ஈரான்

ஈரான் (குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம்), மர்ஜானே சத்ரபி, விடியல் பதிப்பகம், விலை 100ரூ. உலகப் புகழ்பெற்ற படைப்பாளியான மர்ஜானே சத்ரபியின் கிராஃபிக் நாவல்களான இந்த இரண்டுமே திரைப்படங்களாகவும் வந்துள்ளன. மொழிபெயர்ப்பில் ஓரிரு இடர்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமான கலைப்படைப்பு என்ற பார்வையில், தமிழில் நீங்கா இடம்பிடிக்கும் புத்தகங்கள் இவை. http://இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் – 044-49595818 நன்றி: தி இந்து, 22/1/2018.

Read more

வேங்கடம் முதல் குமரி வரை

வேங்கடம் முதல் குமரி வரை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், சந்தியா பதிப்பகம், விலை 600ரூ. தமிழகக் கோயில்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்களில் ஒன்று, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் ‘வேங்கடம் முதல் குமரி வரை’. பாலாற்றின் மருங்கிலே, பொன்னியின் மடியிலே,காவிரிக் கரையிலே, பொருநைத் துறையிலே என்ற தலைப்புகளில் ஐந்து பாகங்களாக இந்நூலில் வெளிவந்தது. வடநாட்டுக் கோயில்களைப் பற்றி, ‘வடவேங்கடத்துக்கு அப்பால்’ என்றொரு நூலையும் எழுதியிருக்கிறார் பாஸ்கரத் தொண்டைமான். வேங்கடம் முதல் குமரி வரையின் ஐந்து பாகங்களையும் ஒரே தொகுப்பாக சந்தியா பதிப்பகம் […]

Read more

100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள், தொகுப்பு எஸ்.ராமகிருஷ்ணன், டிஸ்கவரி புக் பேலஸ், இரண்டு பாகங்கள் 800ரூ. தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் தனது வாசகர்களுக்குப் பரிந்துரைத்த 100 முக்கியமான சிறுகதைகளின் தொகுப்பு இது. நூறாண்டுகளைக் கடந்த தமிழ்ச் சிறுகதையின் உச்சங்களைப் பட்டியலுக்குள் அடக்கிவிடமுடியாதுதான். ஆனாலும், புதுமைப்பித்தன் தொடங்கி சந்திரா வரைக்கும் தமிழ்ச் சிறுகதை கடந்து வந்திருக்கும் பாதையைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். சிறுகதையின் காதலர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் சிறுகதை எழுத விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு அருமையான வழிகாட்டி. நன்றி: தி இந்து, […]

Read more

நம் காலத்து நாயர்கள்

நம் காலத்து நாயர்கள், சைபர் சிம்மன், புதிய தலைமுறை பதிப்பகம், விலை 140ரூ. புதிய உலகம் படைத்தவர்கள்! நம்முடைய வசிப்பிடமும் பணியிடமும்தான் நம் உலகம் என்ற நிலையிலிருந்து புதிய அன்பர்களையும், ஏகப்பட்ட தகவல்களையும் இணைய உலகம் இன்று சாத்தியமாக்கிவருகிறது. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க் டு – இன் என சர்வதேசத் தொலைதொடர்புக்கு பல வலைத்தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பயனாளிகளாக நாம் இருக்கிறோம். ஆனால் அவற்றை உருவாக்கியவர்கள் யார், அதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், எதிர்கொண்ட சவால்கள் நமக்குத் தெரியாது. இவை அனைத்தும் […]

Read more

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி, பேரா.க.மணி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், விலை 100ரூ. ஐன்ஸ்டைனைப் புரிந்துகொள்ளலாம் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு வெளியாகி 100 ஆண்டுகள் கடந்த பின்னரும் நவீன இயற்பியலில் இன்று நடக்கும் ஆய்வுகளுக்கும், பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்குமான கருவியாகத் திகழ்கிறது. படித்தவர்களுக்குக்கூட எளிதில் புரியாதென்று கூறப்படும் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டை எளிய முறையில் விளக்கும் சவாலை இந்த நூல் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. ஆங்கிலத்தில் புகழ்பெற்ற மார்டின் கார்ட்னர் எழுதிய ‘ரிலேட்டிவிட்டி சிம்ப்ளி எக்ஸ்ப்ளெய்ண்ட்’ நூலின் மொழிபெயர்ப்பு இது. தூரம், காலம், அளவு ஆகியவை […]

