நான் சுவாசிக்கும் சிவாஜி

நான் சுவாசிக்கும் சிவாஜி, ஒய். ஜீ. மஹேந்திரா, கண்ணதாசன் பதிப்பகம், பக். 192, விலை 120ரூ. ரசிகர்கள் பார்வையில், சிவாஜியை பார்ப்பது ஒரு பரிமாணம். அவரை சந்தித்தவர்கள் பார்வையில் அவரை பார்ப்பது, வேறொரு பரிமாணம். அவருடன் நெருங்கி பழகிய குடும்ப நண்பர், சிவாஜியுடன், 33 படங்களில் நடித்தவர் என்ற முறையில் நூலாசிரியரின் எழுத்தில் நாம் பார்க்கும், சிவாஜியோ, முப்பரிமாணமாக, மனதுள் விரிகிறார். பொதுவாக சிவாஜியின் நடிப்பை வியந்திருக்கும் ரசிகர்களுக்கு, அவர் நடிப்பில் காட்டிய நுணுக்கங்களையும், மேதைமைகளையும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நூலாசிரியர் விவரிக்கையில், அட, ஆமாம்ல […]

Read more

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்(சமூக நாவல்), தஞ்சை செல்வன், திருவரசு புத்தக நிலையம், சென்னை, விலை 150ரூ. ஒரு முழுமையான திரைப்படத்திற்கு தேவைப்படும் குடும்ப நிகழ்வுகள், காதல், வீரம், தியாகம், சோகம், அரசியல் செல்வாக்கும், பணபலமும் நிறைந்த ஆதிக்க சக்தி, இறுதியாக சுப நிகழ்வுகள் என்று அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு சமூக நாவல். கதாநாயகி பூவரசி ஒரு டாக்டர். தன்னையும், உடன்பிறப்புகளையும் தவிக்க விட்டுவிட்டு பெற்றோர் மறைந்து விடுவதால் அவர்களை ஆளாக்க தன்னை தியாகம் செய்கிறாள். அவளை தன் வலையில் சிக்க வைக்க முயற்சிக்கிறான் […]

Read more

அறிவியல் போற்றுதம்

அறிவியல் போற்றுதம், நெல்லை சு.முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 268, விலை 100ரூ. தினமணி நாளிதழில் நூலாசிரியர் நெல்லை சு.முத்து எழுதி வெளியான அறிவியல் தொடர்பான கட்டுரைகளில் 27 கட்டுரைகளைத் தொகுத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் விண்ணில் செலுத்திய விண்கலன்கள், ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள், வானிலை ஆய்வூர்திகள் என சகல விஷயங்களையும், அதற்கான காரண காரியங்களையும் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. ஒருபுறம் சாதனைகளைப் பட்டியலிடும் நூலாசிரியர், மறுபுறம் அதனால் விளைந்த தீமைகளையும் விவரிக்கத் […]

Read more

பெயரில்லாத கதை

பெயரில்லாத கதை, ஆ. மாதவன், தொகுப்பாசிரியர் நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 256, விலை 160ரூ. முப்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கண்டெடுத்த கதை என்ற குறிப்புடன் வெளியாகியுள்ள அழுகை சிறுகதை. கூர்மையான உத்தியுடன் கூடிய படைப்பு.  இக்கதையின் நாயகி அடிக்கடி அழுது உணர்ச்சி வசப்படுகிறாள். ஒரு மயக்கமான சூழலில் அவள் தன் வசமிழக்கிறாள். தன் பலவீனம் பயன்படுத்தப்பட்டதை அவள் உணர்ந்தாளா என்பது வாசகர்களின் யூகத்துக்கு விடப்பட்டுள்ளது. வாழ்வு சார்ந்த இருண்மை ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள படைப்பு. உரையாடல் […]

Read more

விண்வெளி நாட்குறிப்புகள்

விண்வெளி நாட்குறிப்புகள், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 184, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-6.html வான்வெளி கன்னங்கரேல் என்று மிக, மிக இருட்டாகத் தெரிகிறது. பூமியோ நீல நிறத்தில் அழகாய் இருக்கிறது விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதனான யூரி காகரின் வார்த்தைகள்தான் இவை. அவர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட 1961, ஏப்ரல் 12 என்ற இந்த நாள் விண்வெளித் துறையில் இன்றளவும் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இதே நாளில் விண்வெளி […]

