உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?

உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?, உருவாக்கம் பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம், தமிழில் டி.கே.ரகுநாதன், அடையாளம் பதிப்பகம், விலை 40ரூ. நாம் அன்றாடம் விரும்பி அருந்தும் பானம் காபி. அதைக் குடிப்பது பொதுப் பழக்கமாகவும் நிர்பந்தமாகவும் ஆகியிருக்கிறது. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த நூல் நீங்கள் அருந்தும் ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு இருக்கிறது என்பதை ஆய்வுபூர்வமாக விவரிக்கிறது.‘ நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன்

அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன், த.வி.வெங்கடேஸ்வரன், சி.இ.கருணாகரன், வ.சேதுராமன், ப.கு.ராஜன், அறிவியல் வெளியீடு, விலை 35ரூ. அறிவியல் மக்களுக்கே என்ற முழக்கத்துடன் செயல்பட்டுவரும் தமிழ்நாட்டு அறிவியல் இயக்கத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது இப்புத்தகம். ஹைட்ரோகார்பன் திட்டத்தைப் பற்றிய பல்வேறு அம்சங்களை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், அறிவியலாளர்களைக் கொண்டு, அறிவியல் பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். அரசியல் கலக்காமல், கேள்வி பதில் வடிவத்தில், உள்ளதை உள்ளபடி தெரிவிப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பட்டினிப் புரட்சி

பட்டினிப் புரட்சி, பரிதி, விடியல் பதிப்பகம், விலை 450ரூ. புத்தகத்தின் பெயரைப் பார்த்தால் பட்டினியால் வாடும் மனிதர்களைப் பற்றியது என்ற எண்ணம் வருவது இயல்பு. ஆனால், உண்மையில் சமூகம், சுற்றுச்சூழல், உயிரியல் எனப் பல துறைகளில் இன்றிருக்கும் பிரச்சினைகளையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அபத்தங்களையும் பற்றிப் பேசுகிறது இந்நூல். நம்முடன் வாழும் மனிதர்களில் மூன்றில் ஒருவர் முறையான உணவின்றித் தவிப்பதற்குக் காரணம், தாம் வாழும் சமூக அமைப்புதான் என்பதை அதிரும்படி உணர வைக்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பெண்களும் சோஷலிஸமும்

பெண்களும் சோஷலிஸமும், ஆகஸ்டு பேபல், தமிழில் பேரா.ஹேமா, பாரதி புத்தகாலயம், விலை 380ரூ. நம் சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகள் நடந்தபடி இருக்கின்றன. இத்தகைய பிரச்சினைகளில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது, பெண்கள் குறித்த விவாதம். பாலினச் சமத்துவம் இல்லாமல் மனித குலத்துககான விடுதலை சாத்தியமில்லை என இந்தப் புத்தகம் உரக்கச் சொல்கிறது. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

மெய்ப்பொய்கை

மெய்ப்பொய்கை, ருச்சிரா குப்தா, தமிழில் சத்தியப் பிரியன், கிழக்கு, விலை 300ரூ. இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளரான பிரேம்சந்த், மன்ட்டோ, புதுமைப்பித்தன், அம்ருதா ப்ரீதம், இஸ்மத் சுக்தாய், கமலா தாஸ் எனப் பலருடைய சிறுகதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களுடைய துயர்மிகு வாழ்வையும் இந்நூல் பதிவு செய்கிறது. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

வலி

வலி, அமரந்த்தா, சந்தியா பதிப்பகம், விலை 110ரூ. பல்வேறு பெண்களின் வாழ்க்கையைச் சொல்கிறது இந்நூல். இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கதைகள், நம்முடன் சக பயணியாக வரும் வெவ்வேறு தளங்களில் உள்ள பெண்களின் வாழ்க்கையை மிக நுட்பமாகச் சொல்கின்றன. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

எங்கிருந்து தொடங்குவது

எங்கிருந்து தொடங்குவது, வெண்ணிலா, அகநி, விலை 100ரூ. ஆணும் பெண்ணும் கணவன் மனைவி ஆனவுடன் இருவருக்கும் உண்டாகும் இடைவெளி, பகைமை, குழந்தைகளை வளர்க்கும் விதம், குடும்பத்துக்குள் சாதியின் நிலை, பாலின வேலைப் பாகுபாடுகள், உறவினர்களுக்காக வேறுபாடுகளை பொறுத்துக்கொள்ளும் இயலாமை ஆகியவை தனித்தனி அம்சங்களாக இந்தப் புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

தடைகள் தாண்டிப் பாயும் நதி

தடைகள் தாண்டிப் பாயும் நதி, பிருந்தா சீனிவாசன், தி இந்து, விலை 120ரூ. இந்தச் சமூகம் பெண்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தகர்த்து வெளியேறும் பெண்கள் குறித்தும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வாழும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

சங்கப் பெண் கவிதைகள்

சங்கப் பெண் கவிதைகள், சக்தி ஜோதி, சந்தியா பதிப்பகம், விலை 400ரூ. சங்கப் பெண் புலவர்கள் 45 பேர் எழுதிய கவிதைகளை வரலாற்றுப் பின்புலத்தோடும் இன்றைய நோக்கிலிருந்தும் ஆராய்ந்து பார்க்க உதவுகிறது இந்நூல். நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை, சின்ரன், தமிழில் ஜி.விஜயபத்மா, எதிர் வெளியீடு, விலை 280ரூ. பாலியல் வன்புணர்வு, காதல் என சீனாவில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளை குறித்து வானொலி தொகுப்பாளினியான சின்ரன் தன் நிகழ்ச்சியின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சீனப் பெண்களின் நிலை குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல் இது. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more
1 12 13 14 15 16 36