Read more

கல்வி ஓர் அரசியல்

கல்வி ஓர் அரசியல்,வே. வசந்திதேவி, பாரதி புத்தகாலயம், விலை 180ரூ. எவ்வகையான கல்வி தேவை? மானுட விடுதலைக்கான சக்தியாக இயங்குவதைவிடச் சாதாரணர்களை அடிமைப்படுத்தும் வழிமுறையாகக் கல்வி இந்தியச் சூழலில் மாற்றப்பட்டிருப்பதை ஆழமாக பேராசிரியர் வசந்திதேவியின் இப்புத்தகம் விளக்குகிறது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எவ்வகையான கல்வி தேவை, அதில் தொழிற்கல்வியின் பங்கு என்ன, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகளின் திறமைகளுக்கும் ஆற்றலுக்கும் நம்முடைய வகுப்பறைகளும் பாடத்திட்டங்களும் கற்பித்தல் முறைகளும் எம்மாதிரியான முன்னுரிமை அளிக்க வேண்டும், தமிழ்நாட்டில் பயிற்றுமொழி ஏன் தமிழாக இருக்க வேண்டும், மாணவப் பேரவைகள் மூலம் […]

Read more

புதிய கல்விக் கொள்கை அபத்தங்களும் ஆபத்துகளும்

புதிய கல்விக் கொள்கை அபத்தங்களும் ஆபத்துகளும், அ.மார்க்ஸ், பாரதி புத்தகாலயம், விலை 50ரூ. தோலுரிக்கும் முயற்சி! இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்திருக்கும் மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகள் ஆகியவற்றை முற்றிலுமாக இந்திய கல்வித் திட்டத்திலிருந்து அப்புறப்படுத்த நடைபெறும் சதிகளை தோலுரித்து இப்புத்தகத்தில் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் அ. மார்க்ஸ். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2016-ன் மீது கடுமையான விமர்சனத்தை அவர் இப்புத்தகத்தின் வழியாக முன்வைத்திருக்கிறார். உலகமயம், வகுப்பு வாதம் இரண்டையும் மறைபொருளாக கொண்டு புதிய கல்வித் திட்டம் செதுக்கப்படுவதால் அது குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடமும் […]

Read more

வாழ்க்கைப் பாதை ஒரு கல்விக் காவியம்

வாழ்க்கைப் பாதை ஒரு கல்விக் காவியம், ஏ.எஸ்.மகரெங்கோ, தமிழில் பொன்னீலன், பாரதி புத்தகாலயம், விலை பாகம் ஒன்று 300ரூ, பாகம் இரண்டு 500ரூ. கல்வி என்னும் வெளிச்சம் ரஷ்யக் கல்வியாளரும் நாவலாசிரியருமான ஏ.எஸ்.மகரெங்கோ எழுதிய இந்நூல் சோவியத் கல்வி முறைக்குப் பெரும் பங்களிப்பு செய்த படைப்பாகக் கருதப்படுகிறது. உள்நாட்டுச் சண்டைகள், பஞ்சம், தொற்றுநோய் சூழலில் அகதிக் குழந்தைகளுக்குக் கல்வியளித்து அவர்களது மோசமான வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த மகரெங்கோ தனது அனுபவங்களைப் பின்னணியாக வைத்து எழுதிய இந்நூல் நாவலாசிரியர் பொன்னீலனால் மொழிபெயர்க்கப்பட்டது. எழுத்தாளர் […]

Read more

தேசிய கல்விக் கொள்கை 2016 – மகராஜாவின் புதிய ஆடை

தேசிய கல்விக் கொள்கை 2016 – மகராஜாவின் புதிய ஆடை, தொகுப்பு தேனி சுந்தர், அறிவியல் வெளியீடு, விலை 40ரூ. புதிய கல்விக் கொள்கை அவசியமா? இந்திய அரசின் ‘தேசிய கல்விக் கொள்கை 2016’ பற்றிய தமிழ்நாட்டின் கல்வியாளர்களின் பார்வையை விளக்குகிறது இந்நூல். ‘விழுது’ – புதிய கல்விக் கொள்கைச் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார் தேனி சுந்தர். கல்வியாளர்கள் முனைவர் ச.மாடசாமி, எஸ்.எஸ்.இராஜகோபாலான், பேரா. ஆர்.ராமானுஜம், பேரா.என்.மணி, பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் இந்தப் புத்தகத்தில் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு […]

Read more

ஆண்ட்ராய்டின் கதை

ஆண்ட்ராய்டின் கதை, ஷான், யாவரும் பதிப்பகம், விலை 70ரூ. எளிய தமிழில் தொழில்நுட்பக் கதை இன்று நாம் பயன்படுத்தும ஸ்மார்ட் ஃபோன், தொலைபேசி செய்த வேலையை மட்டுமல்லாமல், கால்குலேட்டர், கணினி, இசைக்கருவி, ரேடியோ, டார்ச், கேமரா, வீடியோ கேம்ஸ் இன்னும் ஏகப்பட்ட சாதனங்களின் அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது. அதிலும் ஆண்ட்ராய்ட் மென்பொருளின் பயன்பாட்டால் ஸ்மார்ட்ஃபோன் அதி நவீன தொழில்நுட்ப அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த ஆண்ட்ராய்டின் கதை ஆங்கிலத்தில் உள்ளதே தவிர தமிழில் (எளிய) இல்லை. அந்தக் குறையைப் போக்க ஆண்ட்ராய்ட் மென்பொருளின் வரலாற்றைக் கதைபோல சொல்கிறது […]

Read more
1 11 12 13 14 15 36