Read more

பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்கள்

பிரபலமானவர்களிள் வெற்றி ரகசியங்கள், ஜி. மீனாட்சி, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 152, விலை 100ரூ. பிரபலங்கள் யார்? அந்த நிலையை அடைய அவர்கள் கடந்து வந்த பாதைதான் என்ன? பிரபலமானால் மட்டும் போதுமா? என்பது தொடர்பாக பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ள 25 பேரை நேரடியாகச் சந்தித்து எடுக்கப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பு. முதலாவது கட்டுரை பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பற்றியது, தான் இன்று பிரபலமானாலும், சாதி சங்கங்கள், கட்சிகளிலோ சேராதே, படிப்பு, திறமையில் உன்னை விட உயர்வான இடத்தில் இருக்கிறவர்களைப் பார். பண […]

Read more

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம், தஞ்சை செல்வன், திருவரசு புத்தக நிலையம், பக். 408, விலை 150ரூ. நாவலின் கதாநாயகி பூவரசி எழுந்து, வராந்தாவின் பக்கம் போய் நின்று, வானத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் மேல் பார்வையைப் பதிக்கிறாள். இந்த அழகான நட்சத்திரக் கூட்டத்திற்கு இடையே உலா வரும் பூமிப்பந்தின் மேல் வசிக்கும் மனிதர்களுக்கு, இப்படியெல்லாம்கூட துன்பங்கள் வருமா? என்று யோசிக்கிறாள் (பக். 203). மிகவும் நல்லவளான பூவரசிக்கு பல சோதனைகள். அவளை தன் மோச வலையில் சிக்க வைக்க முயல்கிறான் ஒரு தீயவன், கடைசியில் […]

Read more

நீங்களும் சிகரம் தொடலாம்

நீங்களும் சிகரம் தொடலாம், இளசை சுந்தரம், நேசம் பதிப்பகம், 9, ஜி. ஏ. ரோடு, சென்னை 21, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-206-9.html அனைத்து மனிதனும் தலைசிறந்த மனிதனாக உருவாக வேண்டும். அதற்கு தன்னம்பிக்கையே ஆதாரம் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலில், உழைப்பு, வாய்ப்பு, நிர்வாகத்திறன், மனித நேயம் உட்பட 35 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. வீழ்வதில் தவறில்லை. வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. மண்ணில் விழுந்த விதை தண்ணீர் கிடைத்ததும் முளைப்பதுபோல, உங்கள் […]

Read more

சேரன் குலக்கொடி

சேரன் குலக்கொடி, கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், சென்னை 108, பக். 572, விலை 425ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-2.html தமிழர் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்டுள்ள வரலாற்றுப் புதினம். இசையும், நாட்டியக் கலை நுணுக்கங்களும் இடம் பெற்றுள்ள இந்த நாவல், பண்டைய தமிழக வரலாற்றை நம் கண் முன் நிறுத்துகிறது. வானவன் வஞ்சி, மீனவன் மோகூர் ஆகிய இரு காண்டங்களைக் கொண்டுள்ள இந்த படைப்பு 1972இல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நாவல் என்பது […]

Read more

திரையுலகப் பிரபலங்கள் 1

திரையுலகப் பிரபலங்கள் 1, ஏஎல். எஸ். வீரய்யா, திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-816-1.html சுமார் 50 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் அனுபவம் பெற்ற இந்நூலாசிரியர், தமிழகத்தில் பல வெற்றிப் படங்களுக்குத் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியவர். இவர் கவிஞர் கண்ணதாசனின் பாசறையில் உருவானதால், எளிய தமிழ் நடையில் நாடகம் மற்றும் சினிமா துறைகள் குறித்த நூல்களை எழுதும் எழுத்தாளராகவும் பரிணமிக்கிறார். சினிமா துறைக்குப் புதிதாக வருபவர்களுக்கும் […]

Read more
1 2 3 4