கம்பர் வைணவநெறி

கம்பர் வைணவநெறி, பாவலர் மணிசித்தன், திருவரசு புத்தக நிலையம், விலை 80ரூ. பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப்பட்ட, இந்நூலாசிரியர் சிறந்த தமிழ் அறிஞர். இவர் கம்பர் குறித்தும், வைணவம் குறித்தும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக, இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில், 11 கட்டுரைகள் உள்ளன. ஒரு குரங்கை, கம்பன் கண்ட மனிதனாக கூறுவதும் (பக். 3), கண்ணனைச் சரயு ஆற்று ஓட்டத்தில் காண வைப்பதும் (பக். 12), நம்மாழ்வார் பிரபந்தங்களை தழுவிக் கொள்ளும் கம்பரின் பாடல்களை விளக்குவதும் (பக். 23), சிவபெருமானின் பெருமைகளை விளக்கும், கம்பரின் பாடல்களைக் […]

Read more

சித்தர் பாடல்கள் பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்கள்,

சித்தர் பாடல்கள் பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்கள், புலவர் அடியன்மணிவாசகன், சங்கர் பதிப்பகம், விலை 240ரூ. பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்களையும், அவற்றுக்கான உரை விளக்கமும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்ட நூல். ஒவ்வொரு பாடல்களிலும் பொதிந்துள்ள இன்பத்தை நாம் பாடல்களை படிப்பதன் மூலம் அனுபவிக்க முடியும். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- தேடல், எஸ். கண்ணன், திருவரசு புத்தக நிலையம், விலை 80ரூ. அனைவருக்கும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்ட 23 சிறுகதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Read more

நியாயமா இது நியாயமா

நியாயமா இது நியாயமா, முனைவர் கமல.செல்வராஜ், காவ்யா, விலை 200ரூ. கல்வியின் நிலை, சமுதாய அமைப்புகள், அரசியல், பண்பாடு, கல்வி ஸ்தாபனங்கள், மதம் எனப் பல்வேறு பொருட்களைக் குறித்து அவர் ஆராய்ந்த கருத்துகளின் கருவூலமாக இந்த நூல் திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —- சாயி தரிசனம், தெ. ஈஸ்வரன், திருவரசு புத்தக நிலையம், விலை 100ரூ. ஸ்ரீ சத்திய சாயி பகவான் நேரில் தரிசித்த உணர்வை, இந்த நூலை படிப்பதன் மூலம் அனைவரும் பெற முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.

Read more

கலாம் அடிச்சுவட்டில்,

கலாம் அடிச்சுவட்டில், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், விலை 150ரூ. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன், நூலாசிரியர் சந்திப்புகள், கடிதத் தொடர்புகள், வாழ்க்கை பற்றிய புதுவிபரங்கள், சுய அனுபவம் சார்ந்த தகவல்களை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயன் தரும் வகையில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/6/2016.   —- விதவை என்பதால் வீழ்வேன் என்று நினைத்தாயோ?, வி. ஷீலாமணி, மணிமேகலைப் பிரசுரம், விலை 70ரூ. தலைப்பிலேயே புரட்சிரமான கருத்து ஒலிக்கிறது. இந்த புத்தகத்தில் உள்ள 21 சிறுகதைகளும் நல்ல கருத்துக்களை வலியுறுத்துகின்றன. […]

Read more

மோகனம்

மோகனம், தொகுப்பாசிரியர் பேராசிரியர் நிர்மலா மோகன், திருவரசு புத்தக நிலையம், பக். 498, விலை 300ரூ. பேராசிரியர் இரா.மோகனின் முதல் நூல் தொடங்கி அண்மை நூல் வரையிலான படைப்புகள் குறித்த ஆவணமாக இந்நூலைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். பேரா. இரா. மோகனின் படைப்பாளுமை இந்நூல் வழி பதிவு செய்திருப்பது சிறப்பான முயற்சி. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/4/2016.   —- ஜான்சிராணி, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சுவாமிமலை பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. வீரமங்கை ஜான்சிராணியின் வாழ்க்கை மூலம் ஒவ்வொரு பெண்ணும் […]

