்கிக்கொண்டும், எதிர்ப்பட்ட விலங்குகளை வேட்டையாடி, திரிந்து கொண்டிருந்த மனித இனம், படிப்படியாக மாறி, இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற ஓர் இனமாக மாறி […]

Read more
1 70 71 72 73 74 240