குழந்தைகள் ஆடிய குடைராட்டினம்

குழந்தைகள் ஆடிய குடைராட்டினம், அருள்நிதி ஆதவன், ஜோதி பதிப்பகம், பக்.40, விலை 30ரூ. மரங்களை குலசாமிகளாகப் போற்றிய பண்பாட்டு மரபுகளைக் கொண்டது நம் தமிழகம். இந்நுாலில் மூன்று மரங்களும், மூன்று குழந்தைகளும் உறவாடி மகிழ்கின்றன. மரங்கள் பறவைகளைப் போலவே நேசித்து, மனிதர்களுக்கு உணர்வூட்டுகின்றன; உயிர் காற்று தருகின்றன. அன்பின் பெரு வெள்ளம் மரங்களில் கசியும் என்பதை நுாலாசிரியர் உணர்த்தியுள்ள பாங்கு பாராட்டத்தக்கது. நன்றி:தினமலர், 20/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

அன்பென்று கொட்டு முரசே

அன்பென்று கொட்டு முரசே, கவிஞர் செல்லம் ரகு, தளிர் இலக்கியகளம், பக்.96, விலை 120ரூ. பண்புகளில் தலையாயது அன்பு. அதை தலையங்கமாக்கி முரசு கொட்டி கவிதை வடித்திருக்கிறார். சமூக அக்கறையின் பெருமூச்சு இந்நுாலில் இழையோடியிருக்கிறது. காதல், காதல் தோல்வி, பிரிவு, ஜாதி மதப் பிளவுகள், சமூக அவலங்கள், பெண்களின் சுதந்திரம் எனப் பல தளங்களை தொட்டிருக்கிறார் நுாலாசிரியர். ‘நிலைமாறும் உலகு…! போய் வா என்னுயிரே…! எங்கே போகிறாய்? நெஞ்சு பொறுக்குதில்லையே! காதலின் வண்ணங்கள்! ஆறைவிட ஐந்து பெரிது…!’ ஆகிய கவிதைகள், மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் […]

Read more

சத்யஜித் ரே வாழ்வும் வழியும்

சத்யஜித் ரே வாழ்வும் வழியும், வீ.பா.கணேசன், விகடன் பிரசுரம், விலை 100ரூ. இந்திய சினிமா உலகின் அசைக்க முடியாத மனிதர் பிதாமகன், பால்கே. வங்கத்து மக்களின் வாழ்க்கை வரலாற்றை இலக்கியத்தின் மூலம் சினிமா என்ற சொல்லால் இந்திய மக்களின் கவனத்தை தன்னகத்தே வைத்துக் கொண்டவர் என்றால் அது மிகையாகாது. அந்த வரிசையில் இந்திய சினிமாவில் சத்யஜித் ரேவும் குறிப்பிடத்தக்க மனிதராக இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. தடைபட்ட பயணம் என்ற தான் எழுதிய கதைக்கு திரைக்கதையை எழுதி, அதைத் திரைப்படமாக எடுத்து, இந்தியாவிலேயே முதன் […]

Read more

ஜோதிடக் களஞ்சியம்

ஜோதிடக் களஞ்சியம், கவிஞர் ரா.நக்கீரன், கவிதாலயம், பக்.100, விலை 100ரூ. உங்கள் ஜாதகப் பலன்களை நீங்களே தெரிந்து கொள்ளலாம்’ என்பது, நுாலின் உபதலைப்பு. உதாரணத்திற்கு ஒன்று. ‘ஒருவரது ஜாதகத்தில் சந்திரனும், கேதுவும் சேர்ந்து லக்னத்திற்கு, 2, 6, 8, 12 இடங்களில் காணப்பட்டால், நன்கு ஆராய்ந்து பலன் கூற வேண்டும். ஆயுள் பாவத்தை எட்டாவது இடம் மட்டும் நிர்ணயிப்பதில்லை. 3, 6, 9 இடங்களில் சுக்கிரன் கெட்டிருந்தால், உஷாராகப் பார்க்க வேண்டும். இப்படி, பல பயனுள்ள குறிப்புகள் இந்நுாலில் உள்ளன. நன்றி:தினமலர், 27/5/2018. இந்தப் […]

Read more

ஐரோப்பியத் தத்துவ இயல்

ஐரோப்பியத் தத்துவ இயல், ராகுல் சாங்கிருத்யாயன், தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 124, விலை 105ரூ. இந்திய பயண உலகின் தந்தை’ எனப் புகழப்படும் ராகுல் சாங்கிருத்யாயன், கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் தத்துவங்களையும், ஐரோப்பியத் தத்துவார்த்த சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் மிக விரிவாக எடுத்துக் கூறுகிறார். அதுவே ஐரோப்பியத் தத்துவ அறிஞர்கள் குறித்த பார்வையையும், தத்துவங்களையும், சமயங்களையும் முழுமையாக ஐரோப்பியத் தத்துவ இயல் நுாலில் முன் வைத்துத் தந்துள்ளார். யுனிக் தத்துவவியலாளர்களில் (கி.மு. 600 – 400) வரை ஆரம்பித்து, முதல் […]