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், தொகுப்பு முனைவர் இரா. மோகன், திருவரசு புத்தக நிலையம், விலை 180ரூ. வெறும் உணர்வுகள் – வெறும் வார்த்தைகள் என்ற நிலைகளைக் கடந்து தமிழுக்கும், வாழ்வியலுக்கும் புதிய பரிமாணங்கள் கொடுக்கும் படைப்புகளாக இந்த ‘இலக்கிய அமுதம்’ தொகுக்கப்பட்டிருக்கின்றன. மனித குலத்திற்கு இலக்கினை இயம்பி, அவன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கான வழிமுறையினை – வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கான வாழும் நெறியினை எடுத்துரைப்பதால் இலக்கியத்தையும் இவ்வரிசையில் ‘அமுதம்’ எனச் சுட்டுவது சாலப் பொருந்தும் வகையில் 30 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மனித […]

Read more

ஸ்ரீமத் வால்மீகி இராமாயண இரத்தினங்கள்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயண இரத்தினங்கள், டி.எம்.சுந்தரராமன், திருவரசு புத்தக நிலையம், பக். 224, விலை 100ரூ. இந்திய திருநாட்டின் இரு கண்களாக ராமாயணம், மகாபாரதம் என்ற இரு இதிகாசங்கள் விளங்குகின்றன. வால்மீகியின் ராமாயணத்தில், முத்தான சில பகுதிகளை, இந்த நூல் தருகிறது. பரதனுக்கு ராமன் சொன்ன அறிவுரைகள், இன்றைக்கும் பொருந்துவதாக இருப்பதும் (பக். 10), நிதிக்குவியல் போன்ற நீதிக் கருத்துகளும் (பக். 13-39), மகாவிஷ்ணுவிற்கே சாபம் கிடைத்ததும் (பக். 64), வால்மீகி ராமாயணத்தில் வரும் பல பழமொழிகளும் (பக். 87 -93), எக்காலத்திற்கும் பொருந்தக் […]

Read more

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு, வெர்சோ பேஜஸ் வெளியீடு, புதுச்சேரி, விலை 200ரூ. 1979-ம் ஆண்டு புதுச்சேரியை தமிழ் நாட்டோடு இணைக்க, அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் முடிவு செய்தார். இது அங்குள்ள மக்களின் உணர்வைக் கிளறி விட்டது. குடியரசு தினம் தொடங்கி 10 நாட்கள் புதுச்சேரி போராட்டக் கனமானது. இந்த நூலில், அந்த நிகழ்வுகளைப் பத்திரிகையாளர் பி.என்.எ ஸ். பாண்டியன் பதிவு செய்துள்ளார். இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தோடு, புதுச்சேரியின் பிரதேச வரலாறு மற்றும் அரசியல் வரலாற்றில் நடந்த பல்வேறு வெளிவராத சுவாரசியமான சம்பவங்களையும் அழகுற விவரிக்கிறார். […]

Read more

எங்கெங்கு காணினும் அறிவியல்

எங்கெங்கு காணினும் அறிவியல், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 128, விலை 60ரூ. நாற்பது அறிவியல் தகவல்களை உள்ளடக்கிய தொகுப்பு இந்நூல். புதுப்புது அரிய அறிவியல் கண்டுபிடிப்புகள், சுவாரசியமான தகவல்கள். ஜாவாத் துவில் கி.பி. 1891 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய இனத்தை அடையாளம் காட்டுகிறதாம். இதனை பித்திக்காந்த்ரோப்பஸ் எரக்டஸ் என்கின்றனர் மானிடவியலாளர். ஜாவா மனிதனும், பீப்கிங் மனிதனும் ஒரே மரபுடையவர்கள். இவ்வினத்தினை இன்றைய மங்கோலாய்டு என்று கூறலாம் என்ற தகவல்களை இந்திய […]

Read more

திருக்குறள் பன்முக உரை

திருக்குறள் பன்முக உரை, சா. டேவிட் பிரதாப்சிங், திருவரசு புத்தக நிலையம், சென்னை, விலை 300ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு உள்பொருளைத் தேடும் பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆளுக்கு ஓர் உரை, நாளுக்கு ஓர் உரை என்று விரிவடைந்து செல்கிறது. அந்த வகையில் ஆங்கிலப் பேராசிரியர் சா. டேவிட் பிரதாப்சிங், திருக்குறளுக்கு எழுதியுள்ள இந்த பன்முக உரை தமிழர்கள் இன்முகங்காட்டி வரவேற்கத்தக்க இனிய உரை. ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு, பொழிப்புரை, பதவுரை, அதோடு கவிதை நடையில் ஒரு வரி உரை. பின்னிணைப்பில் திருக்குறளோடு […]

Read more
1 2 3 4