Read more

இலக்கியக் கலையும் பாரதி நிலையம்

இலக்கியக் கலையும் பாரதி நிலையம், தொ.மு.சி.ரகுநாதன், வேலா வெளியீட்டகம், பக்.112, விலை85ரூ. ரகுநாதனின் பல படைப்புகள் இன்னும் நுால் வடிவம் பெறாமல் உள்ளன. மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன. இலக்கியம் பற்றியும், பாரதி பற்றியும் நுாலாசிரியர் கொண்டிருந்த முக்கிய மதிப்பீடுகள் இடம்பெற்றுள்ளன. ‘பஞ்சலட்சணம், இலக்கியப் பரம்பரை, வள்ளுவமும் வாழ்வும், பாரதி பாடல்களால் தமிழர் அடையும் பயன், உலக மொழிகளில் மகாகவியின் நுால்கள் பிரசுரம்’ உள்ளிட்ட கட்டுரைகள், இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கின்றன. நன்றி:தினமலர், 27/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

ஐங்குறு நாவல்கள்

ஐங்குறு நாவல்கள், சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், பக்.120, விலை 100ரூ. சங்க கால சோழ மன்னனை மையப்படுத்தி, அந்த காலத்தில் நிலவிய வாழ்க்கை சூழலையும், மொழி நடையையும் மனதில் இருத்தி எழுதப்பட்டுள்ளது. ‘விடியல்’ என்ற குறுநாவல், ஈழத் தமிழர்களின் துயர வாழ்வை உணர்த்தி நம்மை கண்ணீர் சிந்த வைக்கிறது. பல்வகை கருப்பொருட்கள், காலச்சூழல்கள், மனிதர்கள் உள்ளிட்டவை அடங்கிய வண்ணக் களஞ்சியமாகத் திகழ்கிறது இந்நுால். நன்றி:தினமலர், 27/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

குழந்தைகளும் குட்டிகளும்

குழந்தைகளும் குட்டிகளும், ஓல்கா பெரோவ்ஸ்கயா, ருக்மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 260, விலை 180ரூ. ஓல்கா, சோன்யா, யூலியா, நத்தாஷா ஆகிய நான்கு சகோதரிகள், காட்டில் வாழக்கூடிய புலி, ஓநாய், நரி உள்ளிட்ட கொடிய விலங்குக் குட்டிகளை வீட்டில் வளர்க்கின்றனர். அவற்றுக்கு உணவளிப்பதும், குதுாகலத்துடன் விளையாடுவதும், அன்பு செலுத்துவதும் என, ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க பரவசமும், மகிழ்ச்சியும், திகிலும், துயரமும், ஆர்வமும் மாறி மாறி ஆட்கொள்வதை உணர முடிகிறது. நன்றி:தினமலர், 27/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்

பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர், இரா.சம்பத், சாகித்திய அகாடமி, பக். 238, விலை 180ரூ. சித்த மருத்துவப் பரம்பரையில் தோன்றிய காத்தவராயன், அயராத சமூக மேம்பாட்டுப் பணிகளால் அயோத்திதாசப் பண்டிதரானவர். அவரது தமிழ் ஆளுமையின் பன்முகப் பரிமாணங்களை ஒன்பது கட்டுரைகள் வாயிலாகப் பதிவு செய்யும் இந்நுாலை சாகித்திய அகாதெமிக்காகத் தொகுத்திருப்பவர் இரா.சம்பத். பண்டிதரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றோடு, அவரது தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், பண்பாட்டுச் சடங்குகளுக்கான விளக்கங்கள், உழைப்பவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் எனும் கொள்கை, மக்களுக்கான இலக்கிய நோக்கு போன்றவை தரப்பட்டுள்ளன. நிலம், […]

Read more

வாழ்வியல் கதைகள் 100

வாழ்வியல் கதைகள் 100, கவிஞர் சி.ஸ்ரீரங்கம், மணிமேகலை பிரசுரம், பக்.142, விலை 90ரூ. இந்நுாலில் உள்ள கதைகளில் இடம்பெற்ற மாந்தர்கள் இருவர் பேசுவதை, தாமே பேசுவது போன்ற புது உத்தியை ஆசிரியர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. ‘வீடு, பணிவு, வாடகை, ஆட்டோ, செல்லம், சாதுர்யம், புத்திசாலி, அப்படி இப்படி, போட்டோ, சிம்பிள், தீபாவளி, சொல்வதற்கு ஒன்றும் இல்லை’ உள்ளிட்ட கதைகள், இன்றைய சமுதாயத்திற்கு பாடம் கற்பிப்பதாக உள்ளன. நன்றி: தினமலர்,13/5/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026733.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more
1 89 90 91 92 93 240